Monday, June 28, 2010

பெயரெச்சம்...

தாமு நாயுடுவுக்கு
யாரையும் இட்ட பெயரில்
அழைப்பதில் விருப்பம் இல்லை
ஜெயா, பொம்மி!
சுப்பு, கூழு ஆனாள்!
ஜமுனா நானாமுஜா ஆனது
யாருக்கும் பழைய பெயர்
ஞாபகம் இல்லை
கொப்பரைச்சட்டி செத்து போயிட்டார்
என்றதும் பிடிபடாமல்
யாரது என்று கேட்டதும்
நம்ம தாமு நாயுடு என்றான்!   

எல்லா பெயரையும் அவருடன்
எரித்தார்கள்
அவர் பெயர் மட்டும்
வேகாமல் கிடந்தது

 

17 comments:

சுந்தர்ஜி said...

வாழ்வின் ரசத்தை தாமுநாயுடு வழியே காட்டியது பெயரெச்சம்.அற்புதம் ராகவன்.

Vidhoosh said...

பா.ரா. பிசியா இருக்காரு போல.

வந்தா அதகளம்தான் :))

ரொம்ப அருமையான வரிகள். நானமுஜா :)) அகநாழிகை வாசுவின் நிரந்தர ஹீரோயினி....

வாழ்த்துக்கள் ராகவன். ரொம்ப நாளா காணும். எல்லாம் நலம்தானே?

கபிலன் அருணாசலம் said...

நன்றாக இருக்கிறது தங்களின் பெயரெச்சம்.

முரளிகண்ணன் said...

nice one

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு ராகவன். படிச்சு முடிச்ச உடனே எனக்கு எங்க அப்பா வழி தாத்தா ஞாபகம் வராரு. அவரு இப்படித்தான் வீட்டுல இருக்கற குழந்தைகள்லேந்து பெரியவங்க வரைக்கும் வேற பெயர சொல்லி கூப்டுவாராம். இத மாதிரி இன்னும் நிரைய எழுதுங்க ராகவன்.

பா.ராஜாராம் said...

எவ்வளவு நாளாச்சு ராகவன்! நலமா?

ரொம்ப நல்லாருக்கு ராகவன்.

வித்யா தளத்தில் நசரேயன் இல்லாவிட்டாலும் நெறக்காது. உங்க தளத்தில் வித்யா இல்லாவிட்டாலும் நெறக்காது...

என் தளத்தில் நீங்க இல்லாதது போல.

மகா சொன்னாள். வேலை எல்லாம் முடிச்சு வாங்க.

பத்மா said...

ரொம்ப நாள் கழிச்சு ராகவன்! .நல்வரவு..
ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு கவிதை ..
எனக்கு நாமுஜா ரொம்ப பிடிச்சுருக்கு என் பேர் போல இருக்கிறதாலோ?

கே. பி. ஜனா... said...

என்னமா அழகா படம் பிடிச்சிட்டீங்க! மிகவும் ரசித்தேன்! --கே.பி.ஜனா

க.பாலாசி said...

அற்புதமான கவிதைங்க சார்... வேகாமல் கிடந்தது அவர் பெயர்மட்டுமா!!!....

அம்பிகா said...

வேகாமல் கிடந்தது
கொப்பரைசட்டியா?

கவிதை அருமையா இருக்கு ராகவன்

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்குங்க ராகவன்.

Kumky said...

நன்று தோழர்..

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு ராகவன்.

காமராஜ் said...

சின்னச்
சின்ன
வரிகளில்
வாழ்வில்
புதைந்து கிடக்கும்
பல நினைவுகளைக்
கிளரி விட்டுவிட்டீர்கள்
ராகவன்.

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

ரிஷபன் said...

என் அப்பாவும் இப்படித்தான்.. பெயர் மாற்றி அழைக்கிறார் இப்போதும்.
யதார்த்தமான கவிதை.. அதனாலேயே மனசுக்குள்..

ராகவன் said...

anbu nanbarkal ellorukkum,

eppodhu vandhaalum vandhu otti kollum piriyam ungaludaiyadhu...

anbukku pathilaai anbum nandriyum
ragavan