Friday, February 26, 2010

விளம்பரத்தில் மூடும் ஜன்னல் கதவுகள்...

உறங்காத விழிகளில்
அடைகாத்த கனவுகளின்
குவிமையம்
ஒரு ராஜகுமாரனாய்...

புரவியின்
குளம்பொலியும்
பறக்கும் புழுதியும்
மாய யதார்த்தமாய்
என்னை ராஜகுமாரியாய்
மாற்றும்

நீண்டு முளைக்கும்
உப்பரிகை
திண்ணையை கடந்து
நிற்கும் 
கொடிகள், மலர்கள் என்று
உடலை கிளர்ந்து பரவும்

களைத்த புரவி
நுரை தப்பி அண்ணாந்து பார்க்கும்
ராஜகுமாரனுடன்  
முன்காலை தூக்கி செருமும்
கை நீட்டி அழைப்பவனின்
மின்னும் நிறத்தில்
என் வெட்கம் மங்கும்

குதித்து இறங்க வாகாய்
கொடியை இழுத்து
மேலே தூக்கும் பாவாடை
தளர்த்தி இறங்கினேன்
அவன் என் தொடைகளை
கவனித்ததை
அலட்சியபடுத்தி
இறங்கிக் கொண்டே இருந்தேன்
குதிரையும் ராஜகுமாரனும்
தொடுவானமாய்... 

அடச்சே விளம்பர இடைவேளை...!!

6 comments:

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

காட்சி கண்ணில் விரிகிறது..

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்!

இறங்கிக் கொண்டே இருப்பதில் கவிதை விரிந்து கொண்டே இருந்தது காட்சியும் கவிதையும்..விளம்பர இடைவேளை விட்டுருக்க வேணாமோ?

:-)

சிவாஜி சங்கர் said...

அருமை அருமை...

உயிரோடை said...

நல்ல கவிதை.

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

சசிகுமார்,
ரிஷபன்,
பா.ராஜாராம்,
சிவாஜி ஷங்கர்,
லாவண்யா

உங்கள் அணைவருக்கும், அன்பும், நன்றியும்,
ராகவன்