Thursday, September 30, 2010

உடுக்கை...

சென்றமுறை வந்தபோது

நண்பன் எதுவும்
வாங்கி வரவில்லை
பிள்ளைகள் அவனிடம்
ஒட்டுதலாய் இல்லை என
குறைபட்டுக் கொண்டே
சென்றுவிட்டான்
 இந்தமுறை வந்தபோது
காராசேவும்
சீனிமுட்டாயும் வாங்கி
வந்தவன்
கஷ்டமா இருக்கு
ஒரு பத்தாயிரம் இருந்தா
கொடேன் என்றான்
காராசேவிலும், சீனிமுட்டாயிலும்
எண்ணெய் சிக்கு
வாடை அடித்ததாக
என் மணைவி பிறகு
சொன்னாள்

உள்ளீடு...

வார்ப்புகளில் உறங்கும்
குழிவுகளில்  ஒட்டி கொண்டு
சிதையும் மூளிக்கருவாச்சியின்
சுதைபொம்மைகளின் சாயலில்   
கிடக்கும் பணியாரங்கள்
சுட்டு அடுக்கி கொண்டிருந்தவளின்
வியர்வை விழுந்து உப்பு நிறையானது

Wednesday, September 01, 2010

நிழல்-துரத்தி...

இறந்து போயிருந்தது

அந்த உடல்
முழுக்க வெள்ளை அங்கி
போர்த்தியிருந்தது
இடதுகையும் துர்நாற்றமும்
வெளியே கிடந்தது
இந்த கையை எங்கேயோ
பார்த்தது போல இருந்தது
விலக்கி பார்க்க
பயமாய் இருந்தது
அது நானாகவோ
அல்லது எனக்கு மிகவும்
பரிச்சயமான நீங்களாகவோ
இருக்கலாம் என்று.