Monday, February 22, 2010

பூனைக்கு அவனென்று பெயர்...

வீட்டில் ஒரு
பூனை வளர்த்தோம்
இந்த  பூனைக்கு
பெயரும் உண்டு
கிஷ்மோ!

அலுவலகத்தில் இருந்து
திரும்பியதும்
காலில் வந்து உரசி
ஏதோ சொல்லும்

தனக்கென்று இருக்கும்
மீன் கறியை
எடுக்க குளிர் சாதன பெட்டியை
நோக்கி இழுக்கும்

தட்டில் வைத்ததும்
தின்று விட்டு,
பால்கனியில் இருக்கும்
கொஞ்சம் மணலில் குழி தோண்டி
கக்கா போகும் பின் மூடும்
சுற்றி முற்றி
பார்த்து கொள்ளும்

திரைச்சீலைகளை ஏறி கடக்க
முற்பட்டு
பிரி பிரியாய் கிழிக்கும்

திரும்ப வந்து
சாக்கில் படுத்துகொண்டு
உடம்பெல்லாம் நக்கும்
எழுந்து வந்து
அலமாரி மேல் ஓசைப்படாமல்
தவ்வி படுத்துக கொள்ளும்

இரவில் மதில் மேல்
நின்று கொண்டு
பச்சை குழந்தையின்
கதறலாய் விரகம் பழகும்
பூனைகளுக்கு இருக்கிறது
ஒரு தினசரி தொடர் வாழ்க்கை

மென் பாதங்களில்
அடுக்களை புகும்
கள்ளப்பூனைக்கு இப்போது 
நான் என்றும் பெயர்

21 comments:

மதுரை சரவணன் said...

அருமை. கடைசியில் ஒரு டச் எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

ராக‌வ‌ன் பொதுவாக‌ பூனைக்கதைக‌ளும் க‌விதைக‌ளும் என‌க்கு பிடிப்ப‌தில்லை. ஆனாலும் க‌ள்ள‌பூனைக்கு நானென்று பெய‌ர் நிறைய‌ பேசுங்க‌ இந்த‌ வ‌ரிக‌ள்

பத்மா said...

என்னிடம் ஒருபூனைத்தோல் டிசைனில் ஒரு உடை உண்டு .அதை அணியும் போது எல்லாம் என்னை என் மகள் திருட்டு பூனை என்றே அழைப்பாள் .
அது சரி இந்த கள்ள பூனை அடுக்களை மட்டுமா ஏகும்?:) :) :)

அம்பிகா said...

அன்பு ராகவன்,
எனக்கும் பூனைகளோடு நல்ல ஸ்நேகிதம் உண்டு. தோட்டத்தில் விளையாடும் பூனைகள், பையன்கள் இல்லாத நேரம், நீங்கள் கூறியது போலவே கால் உரசி விளையாடும். முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்களே! தன் குட்டிகளை, வீட்டின் துணி அலமாரியில், மென்மையான துணிகளுக்குள் பொதிந்து வைப்பதையும், நாம் விரட்டும் போது, குட்டியின் கழுத்தை செல்லமாக கவ்வி தூக்கி செல்வதையும், .....
கள்ள பூனை:-}}}

விநாயக முருகன் said...

அருமை..கடைசியில் டச்

எனக்கென்னவோ க‌ள்ள‌பூனை எ‌ன்ற சொல்லை ‌விட திருட்டுப்பூனை எ‌ன்ற சொல் இன்னும் வசீகரிக்கிறது

மாதவராஜ் said...

ரசித்துப் புன்னகைக்க வைக்கும் கவிதை.

//க‌ள்ள‌பூனை எ‌ன்ற சொல்லை ‌விட திருட்டுப்பூனை எ‌ன்ற சொல் இன்னும் வசீகரிக்கிறது//

ஆமாம்ங்க...!
:-)))))

ரிஷபன் said...

பச்சை குழந்தையின்
கதறலாய்
உண்மை.. அந்த அலறல் அப்படித்தான் ஏமாற்றியிருக்கிறது..

ராகவன் said...

அன்பு மதுரை சரவணன்,

அன்பும் நன்றியும். உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். மதுரை மக்களிடம் பேசி நாட்களாகி விட்டது.
அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு லாவண்யா,
பூனையோ, நாய்களோ சிலசமயம் கவிதைக்குள்ளோ, கதைகளுக்குள்ளோ அடங்காமல் போவது தான் உங்களுக்கு பிடிக்காத காரணம் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து பூனைகளையும், நாய்களையும் கவிதாகாரணங்கள் சுற்றி சுற்றி வருகிறது, எடுத்து கையில் ஏந்தி கொஞ்ச எனக்கு மனசு அள்ளுகிறது எப்போதும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பத்மா,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல. பூனையின் திருட்டுக்குணம் எல்லோருக்கும் தெரிந்தது. அதன் மென்பாதங்கள் அரவம் இன்றி காற்றாய் நகர்த்தும் பூனைகளை, களவு பொருள் நோக்கி.
உங்கள் பூனை உடை எனக்கு என்ன மாதிரி இருக்கும் என்று ஆச்சரியமாய் இருக்கிறது. புலி உடை என்று சொன்னால், ஓரளவுக்கு யூகிக்க முடியும். பூனை உடை???

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அம்பிகா,

எல்லாமே சொல்ல முடியுமா நான் கவிதை என்ற பேரில் கதை செய்வதில்... இன்னும் எத்தனையோ இருக்கு. லாவண்யாவிற்கு சொன்னது போல, பூனையைப் பற்றி பாடாத விஷயங்கள் தான் அதிகம் என்று என் நினைவு.
நீங்கள் குறிப்பிட்டது போல பூனைகள் மஹாசாமர்த்தியசாலிகள்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விநாயகமுருகன்,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல. உங்களின் வாழ்த்தும், வார்த்தைகளும் என்னை மேலும் உரம் கொள்ளச் செய்யும்.

என்ன வித்யாசம்?? கள்ளப்பூனைக்கும், திருட்டுப்பூனைக்கும்... எனக்கு தெரியல?

மாதவராஜும், நீங்களும் தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

அன்பும் நன்றிகளும் மட்டும் போதுமா உங்களுக்கு எனக்கு பேராசையாய் இருக்கிறது... அன்பையும் நன்றியையும் மீறி வேறு ஏதாவது பெரிசா கொடுக்கனும்... உங்களுக்கு...
அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல.

அன்புடன்
ராகவன்

creativemani said...

Wow... :)

vidivelli said...

உங்கள் கற்பனை மிகவும் பிடிச்சிருக்கு.

விக்னேஷ்வரி said...

கடைசி வரிகள் மிகப் பிடித்தமானதாய் உள்ளன.

பா.ராஜாராம் said...

எனக்கு இதில் தலைப்பு பிடிச்சிருக்கு ராகவன்.

காமராஜ் said...

அதானே ?... அந்தப் பூனைகள் அடுப்படி மட்டுமா ஏகும்.

காமராஜ் said...

அருணா வணக்கம்.
ஊர் வந்தாச்சு.
வந்ததும் ப்ளாக் முகத்தில் தான் முழிச்சேன்.

பசி கொடிது.அதுவும் அடுத்தவேளை சோத்துக்கு என்ன செய்ய
எனும் நினைப்பு இப்போதைய பசிக்கு விஸ்வரூபம் கொடுக்கும்.
இந்த 110 கோடி ஜனத்திரளில் அப்படி மனிதர்கள் அதிக சதமானம். அவர்களின் சார்பாக கொத்துக் கொத்தாய் வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

கடைசி வரி நச் ராகவன்!