Friday, August 20, 2010

மினுக்கட்டான்கள்...

இங்கிருந்து பார்த்த போது
அங்கே யாரும் இல்லை
அங்கேயிருந்து பார்த்தாலும்
அஃதே
***
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றும் ஒன்றும் மூன்று
ஒன்றும் ஒன்றும்
ஒன்றுமில்லை
***
ஊன்றுகோல்
ஆணியில் தொங்கியது
தாத்தா உத்தரத்தில்
தொங்கிய பின்
***
பேப்பர் வீசும் பையன்
பேப்பரில் இருந்தான்
இன்னும் பேப்பர் வரலையா
அப்பா திட்டிக்கொண்டே
அலுவலகம் சென்றார்
***
குடையின் மேலே பெய்த
மழைத்துளிகளில்
பூத்துக்கிடக்கிறது குடைக்குள்ளே பூ

***

18 comments:

க ரா said...

மூன்றாவது மட்டும் மனதை பிசைகிறது ராகவன் (:

உயிரோடை said...

எல்லாமே ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து ராக‌வ‌ன்

Anonymous said...

எல்லாம் நல்லா இருக்கு அண்ணா!
//குடைக்குள்ளே பூ //
செம!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்கத் தோன்றும் கவிதைகள்! தலைப்பும் பிடித்திருக்கிறது. வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

சத்ரியன் said...

குடைமேல் ஒட்டியிருக்கும் மழைத்துளியாய்... மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும் வரிகள்.

பனித்துளி சங்கர் said...

////ஊன்றுகோல்
ஆணியில் தொங்கியது
தாத்தா உத்தரத்தில்
தொங்கிய பின் /////////

வார்த்தைகளில் வலியை வீசி செல்கிறது கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பேப்பர் வீசும் பையன்
பேப்பரில் இருந்தான்
இன்னும் பேப்பர் வரலையா
அப்பா திட்டிக்கொண்டே
அலுவலகம் சென்றார்//

:(

rajasundararajan said...

கீழே குடைக்குள் மினுக்கட்டானில் இருந்து மேல்நோக்கி வாசித்துப் போனேனா, இருள்வெறுமை வெறிக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

//ஊன்றுகோல்
ஆணியில் தொங்கியது
தாத்தா உத்தரத்தில்
தொங்கிய பின்///

எல்லாம் நல்லாயிருக்கு. மேலே உள்ள கவிதை அருமையோ அருமை.

sakthi said...

ஊன்றுகோல்
ஆணியில் தொங்கியது
தாத்தா உத்தரத்தில்
தொங்கிய பின்


சொல்ல வார்த்தையில்லை

பா.ராஜாராம் said...

எல்லாமே ரொம்ப நல்லாருக்கு ராகவன்.

Riyas said...

//பேப்பர் வீசும் பையன்
பேப்பரில் இருந்தான்
இன்னும் பேப்பர் வரலையா
அப்பா திட்டிக்கொண்டே
அலுவலகம் சென்றார்//

VERY GOOD LINES.. I IIKE

ஹேமா said...

மூன்றாவது மனதைத் தொட்டது.
ஆனால் எல்லாமே மினுக்கெட்டான்கள்தான் !

ஜெயசீலன் said...

அருமை.... மூன்றாவதுக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

பத்மா said...

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமில்லை---- கனம்

ராசராசசோழன் said...

கவிஞர்களின் கற்பனையே...கற்பனை...என்ன சொல்வது...

Anonymous said...

அனைத்தும் அருமை.. :)

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்...

ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களின் முதல் வருகை எனக்கு சந்தோஷத்தையும், அங்கீகாரத்தையும் தருகிறது...

அன்புடன்
ராகவன்