வீட்டை விற்பதற்காக
வந்திருக்கிறேன்
அம்மாவின் வீடு
அம்மாவின் பழம்புடவைகள்
போல எந்தவித
வெம்மையான நினைவுகளும்
இல்லாத வீடு
வாசலின் முன்னால் வைத்த
செம்பருத்தி பூத்திருந்த
வாசலைக் கடந்து உள்ளே நுழைய
சிறு சாமந்திப்பூக்களும்
அதை ஒட்டிய தென்னைமரமும்
பெரிதாய் கலக்கவில்லை
கொல்லையில் வைத்த
வெள்ளை அரளியும்,
அடுக்கு மல்லிச்செடிகளும்
இன்னும் மீனாம்மாவின்
பராமரிப்பில் முன்போலவே
மாதாமாதம் அனுப்பிவைக்கும்
பணத்தில் அவளுக்குப் போக
வீட்டையும் பார்த்துக் கொண்டாள்
விக்கப்போறியாடா?
அண்ணன் சொல்லுச்சு என்றாள்
அவருக்கு வேலையென்று
வரமுடியாதென்றவுடன்
அண்ணனின் தொந்தரவில்
இங்கிருக்கிறேன் இப்போது
கையெழுத்துப்போட அண்ணனும்
வருவான்
சாயங்காலம் வந்திருந்தான்
ஏன்டி ஆத்துக்கு வரலை என்றான்
ஒன்றும் சொல்லவில்லை
அவன் மனைவியும்
சம்பிரதாயமாய் சிரித்தாள்
வாங்குபவர்கள் வந்திருந்தார்கள்
மீனாம்மா எல்லோருக்கும் காப்பி
கொடுத்தாள், அவளின் பேத்தி
மீனாம்மாவின் முழங்கால்களை கட்டிக் கொண்டு
கூடக்கூட வந்தாள்
பத்திரம் கைமாறியது பணமும்
ஒரு மாதத்தில காலி பண்ணிடுவாங்க
என்றான் அண்ணன்
மீனாம்மா வீட்டையும் என்னையும்
பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்
அவளுக்கும் பேத்திக்கும் அப்போது
வித்யாசம் இருக்கவில்லை
8 comments:
ராகவன்........
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் ...அந்நியன்
நல்ல கவிதை என்பதைவிட பல இடங்களில் வாழ்க்கையே இப்படித்தான் போகிறது.
கடைசி வரிகளில் கண்கலங்கியது மீனா அம்மா மட்டுமல்ல நானும்தான்.
(:
சிறு க(வி)தை!
அருமை..எங்கள் அம்மாவின் வீட்டையும் இப்படித் தான் விற்கப் போகிறோம்!!!
அன்பின் ராகவன்.
வாழ்க்கையின் நகர்வில் இப்படி ஒவ்வொன்றாய் இடமிழந்து போகும்போல. நினைகளை அழிக்கமுடியாதபடி குறுக்கே வரும்கவிதை எப்போதும் சிலாக்கியமனது.
வீடு என்பது வீடு மட்டுமில்லை புரிகிறது ராகவன்
Post a Comment