ரகசியத் தோழி
குடுத்த துண்டுச்சீட்டைக் காட்டி
என்னையும்
உடன் அழைக்கிறாய்!
எதற்கும்
இருக்கட்டுமென்று
ஒன்றுக்கு கூடுதலாகவே
ஆணுறைகளை வாங்கி கொண்டாய்
தொலை தூரப் பயணத்
தேவைகளை
நீயே பார்த்து கொண்டாய்
உன் கனவுகளின்
ஆடைகளை களைந்து
எனக்கு முயங்க கொடுத்தாய்
தோழி வீட்டை
அடைந்து
தடதடக்கும்
கதவின் தாழ் நீக்கி
அவளைத் தொடுகிறாய்!
இரண்டாய் பிளக்கிறாள்
இரு வேறு நிறங்களில்
நீலம் எனக்கென்றாய்
வெளிர் மஞ்சள்
நீ எடுத்துக்கொண்டாய்!
நைச்சிய நிறங்கள்
பூசி சுடலைமாடன் ஆனேன்!
2 comments:
கவிதையைச்சுற்றி சுற்றி வருகிறேன்.
ஒரே வரியில் சொல்லி நகர விடாதபடிக்கு நிறய்யத்
தடுப்புகள் குறுக்கிடுகிறது.
இந்தக் கவிதைப் பயணத்தை ஆசுவாசமாக
அவதானித்தே பிந்தொடர நேர்கிறது.
நைச்சிய நிறங்கள் அணிவது பிடிபடவில்லை.
திரும்பவருகிறேன்.
ரொம்ப பிடித்திருக்கிறது இந்தக்கவிதை ராகவன் :)
Post a Comment