மஞ்ச கலரு சிலாக்க
போட்டுக்க எடுப்பா இருக்கும்
தலைக்கு எண்ணெய்
தடவி படிய சீவிக்கோடா
சுருள் முடிக்கும் அதுக்கும்
ராசா மாதிரி இருப்ப
பாழும் நெத்தியா போகாத
துண்ணூறு வச்சுக்கோ
என்ன புள்ள நீ,
வா வச்சு விடுறேன்
நெத்தி நெறைய!
ஆத்தா மகமாயி
எம்புள்ள நல்லா இருக்கணும்
கை காலெல்லாம் எண்ணெய்
தடவி விடவும் செய்வார் அப்பா!
அம்மா இல்லாத
அப்பாவை பார்த்து கொள்ள
வைத்த செவிலிக்கு எல்லாம்
இது பற்றி தெரியாது
சொல்லவும் நேரமில்லை
எங்களுக்கு
10 comments:
செவிலித் தாய்களிடம் வளரும் இன்றைய குழந்தைகளின் மனதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..
செவிலிகளிடம் சொல்லி பயனில்லை ராகவன்.
சொன்னால் மட்டும் டக்னு கேட்ருவாங்களா. :(
நல்ல ரேடியோ வாங்கிக் கொடுங்க.. கேட்டுகிட்டாவது இருப்பாரு.
நல்லாயிருக்குங்க
ரொம்ப கனமான விஷயம் ராகவன்.
இயலாமையின் எதார்த்தம் கடைசி வரிகளில் சுடுகிறது.
ரொம்ப கனமான விஷயம் ராகவன்.
நல்லாயிருக்கு.
ஆமாம் ராகவன் ..சொல்ல முடியாத நாம் செவிலி ஏற்பாடு செய்கிறோமே அது தான் நம் கையிலாகாதனம் .. என்ன செய்வது காலத்தின் கட்டாயம் ..
மிகவும் உருக்கமானது ராகவன் பாசம்.பௌதிக விதிகளை கேள்விகேட்கிற பாசம். அசத்துறீங்க.தொடர்ந்து அசத்துங்கள்.
ராகவன்... ரொம்ப அழுத்தமா சொல்லிருக்கிங்க....
மீள முடியவில்லை...
ரொம்பப் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை.
//சொல்லவும் நேரமில்லை எங்களுக்கு//
எல்லாம் சொல்லி விடுகிறது இந்த வரிகள்.
Post a Comment