முதலில் காதலை
சொன்னது நான் தான்
சொல்ல வைத்து விட்டாள்
ஆனாலும்
"ஐ லவ் யூ சொல்லவில்லை,
காதலை சொல்ல தெரியுதா?
ரெண்டு மூணு நாளு பேசுனதுக்குள்ள
ராத்திரி போன் பண்ணி
உன்ன கல்யாணம் பண்ணிக்க
ஆசைபடுறேன்னு
காதல சொன்ன லட்சணம்"
தலையில் அடித்து கொண்டு
முகத்தை நொடிப்பவளை
மெதுவா அனைத்து
காதில் சொன்னேன் அன்று
ஐ லவ் யூ என்று,
வாங்க ஓடிப்போகலாம்!!
எங்கம்மா? என்னையும் கூட்டிட்டு போம்மா!!
என்றவளை இடுப்பில் இடுக்கிக கொண்டு
சிரித்தவள் மேல்
காதல் இன்னும் மிச்சமிருக்கிறது
அறியாத பெருரகசியமாய்!
13 comments:
இந்த மிச்சம் தான் வாழ்வு முழுதும் இருக்க வேண்டும் .
நல்ல கவிதை .
எத்தனை வயதானாலும் சொல்லுவதும் கேட்பதுவும் சுகம் தான்
ராகவன்...
சில சொற்கள் ,
சில பொருட்கள்,
சில இடங்கள்.
அவரவர்க்கு பிரத்யேக
நினவுகளைக்கொண்டுவரும்.
பா.ரா அண்ணா ஸ்டைலில் கவிதை. கவிதை நல்லா இருக்குங்க ராகவன்
very nice... kaadhal enbathu illarathil thodara vendum...
நடத்துங்க ...!!!நல்லாருக்கு ராகவன்
காட்சியாய் விரிகிறது வரிகள்.
ரொம்ப ரசித்தேன்!
ஆஹா...
இது போன்ற சிரிப்புகள் அவ்வப்போது நம் முன்னால் மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் காணாமல் போய்விடுகிறோம். அல்லது அவை காணாமல் போய்விடுகின்றன. ஒரு கவிஞன் அதை பத்திரப்படுத்தி வைக்கத் தவறுவதில்லை!
ம்.... வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கிறது! அருமை ராகவன்.
"இஷ்டாத்வைதம்"....அருமையான வேதம்!
அருமையா இருக்கு ராகவன்.
காதல் இன்னும் மிச்சமிருக்கிறது,
அழகு.
அன்பு பத்மா,
அன்பு காமராஜ்,
அன்பு லாவண்யா,
அன்பு பவித்ராபாலு,
அன்பு தேனம்மை
அன்பு தீபா,
அன்பு கதிர்,
அன்பு மாதவராஜ்,
அன்பு அன்புடன் அருணா,
அன்பு அம்பிகா,
தனித்தனியாக எழுதமுடியவில்லை, நேரம் இல்லாதது தான் காரணம்.
எல்லோருக்கும் என் அன்பும்
நன்றியும்!
அன்புடன்
ராகவன்
நல்லாயிருக்கு நண்பா.
தொடருங்கள்.
நேரம் கிடைப்பின் எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
என்ன ஒரு எளிமை.. அழகு கவிதை..
Post a Comment