அடர் இருள்
போர்த்தி
அரவமில்லாமல்
களவை
சுமந்து கடந்தது
அந்த தெரு
சாத்திய
கதவு
முனகி அழைத்த
விரக வாசலின்
கோலங்கள்
ஊர்கிறது
விஷ சர்ப்பங்களாய்
விரிகூந்தலிலிருந்து
வழிந்த சுகந்தம்
பூதகணங்களாய்
வளர்ந்து
நிலைப்படிகளில் தொங்கி
இழுக்கிறது
மெல்லிய
வெளிச்சம் சிமிட்டும்
சுடரின் சலனங்களில்
புணர்வு பெருக்கு,
காற்று
பொங்கி ததும்புகிறது
பிறை முடி மீறி
வெண்ணீர் ஊற்றுகளாய்
கடவுளின்
திருமஞ்சத்தில் புரளும்
பரத்தையர் வசிக்கும்
தெருவில்
நிற்காமல் ஓடும்
உற்சவமூர்த்தி
14 comments:
fantastic!!!
//புனர்வு பெருக்கு,// ?
புணர்வு பெருக்கு ?
அருமையான கவிதை
அன்பு நேசமித்ரன்,
எனக்கு இந்த மூணு சுழி இரண்டு சுழி குழப்பங்கள் எப்போதும் உண்டு. தமிழ் படித்தது பள்ளியோடு போயிற்று, அதுவும் அரைகுறை.
நன்றியும், அன்பும் நேசன்,
ராகவன்
அன்புக்கு நன்றிகள் பல தண்டோரா!
இதுபோன்ற ஒற்றைவரியில் வரும் பின்னூட்டங்கள் கிறக்கத்தைக் கொடுக்கிறது.
அன்புடன்
ராகவன்
//நிற்காமல் ஓடும்
உற்சவமூர்த்தி //
இந்த வரியில் கவிதை சட்டென பொங்குகிறது.
அருமை!
//நிற்காமல் ஓடும்
உற்சவமூர்த்தி //
நானும் இதை ரசித்தேன் ராகவன்
சாமியும் வேஷம் கட்டுதா !
நல்ல கவிதை ராகவன்.
//அடர் இருள்
போர்த்தி
அரவமில்லாமல்
களவை
சுமந்து//
என்ன ஒரு அவதனிப்பு. கவிதை நல்லா இருக்கு, கடைசி பத்தி கவிதையின் திசை திருப்பி விட்டது போல, வேற ஏதோ வந்திருக்கணுமோ இல்லை என் புரிதலுக்கு அப்பாற்பட்ட விசயத்தை சொல்லி இருக்கின்றீர்களா தெரியவில்லை
'விரிகூந்தலில் கசியும் சுகந்தம்', கிறக்கமான வாத்தைகள்
ராகவன்.
கவிதை அருமையாக இருக்கிறது.
ராகவன்,
பரத்தையர் வசிக்கும்
தெருவில்
நிற்காமல் ஓடும்
உற்சவமூர்த்தி .
வாவ் என உதடு சொல்லும் மொழிகள்.
ராகவன்,
நீங்க மதுரை கல்லுரியில் படித்தவர்தானே, என்னுடைய ஒர்குட்டில் நீங்கள் நண்பராய் உள்ளீர்கள்.
என்னுடைய பதிவு.
www.kaveriganesh.blogspot.com
அன்பு நண்பர்கள்,
மாதவராஜ்,
தேனம்மை,
ஹேமா,
லாவண்யா,
காமராஜ்,
மற்றும்
காவேரி கனேஷ்.
உங்கள் அனைவருக்கும் என் நன்றியும், அன்பும்.
ராகவன்
காவேரி கனேஷ்,
உங்களை எனக்கு நேரில் பார்த்தது போல தான் இருக்கிறது,
நீங்கள் படித்த வருடம், 88-91 ஆ...
பி.எஸ்ஸி...?
தெரிவிக்கவும், தொடர்பில் இருக்கவும்.
அன்புடன்
ராகவன்
ஆம் 88-91 b.sc chemistry batch madura college
Post a Comment