முன்வழியும்
மரங்களின்
மயிர்க்கற்றைகளை
இழுத்து தாங்கும்
பிளவுபட்ட
கவன்வில் வளைவு
தூக்கணாங்குருவி
கூடுகளின்
தொங்கட்டான்
ஆட்டத்தில்
மேலேறி கீழிறங்கும் பூமி
கிறங்கி சரியும்
பாதைகள்
நடுவகிடு பிளந்து
கோதிச்செல்லும்
விரல்களில்
ஒட்டி வரும்
மகரந்த துகள்கள்
மீண்டும் உற்பவிக்கும்
பெயரறியா வசந்தத்தை
கொங்கைகள்
நடுவே வழியும்
வெள்ளைத் தாவணி
முனை பற்றி
தெப்பம் கட்டும்
மிதக்கும் ஏரி
புணர்ந்த கதை
வட்டவட்டமாய்
லஜ்ஜையின்றி
வளித்து எறிந்த
புகைக்குமிழியில்
வானவில் பூட்டி
மரங்களை
ஏற்றி
மாசு கொல்லும்
மலைமுகடுகள்
மலை உச்சியில்
உயிரை கழற்ற
நின்றவனை
காற்றுப்பைக்குள்
சுவாசம் நிரப்பி
தள்ளி விட்டது
வாழ்க்கைக்குள்
ஒரு வலிய கரம்
4 comments:
அழகு வரிகள் :)
அருமை
நல்லா இருக்கு ராகவன்
ஆம் ராகவன்,இப்படி எதாவது ஒரு கரம்தான் நம்மை எப்பவும் பொதிந்து வைக்கிறது.வெயில்,
.பனி,மூப்பு,பிணியிடமுருந்தும்..
Post a Comment