மலைகள் நெய்யும்
வெள்ளைத்துணி
தறியோட்டச் சத்தமும்
நெய்பவனின் வயிறும்
ஒற்றை சூலி
உடைந்து வழிகிறது
பனிக்குடம்
மிதக்கிறது உயிர்கள்
ஜகத்ரட்சகி
நரைத்த மயிர்
அடங்கா திமிர்
கிழட்டு வேசியின்
காமவெளி
சுவாசப்பை
சுருங்கி விரியும்
நுரையீரல்களில்
பிதுக்கும்
பிராண வாயு
சமுத்ரவெளியில்
பொறுக்கியது
வலமா இடமா
காற்றை நிரப்பி
சத்தமிடும் வெண்சங்கு
தட் தட்டுன்னு குளிச்சா
குணமாகும் கேட்டு
ஹோவென்று
சிரிக்கும் பைத்தியம்
குவளைத் தேநீர்
குடிக்க காத்திருக்கிறேன்
விளிம்பு தெரியாமல்
8 comments:
/////நரைத்த மயிர்
அடங்கா திமிர்
கிழட்டு வேசியின்
காமவெளி //////////
வார்த்தைகளை அள்ளித் தெளித்து இருகிறிர்கள் . மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !
//கிழட்டு வேசியின்
காமவெளி
//
இந்த வரிகள் பொருத்தமாயில்லை என்று நினைக்கிறேன் ராகவன்.. மற்றபடி டிபிகல் ராகவன்
உமதேயான சொற்கள் ராகவன்
//வலமா இடமா
காற்றை நிரப்பி
சத்தமிடும் வெண்சங்கு//
இந்தப் பார்வை நல்லா இருக்கு !
ராகவன், உங்களுக்கு ஒரு விருது தந்துள்ளேன்.
அன்பும், வாழ்த்துக்களும்.
ம்ம்ம் அருமை...
வார்த்தைகளை அள்ளித் தெளித்து இருகிறிர்கள் . மிகவும் அருமையான கவிதை.
அம்மாடி
Hi nice reading your blog
Post a Comment