மறுபடியும் நிகழ்ந்து விட்டது
ஒரு மரணம்
குறையும் எண்ணிக்கைகளில்
காவல் பாராவின்
குரைப்பு ஒலிகள் குறைந்து
சன்னமாய் ஹீனமாய் ஒலிக்கிறது
வீட்டு நாய்களுக்கு
ரோட்டு சாமர்த்தியக் குறைவு
பயத்தில் அலறும் அவை
மெல்ல அதிர்ந்து
அடங்குகிறது சுற்றுச்சுவர்
தனது பலகீனத்தின் பெருமூச்சில்
இடையறாது பெருகும்
சீழ்க்கை ஒலியிலும்
முரட்டு சப்பாத்துகளின்
கர்ரக் ஒலியிலும் சமாதானம் கொள்கிறது
அவப்பெயர் வந்து விடாதென
உடம்பெங்கும் நரம்புகள்
பூத்த வீட்டின் சுவர்களில்
ஒடுங்கும் பல்லிகள்
குறி சொல்ல
கேட்பாரின்றி ஆயுள் குன்றும்
ரகசியங்கள் உடைந்து
சங்குக்குள் சிக்கிய காற்றாய்
ஓங்காரமிடும்
பெரியவர்களின் சம்பாசனையை
திரும்ப திரும்ப சொல்லும்
ஒரு பிள்ளைகள் இல்லா பெருவீடு
6 comments:
//உடம்பெங்கும் நரம்புகள்
பூத்த வீட்டின் சுவர்களில்
ஒடுங்கும் பல்லிகள்
குறி சொல்ல
கேட்பாரின்றி ஆயுள் குன்றும்
ரகசியங்கள் உடைந்து
சங்குக்குள் சிக்கிய காற்றாய்
ஓங்காரமிடும்
பெரியவர்களின் சம்பாசனையை
திரும்ப திரும்ப சொல்லும்
ஒரு பிள்ளைகள் இல்லா பெருவீடு //
யம்மா....!
அற்புதமாய் வந்திருக்கிறது கவித நண்பனே!
மாதவராஜுக்கு மேல் என்ன சொல்ல!
கடைசி வரிகளில் ஒரு மிகப் பெரிய சம்பாஷணை ஒளிந்து கொண்டு பேசுகிறது..
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...
//உடம்பெங்கும் நரம்புகள்
பூத்த வீட்டின் சுவர்களில்
ஒடுங்கும் பல்லிகள்
குறி சொல்ல
கேட்பாரின்றி ஆயுள் குன்றும்
ரகசியங்கள் உடைந்து
சங்குக்குள் சிக்கிய காற்றாய்
ஓங்காரமிடும்
பெரியவர்களின் சம்பாசனையை
திரும்ப திரும்ப சொல்லும்
ஒரு பிள்ளைகள் இல்லா பெருவீடு//
எனக்கும் இவை ஆச்சர்யம் உண்டாக்கின வரிகள் ராகவன்
//ஒரு பிள்ளைகள் இல்லா பெருவீடு//
ஒரு பிள்ளை இல்லா பெருவீடு
இப்படி வந்திருக்க வேண்டுமோ
மிக அருமையாய் வந்திருக்கு மக்கா.கைகளை அனிச்சையாக கண்களில் ஒற்றிக் கொண்டேன்.கொண்டாட வேண்டிய கைகளை..
Post a Comment