Tuesday, January 12, 2010

விருப்ப பட்டியல்...

விரும்பி சேர்த்த
பட்டியலில் உன் கவிதைப் புத்தகம்
இல்லாமல் போனது பற்றிய
குறை உன்னை
என்னிடம் அண்ட விடாமல்
செய்கிறது...

நெருங்கி வருகிறேன்
நீ விலகி ஓடுகிறாய்
கையில் அகப்பட்டதை எடுத்து
எறிகிறாய்
ஒரு வித்தைக்காரனின்
சாமர்த்தியத்துடன்
டபாய்க்கிறேன்

உன் கவிதைகளை
நினைவுக்கு கொண்டு வர
முயற்சி செய்கிறேன்
செருக்கு சேர்ந்த
குளத்து நீரில் மீன்களென
மனசின் விரல்களுக்குள்
அகப்படாமல் நழுவுகிறது

அல்லது...

அசையாத இலைகள்
அதன் நடனத்தை எங்கோ
ஒளித்து வைத்தது போல்
கவிதை புலப்படாது
மறைந்திருக்கிறது
உன் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளை
நிறுத்தி வைத்திருக்கிறாய்
சிப்பாய்களென
ஆயுதம் தரித்து உள்ளே
நுழையவொட்டாமல்
தடுத்து விடுகிறது 
சில சமயம்

என்ன செய்வது!!
உன் பட்டியலில்
நான் இல்லாத போது...
நீயும் இல்லாமல் போகிறாய்
அடர் வனத்தில்
சூர்யனாய்...

6 comments:

மாதவராஜ் said...

//செருக்கு சேர்ந்த
குளத்து நீரில் மீன்களென
மனசின் விரல்களுக்குள்
அகப்படாமல் நழுவுகிறது//

இந்த வரிகளில் நின்று கொண்டே இருக்கிறேன். வாழ்க்கையில் இதுமாதிரி எவ்வளவு அகப்படாமல் வித்தை காட்டுகிறது!

sathishsangkavi.blogspot.com said...

//அசையாத இலைகள்
அதன் நடனத்தை எங்கோ
ஒளித்து வைத்தது போல்
கவிதை புலப்படாது
மறைந்திருக்கிறது
உன் கவிதைகளில்//

அழகான வரிகள்...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

na.jothi said...

அருமையா இருக்குங்க

டபாய்க்கிறேன்-

வார்த்தை ஒட்டலை தல

நகருகிறேன்/தப்புகிறேன்/தவிர்க்கிறேன்
இப்படி இருந்தா நல்லா இருக்குமோ

S.A. நவாஸுதீன் said...

///செருக்கு சேர்ந்த
குளத்து நீரில் மீன்களென
மனசின் விரல்களுக்குள்
அகப்படாமல் நழுவுகிறது///

ராகவன் டச். அசத்துறீங்க மக்கா.

///அசையாத இலைகள்
அதன் நடனத்தை எங்கோ
ஒளித்து வைத்தது போல்///

இப்படியெல்லாம் யோசிக்கனும்னா என்ன மக்கா பண்ணனும்.

ப்ரியமுடன் வசந்த் said...

செருக்கு சேர்ந்த
குளத்து நீரில் மீன்களென
மனசின் விரல்களுக்குள்
அகப்படாமல் நழுவுகிறது
//

அருமை சார்..!

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை ராகவன்.ஜோதி சொல்கிற அந்த ஒரு வார்த்தை பொருந்தாமல்தான் இருக்கிறது.