கடவுளின்
பெருரகசியங்கள்
பொதிந்திருக்கும்
பேழை
என் கையில்
கிடைத்தது
மழுங்கிய
நம்பிக்கைமுனைகளை
கொண்ட சாவிகளுக்கு
நெகிழ மறுக்கும்
துருவேறிய பூட்டுகளால்
கனத்து கிடந்தது
அந்த பேழை
அதன் வேலைப்பாடுகளின்
செரிவில்
வரங்களில் செழித்தவர்களின்
கண்செருகி கிடந்த
முயக்கங்களும் தினவுகளும்
சித்திரங்களாகவும்
பொம்மைகளாகவும்
காணப்பட்டன
இதன் உள்ளறைகளில்
விகசிக்கும்
ரகசியங்களை
பற்றி எதுவும்
தெரியவில்லை இன்றுவரை
நானும் கடவுள் போலவே
என்ன செய்வது என்று தெரியாமல்
வெறுமனே வைத்திருக்கிறேன்
6 comments:
பெங்களூரிலிருந்தாலும், கென்யாவிலிருந்தாலும், இந்தக் குரல் எங்கள் ராகவனின் குரல்தான்.
தூரத்தில் இல்லாமல், மிக அருகில் கேட்கிறது. இந்தக் கவிதைக்குத்தான் எத்தனை மகத்துவம்.
நீங்களே பேழைக்குள் இருப்பவர்தான்! கடவுள்தான் உங்களுக்காக காத்திருக்கிறார்.
:-)))))
மிக அருமையான புதுமையான கவிதை! வாழ்த்துக்கள்!
கடவுள் செய்ய விருப்பமில்லாமல் இருக்கிறார்.
கவிதை நாயகன் செய்ய நினைத்தும் முடியாமல் தவிக்கிறார்.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. :)
கவிதை தூதாகுமோ.ஆகும்.
வலை தூரங்களை விழுங்குமா விழுங்கும்.
தேடும் பொருள் கிட்டும் மட்டும் கனவு திண்பதில்லை.
ராகவன் அந்த சென்னை கனங்களைத்தவறவிட்டுவிட்டேன்.பேருந்துக்குள் ஏறிப்பேருந்தை தவறவிட்ட மனநிலை தான்.
மிக அருமையான கவிதை.
\\நானும் கடவுள் போலவே
என்ன செய்வது என்று தெரியாமல்
வெறுமனே வைத்திருக்கிறேன்\\
அதான் அழகழகா கவிதை செய்கிறீர்களே!
கவிதை அருமையா இருக்கு ராகவன்.
Post a Comment