Friday, June 04, 2010

திருகிக்களை...

கடந்து வந்த
பாதையின்
இருள் பொதின்மையில்
கிடத்தி வைத்திருந்த
நானில்
இடறி விழுந்தேன்

நெருக்கி கட்டிய
பிணக்குகளின்
துர்வாடையில்
நிரம்புகிறது
பிள்ளைகளற்ற
தாம்பத்யம்

குருதியின் துளிகளில்
எழுந்த புற்றில்
சர்ப்பங்கள் நிறைந்து
பெருகும்
நீலம் படரும்
நான் எங்கும்

உலர்ந்த சருகு
வலது முலை
உதிர்த்த இடத்தில்
பீய்ச்சுகிறது
இதுவரை சுரக்காத
எதுவோ...

11 comments:

க ரா said...

ராகவன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை.

//குருதியின் துளிகளில்
எழுந்த புற்றில்
சர்ப்பங்கள் நிறைந்து
பெருகும்
நீலம் படரும்
நான் எங்கும் //
ஏதோ ஒரு சோகம் மனதை அழுத்துகிறது.

மதுரை சரவணன் said...

கவிதை அழுக வைக்கிறது. வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

அட அருமைன்னு சொல்ல முடியல

வலிக்குதுய்யா :(

காமராஜ் said...

ராகவன்...

புல்லாங்குழலின் பேஸ் சுருதியிலிருந்து கிளம்பி,ஒரு ஒற்றைக்குருவியின் சத்தத்தோடு இணைந்து,ஆளரவமற்ற மத்தியத்ரக்குடியிருப்பின் தெருப்போல எல்லா வலிகளையும் அமுக்கிவிட்டு மேல் நிற்கிறதிந்த கவிதை.

பத்மா said...

வார்த்தைகள் சிறிது சிறிதாய் மனதை முள் தைத்து கொல்கின்றன.
என்ன சொல்ல ராகவன்?

ரிஷபன் said...

என்ன ஆச்சு? நீண்ட இடைவெளி..
இதுவரை சுரக்காத
எதுவோ...
மீண்டும் கவிதை சுரந்ததில் மகிழ்ச்சி..

Balakumar Vijayaraman said...

வலிக்கிறது.

கபிலன் அருணாசலம் said...

ராகவன், நீண்ட நாட்களுக்கு பிறகு, கவிதையை கண்ட வுடன் ஆனந்தம். படித்தவுடன் மனத்தில் ஏனோ ஒரு சோகம், வற்றியிருந்த கண்கள் என்னும் குளத்தில் துளிகளாய் நீர்.

பாலா said...

fine

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ராகவன்.

//குருதியின் துளிகளில்
எழுந்த புற்றில்
சர்ப்பங்கள் நிறைந்து
பெருகும்
நீலம் படரும்
நான் எங்கும்//

இது ஒரு இடம் சேர்க்கிறது.

சட்டென அடுத்த இடம் சேர்க்கிறது, இது

//உலர்ந்த சருகு
வலது முலை
உதிர்த்த இடத்தில்
பீய்ச்சுகிறது
இதுவரை சுரக்காத
எதுவோ...//

தொடர்ந்து எழுதுங்கையா..

உயிரோடை said...

க‌விதை பிடித்திருக்கிற‌து