(1 )
அலுவலகத்திற்கு விரையும்
வழியில்
காரை மறித்து காசு கேட்கும்
திருநங்கை இரண்டு நாட்களாக
காணவில்லை
மூன்றாம் நாளில்
ஒரு நாளிதழின்
கழிவிரக்கக் கோடியில்
தனியார் பேரூந்து மோதி
”அழகிய இளம் பெண் மரணம்”
பெட்டிச்செய்தியில் சிரித்த
அவளுக்கு காரணம் இருக்குதானே!
(2 )
தன் பிரிய தோழியிடம்
என்னை அறிமுகப்படுத்தினாள்
’என்னோட அப்பா’ என்று
கேள்வியாய் பார்த்தவளை
ஆமாம் என்று
என் கையைப் பிடித்துக்கொண்டாள்
இவளை என் மணைவிக்கு
எப்படி அறிமுகப்படுத்துவது?
காதலின் மிச்சமென்றா?
(3)
மழை முனைப்புடன்
தொடர் கம்பிகளாய் விழ
எத்தனிக்கிறது
ஒவ்வொரு முறையும்
வீழும் மழையின்
கம்பிச் சரடுகளை பிடித்து
ஏற முற்படுகிறேன்
அறுந்து விழுகிறது
ஒவ்வொரு முறையும்
அயர்ந்து போய்
வேடிக்கை பார்ப்பதோடு
நிறுத்திக் கொள்கிறேன்
4 comments:
மூன்றுமே தனித்தனியாக மிக பிடிச்சிருக்கு ராகவன்.மூன்றிற்க்குள்ளும் தொடர்பற்ற தொடர்பு இருப்பது போல இனம் புரியாத ஒரு புள்ளியில் குவிகிறது.அப்புறம், "அயர்ந்து போய் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்தி கொள்கிறேன்".
eஎல்லாமும் பிடிச்சிருக்கு
அறுந்து விழும் தொடர் கம்பிகள்... நல்ல சிந்தனை. நல்ல கவிதை. வாழ்த்துகள்
//இவளை என் மணைவிக்கு
எப்படி அறிமுகப்படுத்துவது?
காதலின் மிச்சமென்றா?//
கதையாய் உங்களிடம் இதை அறிந்த நினைவு..கவிதையாய் படித்த போது இன்னும் அருமை..
//பெட்டிச்செய்தியில் சிரித்த
அவளுக்கு காரணம் இருக்குதானே!//
காரணம் புரியவில்லை இந்த மூடனுக்கு..
Post a Comment