சிறியவளின் கால்புண்ணில்
வழியும் சீழை மொய்த்துக் கொண்டிருந்த
ஈக்களை விரட்டியும் போகவில்லை
கொசுக்களும் விடாமல்
கடித்துக் கொண்டே இருந்தது
பெரியவளுக்கு பேதியானது
இன்னும் சரியாகாமக்கிடக்கு
சிலுவைக்காரங்க கொடுத்த மருந்தேதும் பலனில்லை
குழந்தைகளை தூங்கவைக்க
இவள் விழித்துக் கொண்டே இருந்தாள்
நாளை படுப்பதற்கு
மலம் மிதக்கும்
கழிவறை தாண்டியிருக்கும்
வாதாம் மரத்தின் அருகே
ஒற்றைச்சுவர் தோதாய் இருக்கும்
விடிஞ்சதும் போய் பார்க்கனும் என்று
தாமரையும், செல்வியும்
இந்த முகாம்லயே இருந்தா நல்லாயிருந்திருக்கும்
பலதையும் நினைத்து முந்தானையில் வீசிக்கொண்டே
இருந்தவள் தூங்கிப்போனாள்
பனியில் விரைத்த செத்த சவம் போன்ற ஒன்று
காலை நோண்டியது குறியை பிடித்துக்கொண்டே
எழுந்தவளை இழுத்துக்கொண்டு
வாதாம் மரத்தின் அருகே
இருந்த ஒரு ஜீப் பின்னாடி வைத்து...
இனி வாதாம் மரத்தின் அருகே
படுக்க இயலாது
குழந்தைகளிடம் வந்து விழுந்த போது
இன்னும் உறங்கிகொண்டிருந்தார்கள்
பெரிதாய் அழத்தோன்றியது
5 comments:
ராகவன்.. ஏங்க இப்படில்லாம்.. படிச்சு முடிக்கையில மனச துண்டம் துண்டமா வெட்டி போட்ட மாதிரி இருக்கு ராகவன்.. வேண்டாம் ராகவன் இதல்லாம்.. தாங்க முடியல (:
இந்த மாதிரி ஆயிரம் கதை நடந்துருக்கம்ல ராகவன்.. நமெக்கெல்லாம் இதுவும் கடந்து போகும்.. நம்மலால என்ன பன்ன முடிஞ்சதுன்னு யோசிக்கிறப்போ ... என்ன சொல்ல ராகவன்.. வலிக்கிறது
அன்பு கண்ணன்,
நிஜம் இன்னும் பயங்க்ரமானது...
என்ன செய்வது? Kannan...
maarum ellaam...
anbudan
raagavan
கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லத் தோணலை....
வரிகள் மனசை ரணமாக்குகின்றன...
வேதனை நிறைந்த கவிதைகளை குறைத்துக் கொள்ளுங்கள்...
மனதை ரொம்ப துடிக்க வைக்கும் கவிதை. கவிதையே ரணமாக இருக்கிறதா தோன்றுகிறது.
உண்மையேயானாலும், படித்து பழிவாங்கும் உணர்ச்சியில் இன்னும் கொலையாளிகளும் உருவாகிவிடுவார்களோ என்ற பயமும் சேர்ந்து வருகிறது. தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவிக்கனும். ஆனா யார் கொடுப்பது தண்டனை கொடுக்க வேண்டியவனே தவறு செய்யும் போது. நல்ல நிலை உருவாகனும். எல்லா இடத்திலும். மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியனும் என்கிற நிலை உருவாகனும்.
Post a Comment