ஒரு தவிட்டுக்குருவி
சுள்ளிகளை குச்சிகளை
வாயில் கவ்வியபடி
கூடு கட்ட இடம்
தேடி கொண்டிருந்தது
தார்சாலின்
இடுக்கில் ஒரு இடம்
காண்பிக்கிறேன்
பரணுக்கு மேலே
ஒரு இடத்தையும்
அந்த இடங்கள்
அதற்கு
பிடித்தமானதாய் இல்லை
போலும்
எங்கு வேண்டுமோ
கட்டிக்கொள் என்றேன்
என் தோளில் அமர்ந்து
தலையில் குச்சிகளை சொருகி
கூடு கட்ட எத்தனித்தது
நான் மரமாகி போனேன்m
9 comments:
அருமை இருக்குங்க
அன்பு கதிர்,
நன்றி கதிர்!
ராகவன்
அன்பு கதிர்,
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆருரன் குறிப்பிட்டது நீங்களாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் மறுபடியும்,
ராகவன்
குருவி மண்டை என்பது இதைத்தானா! ஒரு தடவை எழுத்தாளர் அருந்ததிராயை எழுத்தாளர் ஜெயமோகன் குருவிமண்டை என்று சொன்னார். எனக்கு அப்போது கடுமையான கோபம் வந்தது. இப்படி என்றால் கோபப்பட்டு இருக்க மாட்டேனே! நல்லா இருக்கு ராகவன்.
இந்தச் சிட்டுக் குருவி இருக்கிறதே வீட்டுப்பக்கம் அலையும் குருவி. வீட்டுப் பறவையில்லை.
ஆனாலும் பாருங்கள் இந்த கனவுக்காரர்கள் அதான் இலக்கியவாதிகள் அதை காலமெல்லாம்
பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பிருந்தால் யாரோடும் உறவாகலாம், கனவிருந்தால் எதுவாகவும் மாறலா.
ரொம்ப அழகு ரசித்தேன் ராகவன்.
அருமையான கவிதை ராகவன்.காமராஜ் தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.எழத்து பார்த்ததும்,கையை பிடிச்சுக்கிரனும் என தோன்றுமா உங்களுக்கு?எனக்கு தோன்றும்!அப்படி இந்த மூணரை மாதத்தில் நிறைய...இந்த தருணத்தில் உங்களிடமும் அப்படி தோனுகிறது.பிடிச்சுக்கிட்டேன்.விரல் தந்ததுக்கு நன்றி மக்கா.
மிக அழகு.
Azhagana kavithai ragavan....
ஐயோ இந்த கவிதை செம அழகு ராகவன். குருவி கூடு கட்டுதுன்னா
காலா காலம் மரமாய் போலாம் கொடுத்து வைத்தவர் நீங்கள்
Post a Comment