Thursday, October 29, 2009

பின்னூட்டக் கவிதை

பா.ரா.வின் ஒரு கவிதைக்கு பின்னூட்டமாய் எழுதியது. பா.ரா. அறிவுறுத்தியதற்கு இணங்க அதை இங்கே பதிவு செய்கிறேன்.  இது ஒரு நெகிழ்வு தானே ஒழிய கவிதை என அறுதியிட முடியாது.  அன்புக்கு நன்றி பா.ரா.

மகளின் பிறந்த நாளுக்காய்
பரிசாய்
இரண்டு மரக்கன்றுகளை
கொடுக்கிறேன்

பாலிதீன் பைகளில்
கன்றாய் அடங்கியிருக்கும்
ஒரு வீர்ய விருட்சம்
குறியீடாய் நிமிர்கிறது

எதற்கு
இதக்குடுத்த!
இத நா எங்க
நட்டு வளப்பேன்

கேள்வியில்
ஒடுங்குகிறது
பரிதாபமாய்
அதன் வேர்கள்

வாசலைக்காட்டுகிறேன்
சாலையின் ஓரத்தில் நடு
நீர் வார், காபந்து செய்

வருங்காலத்திற்காய்
நிழற்குடை
கனிதரா மரங்களும்
உயிர் தரும்
உன் அப்பாவைப் போல!

கைபிடித்து அழும்
மகளை புரியுதா எனக்கு?

6 comments:

மண்குதிரை said...

angkeyee vaasiththeen

yarrudaiyathu enra kuzhappam

nalla visiyam seythirukkirar pa pa annan

romba rasichchen

காமராஜ் said...

ராகவன் எப்டி இருக்கீங்க.
எனக்கும்தான் நீங்கள் அழைத்த இரண்டு வேளையும்
திரும்பப்பேச இயலாத நிலையில் இருந்தேன்.
இருண்டுபேரும் சொல்லி வைத்து கண்ணைக்
குளமாக்குகிறீர்கள்.
கவிதை அதன் கூர்மையை காட்டுகிறது.

பா.ராஜாராம் said...

நெகிழ்விற்கு இணையான கவிதை வேறு இருக்கா ராகவன்?காதலை தோத்துட்டு,மனைவி குழந்தைகளுடன் போகிற திருவிழாவில் முன் மனுஷியை யதார்த்தமாய் பார்த்து "நல்லா இருக்கீங்களா"என அவர்கள் நம் குழந்தையை தலை தடவியபடி விசாரிக்கிற நெகிழ்வை...அத்தருணத்தை நம்மாள்,கவிதை என எழுதிவிட இயலுமா?தருணத்தின் வெளிப்பாடுகள் அற்புதமானவை.அதை இந்த வெளிப்பாட்டிலும் உணர்ந்தேன்.இங்கு எனில் இது முகுப்பில் இருக்கும் இருக்கும்.அதனால்தான்! நன்றி மக்கா!

velji said...

ஆளூக்கொரு கையை பிடித்து அழைத்து போகிறீகள்.எங்கள் வீட்டு வைபவமாகும் இருக்கிறது.மகள்களுக்கு வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

நேற்றிலிருந்து இந்தக் கவிதையை/சொற்சித்திரத்தை எத்தனை முறை படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. வார்த்தைகளற்று நிற்கிறேன். பிரியமான கைகளைப் பிடித்து, எதுவும் பேசாமல் கொஞ்ச நேரம் மௌனமாக, கண்களில் நீர் வழிய இருக்க மட்டுமேத் தோன்றுகிறது நண்பா...! நேற்றைய பொழுதே இப்படியாகத்தான் இருந்தது.... எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸிலிருந்து. அங்கு மகன். இங்கு மகள். நல்ல உறவுகள் மனிதர்களை குழந்தைகளாக்கி தவழவிடுகின்றன.

ராகவன் said...

உங்கள் பின்னூட்டங்களின் அன்பின் ஆர்ப்பரிப்புகளை, நான் பாராவின் செவிகளில் இருந்து கேட்கிறேன். என்னை எழுதத்தூண்டிய பாராவிற்கு சிறப்பு வந்தனங்கள்.

மண்குதிரை
காமராஜ்
வேல்ஜி
மாதவராஜ்

உறவுகளின் உன்னத நிலையில் உங்கள் எல்லோருக்கும் அன்பும் நன்றியும் ஒரு சேர, கை கூப்பலும், சிறிது கண்ணீருமாய்.

ராகவன்