Monday, February 15, 2010

சில்லறை...

”காதலில் கிறங்கி கிடந்த விடலை பருவத்தின் சில்லறைக்காசுகள் கீழே கிடக்கிறது, குனிந்து எடுக்க முற்படும் போது இடுப்பு பிடித்துக் கொண்டுவிடும் வயது வந்து விட்டது.  ஆனாலும் யாருக்குத்தான் இல்லை பேராசை மறுபடியும், வாழவும், சாகவும், காதலிக்கவும்”.

குடைராட்டினத்தில்
சுற்றும் போது குழந்தையாகிறேன்
உன் ஜிமிக்கிகள்

மூக்கிற்கு எதுவும்
தேவையில்லை ஒற்றை மரு
வைரம் தோற்கும்

ஸ்டிக்கர் பொட்டு
ஒட்டிய நிலைக்கண்ணாடி
நீயாய் சமையும்

கழற்றி வைத்த வளையல்
இசை மிச்சம் இன்னும்
உன் கை வீச்சில்

செருப்புகளில் பூக்கள்
நீ கால் நுழைத்த பிறகு
மலர்ந்தன

சிந்திய மழைத்துளிகள்
உன் கொலுசுமணிகள்
குளிர்வாகவும் இசையாகவும்

வியர்வைத்துளியில் ஒட்டிய
உன் ஒற்றை இழை மயிர்
என் இதயத்தில் ஹேர்லைன் கிராக்

வானம் பார்த்து கிடப்பேன்
வானம் என்னுடன் கிடக்கும்
பைத்தியம்!!

5 comments:

உயிரோடை said...

அய்யோ அய்யோ...

ஹார் லைன் கிராக் உங்க‌ள் இத‌ய‌த்தில் ம‌ட்டுமில்லை என்று புரிகின்ற‌து...

எல்லாம் காத‌ல் ப‌டுத்தும்பாடு.

Thenammai Lakshmanan said...

காணா இன்பம் கனிந்ததேனோ காதலர் தினமா தினமும் ராகவன்

Deepa said...

வெகு நாட்களுக்குப் பிறகு ரசித்தப் படித்த முதல் காதல் கவிதை.

//செருப்புகளில் பூக்கள்
நீ கால் நுழைத்த பிறகு
மலர்ந்தன //
ஆஹா!

ரிஷபன் said...

என் இதயத்தில் ஹேர்லைன் கிராக்

ஒட்டிக் கொண்டது இதயத்தில் பச்சக்கென்று

அம்பிகா said...

பதின்ம நினைவுகளின் மிச்சம் இன்னும் கவிதைகளாக கொட்டுகிறது போல. குடைராட்டினம், ஒற்றைமரு எல்லாமே அழகா இருக்கு ராகவன்.