Friday, February 19, 2010

நதிவழி...

தானே பேசிக்கொண்டு
நடக்கும் ஒரு பைத்தியக்காரியை
போல
தனியே நடந்து கொண்டிருந்தது
நதி

மனசுக்குள் வந்து போகும்
சில சமயம் அவளுக்கு
இரண்டு கரையிலும் அகட்டிக் கொண்டு
ஓடியது

நிறைய சொந்தங்கள் உண்டு
இரண்டு பக்கங்களும்
எல்லாத் தேவைகளும் தீர்ந்து
போகும் வரை
அம்மா போல உண்டா...
தெய்வமா படியளக்குறா
என்ற கதை அவளுக்கு
எப்போதும் சிறிய சிரிப்பை
நிரந்தரமாக்கி இருக்கலாம்

குழந்தைகள், கொண்டவன்
என்ற ஞாபகங்கள் தேக்கி
சில இடங்களில்
குறுகி ஓடுகிறாள் கூச்சத்துடன் 

தனக்கென கொண்ட சொத்தை
பெயரறியா பொருட்களை
தூக்கி கொண்டு அலைகிறாள்
ரகசியங்கள்
தக்கைகள் அல்ல என்பது
அவளுக்கு தெரியும்

எது எப்படியோ
என் கால் தொடுகையில்
சில்லென்று
மூளைக்குள் குளிர் நிரப்புகிறாள்

கடைவாயில் எச்சில் ஒழுக
கையேந்தும் அவள்
நதிஎன்னும் பைத்தியக்காரி
நதியான பைத்தியக்காரி 

25 comments:

உயிரோடை said...

//தானே பேசிக்கொண்டு
நடக்கும் ஒரு பைத்தியக்காரியை
போல
தனியே நடந்து கொண்டிருந்தது
நதி
//

யோசிக்க‌ வைச்சிட்டிங்க‌

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்குங்க.

தமிழ்மணத்துல இணைக்கலையா

அகநாழிகை said...

இணைச்சுட்டேன். ஓட்டும் போட்டாச்சு.

:)

க.பாலாசி said...

மிக அற்புதமான கவிதை...

//கடைவாயில் எச்சில் ஒழுக
கையேந்தும் அவள்
நதிஎன்னும் பைத்தியக்காரி
நதியான பைத்தியக்காரி //

மிக ரசித்தேன் வரிகளனைத்தையும்...

மணிஜி said...

பிரமாதமான நடை. கான்செப்ட்டும் அருமை ராகவன்!

ஹேமா said...

நல்லதொரு கவிதை நதிபோலவே.

ப்ரியமுடன் வசந்த் said...

மிக பிடித்தது...!

பா.ராஜாராம் said...

எல்லோரையும் எல்லா இடங்களுக்கும் தூக்கிக் கொண்டு போக வாய்த்திருக்கு இந்த கவிதைக்கு,நதிக்கு,இம் மனுஷனுக்கு!

மதுரை சரவணன் said...

nathi kavithaiyaai vanthu ennai thottathu.vaalththukkal

மாதவராஜ் said...

மதியமே படித்து விட்டாலும், மற்றவர்கள் இக்கவிதை குறித்து என்ன சொல்கிறார்கள் என ஒரு குறுகுறுப்பு.
நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள். கவிதை நதியாகவே ஓடுகிறது. அருமையான வரிகள் பல இருந்தும் எனக்கு //என் கால் தொடுகையில்
சில்லென்று
மூளைக்குள் குளிர் நிரப்புகிறாள்//
என எளிமையாச் சொல்வதே பிடித்திருக்கிறது!!! :-)))))

vidivelli said...

இக் கவிவரிகள் மிக மிக பிடிச்சிருக்கு.

அம்பிகா said...

//என் கால் தொடுகையில்
சில்லென்று
மூளைக்குள் குளிர் நிரப்புகிறாள்//
எனக்கும் இவ்வரிகளே பிடித்திருக்கின்றன, சில்லென்ற அந்த குளிரைப் போல.

ராகவன் said...

அன்பு லாவண்யா,

அன்புக்கு நன்றிகள் பல!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு வாசுதேவன்,

உங்கள் வாழ்த்துக்கு பதிலாய் என் வந்தனங்கள். தமிழ் மணத்தில் இனைத்ததற்கு நன்றிகளும், அன்பும்.

தமிழ் மணம் பட்டியை எப்படி வரவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு க.பாலாசி,

நன்றிகள் பல. உங்களின் அன்பும், ஊக்கமும் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு தண்டோரா,

உங்கள் நடைக்கு முன்னால், என் நடையை எங்கே நிறுத்துவது. வாழைப்பூ வாசம் என்னை இன்னும் கிறக்கத்திலேயே நிறுத்தி இருக்கிறது.

உங்கள் அன்புக்கு என் நன்றிகள் பல.

ராகவன்

ராகவன் said...

அன்பு ஹேமா,

அன்புக்கு பதிலாய் அன்பும், நன்றியும்.

உக்கிகளாய் தொடரும் இதுபோன்ற வார்த்தைகள், என்னை உற்சாகப்படுத்துகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

ப்ரிய வசந்த்,

தொடர்ந்து வாருங்கள், மேலும் அன்புக்கு நன்றிகள் பல!

ராகவன்.

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

திடீரென்று அப்படியே வந்து கட்டிக்கனும்னு தோனும் மாதவராஜ்... உங்கள் அன்பும்,ப்ரியம் வழியும் வார்த்தைகளும், நேர்மையான அக்கறைக்காரியங்களும் என்னை சிலிர்ப்பில் நிறுத்தும் எந்நேரமும். அடடா... யார்ரா இந்த மனுஷன்... என்ன செய்யப் போறேன் இந்த ஆளோட அன்புக்குன்னு தோனும் அநேக நேரங்கள்... நேர்ல பார்க்கனும்ங்கிற ஆசை மேலும் மேலும் பெருகி சமுத்திர பெருவெளியில் தாகமாய் கொல்கிறது... அடைக்குது மாதவராஜ்! புண்கணீர் பூசல் தரும்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விடிவெள்ளி,

முதல் வருகைக்கு அன்பும் நன்றியும்.

தொடர்ந்து வரவும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அம்பிகா,

தொடர்ந்து பெருகும் உங்கள் அன்புக்கு நன்றிகள் பல.
உங்களின் இயல்பான நடையும், சொற்சித்தரங்களும் எனக்கு அதிகம் பிடிக்கிறது, இது போல பத்திகள் எழுத எனக்கும் ஆசை தான் ஆனால் வரமாட்டேங்குது என்ன செய்ய என்று தெரியவில்லை.

அன்புடன்
ராகவன்

கிச்சான் said...

தனியே பேசிக்கொண்டு போகும் பைத்தியகாரியை நான் ....திரும்பி கூட பார்த்தில்லை !
மனிதன்
ஆனால் ...
தானே பேசிக்கொண்டு
நடக்கும் ஒரு பைத்தியக்காரியை
போல
தனியே நடந்து கொண்டிருந்தது
நதி.......... யை ரசிக்கிறேன் ......கவிஞ்சன்



அன்புடன் கிச்சான்

vidivelli said...

கடைவாயில் எச்சில் ஒழுக
கையேந்தும் அவள்
நதிஎன்னும் பைத்தியக்காரி
நதியான பைத்தியக்காரி //

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

Balakumar Vijayaraman said...

ஐயா, உங்களை எப்படி தவற விட்டேன் இவ்வளவு நாளாய்..... அருமைங்க...

இன்றைய கவிதை said...

ராகவன் , கவிதை அழகு


நன்றி

ஜேகே