Sunday, November 22, 2009

மரண அறிவித்தலும்....கொலைக்கான ஆயத்தங்களும்

வால் நீண்ட குருவி

நெகிழும் உறவின் தருனம்
இருள் தனிமை
ஒற்றை நிலா அல்லது மரம்
இப்படி ஏதாவது
ஒரு பாடுபொருளை
வீம்பாய் பிடித்துக் கொண்டு
எழுத முற்படும்போது
கவிதை மல்லாந்து விழுந்து
வாய் பிளந்து
மூச்சை விடுகிறது

கை பிசைந்து நிற்கிறேன்
சில நிமிடம்
பிறகு
நல்ல ஒரு தேர்ந்த தச்சனைக் கொண்டு
அலங்கார வேலைப்பாடுடன் கூடிய
ஒரு சவப்பெட்டி செய்கிறேன்

இறந்த கவிதையை
அதில் கிடத்தி
சீரிய உடுப்பு உடுத்தி
பூக்களைக்கொண்டு சுற்றி
அலங்கரிக்கிறேன்

முகத்தை மட்டும் விட்டு
முழுதாய் மூடுகிறேன்
எல்லோருக்கும்
தகவல் அனுப்புகிறேன்

சிலர் அனுதாபங்களுடன்
பூங்கொத்துக்களுடனும்
இன்னும் சிலர்
மலர்வளையங்களையும் வைத்து
சுற்றி வருகிறார்கள்

ஏதாவது தங்களுக்கு
தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள்
மோவாய் தாங்கி
என்னை உறுத்து நோக்குகிறார்கள்
சிலநேரம்
ஒன்றும் சொல்லாமல்
மௌனித்திருக்கிறார்கள்

நாற்றம் எடுக்காமல் இருக்க
யூடிகோலன் அடிக்கிறேன்
பிரேதத்தின் மீது

சமயம் வந்ததும் புதைத்து
விட்டு வருகிறேன்

உங்கள் ஆறுதல்களில் தேறி
அடுத்த கொலைக்கு
ஆயத்தமாகிறேன்....

ஜாக்கிரதை
சிக்குவது நீங்களாகவும் இருக்கலாம்

7 comments:

பா.ராஜாராம் said...

ஹா...ஹா...ஹா...

என்ன இப்படி கிளம்பிட்டீங்க?

இத்தருணம் எல்லோருக்கும் வாய்ப்பதே.எவ்வளவு கொலைகள்...

ஆனால், இங்கு கவிதை பொழைச்சு கிடக்கு.

நல்லா இருக்கு ராகவன்...நீங்களா கடுவன் பூனை?

:-))))

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

இதுல நானுமா...

அண்ணே ஏன் இந்த கொலை வெறி..

இப்ப நான் வச்சது மலர் வலையமா இல்லை மாலையா?

S.A. நவாஸுதீன் said...

//ஜாக்கிரதை
சிக்குவது நீங்களாகவும் இருக்கலாம்//

ஏற்கனவே சிக்கித்தான் இருக்கிறோம் உங்கள் வ(லை)ரியில்.

வியப்பா இருக்கு ராகவன்.

காமராஜ் said...

அன்பான ராகவன்..

வணக்கம்.
எங்கிருந்து பெங்களூரிலிருந்தா ?

கொலையைப் பற்றினாலும்,
மரணத்தைப்பற்றியானாலும்,
பிரேதபரிசோதனையைப்பற்றி
எழுதினாலும் கூட அது படைப்பு.

246 எழுத்துக்கள், ஏற்கனவே புழங்கிய கோடான கோடிச் சொற்கள் தானென்றாலும் கூட
ஒவ்வொரு சொல்லும் பிரசவப்பூரிப்பில் வெளிவந்து விழுகிறது. எடுத்து வைத்து கொஞ்சுங்கள்.
முடிந்தவரை எல்லோரோடும் அன்பு பாராட்டுங்கள். அன்பால் வாமனன் ஆசைப்பட்டதுக்குமேலே போய் இந்த உலகளக்கலாம். இங்கிருந்து கை நீட்டி எங்கள் பாராவின் தோள்மீது படரவிடலாம். இன்னொரு கைக்குள் நானும் இன்னும்
பலரும் வந்து சேர்ந்து ஒரு கொடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தது எனப்பாடலாம்.

ஒரு கவிதையை மரணமாகப்பாவிக்கும் இந்த க்ரியேட்டிவிட்டி அழகு பரா.

காமராஜ் said...

ராகவன் மது அருந்தும் பழக்கம் உண்டா.
அது மனோரஞ்சிதப்பூவை மேலெல்லாம் தெளித்துக்கொள்ளும்
தருணம். பாட்டு, கவிதை, அன்பு எல்லாம் கூட்டும் பூஸ்ட்டர்.
இந்த அடப்புக்கு நல்ல ஸ்வெட்டர். உள் ஸ்வெட்டர்.

உயிரோடை said...

அய்யோ... க‌விஞ‌னா கொலைஞ்னா நீங்க‌? ச‌ரி க‌விதையை எதுக்கு ச‌வ‌பெட்டியில் வைத்தீர்க‌ள் அது இன்னும் உயிப்புட‌ன் தானே இருக்கு........

கருவை பாலாஜி said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதையின் பொருள் விளங்கியது