Wednesday, October 21, 2009

குறும்பா..

பிரிவுகளைச் சொல்ல
ஒரு மயிற்பீலி போதும்

உறவுகளைச் சொல்ல
குத்தீட்டிகள்
தேவைப்படுகிறது

என்னில் வழியும்
குருதியில் ஜனிக்கிறது
ஒரு ஒற்றைக்  கவிதை

பாடுபொருளாய் நீ!

7 comments:

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை ராகவன்!

பா.ராஜாராம் said...

velaippalu makkaa..aasuvaasamaagavum varavenum.varugiren..

காமராஜ் said...

//பிரிவுகளைச் சொல்ல
ஒரு மயிற்பீலி போதும்//

வருடுகிறது வார்த்தைகள். தண்ணீரின் அடர்த்தி தாகம் கொண்டே அளக்கப்படும்.

பிரிவே உன் காலில் கட்டப்பட்டது நினைவுகளின் சுருக்கப்பிரதி. எடுத்துப்பறந்து போ.

எப்படியிருக்கிறீர்கள் ராகவன். நலம்.

ராகவன் said...

அன்பு பாரா,

நன்றிகள் பல!
என்னால் எழுத முடியாத பொழுதுகளால் நிரம்பி வழிகிறது என்னுடைய லோகாதாய வாழ்வு. நச்சுப்பொருளாய் தொண்டையில் தங்கிய நினைவுகளைத் துப்ப அமிர்தமாய்ப் படுகிறது உங்களுக்கு. 'மக்கா'ன்னு கேட்கும்போதே ஒரு குரல் உங்கள் அடையாளங்களை இட்டு நிரப்புகிறது ஒரு கோலாஜ் சித்திரமாய்... எனக்கும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆவலாதி அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்புள்ள காமராஜ்,

அன்பை சொல்லாமல் என்னால் உங்கள் பெயரை பிரதியிட முடியவில்லை. எனக்கு, எழுதுவதை ஒரு வரமாக்கி தந்தவர்களின் அன்புப் பட்டியலில் நீங்களும், மாதவராஜும் இப்போது பாராவும் தப்பாமல் இருக்கிறீர்கள்.
என்னை உந்தித் தள்ளுகிறது உங்கள் வார்த்தைகள், மேலும் எழுதச்சொல்லி.

நலமாய் இருக்கிறேன் காமராஜ்!

அன்புக்கு இன்னுமொரு ஆயிரம் நன்றிகள்!

ராகவன்

க.பாலாசி said...

//என்னில் வழியும்
குருதியில் ஜனிக்கிறது
ஒரு ஒற்றைக் கவிதை//

உயிரெனும் உறவளித்து....

கவிதை நன்றாயிருக்கிறது அன்பரே...தொடருங்கள்...

மண்குதிரை said...

உறவுகளைச் சொல்ல
குத்தீட்டிகள்
தேவைப்படுகிறது

excellent