Wednesday, June 30, 2010

ஜோதிர்கமய!!

விளக்குச் சுடரில்
கருகிய வெளிச்சம்
கீழே வட்டமாய் 

திரியின் கரிநாக்கில்
எரிந்து சாம்பலாகும்
இருள்

விளக்கு கண்
சுடர் பாவை
இருள்
மஞ்சள் கண்ணாடி

திரை இருட்டு
விளக்கு விலக்கும்
ஆனந்த சுடர் நடனம்

பேசா சுடர் மௌனத்தில்
பொரியும்
விட்டில்

விளக்கின் சுடர்
ஊதிய காற்றில்
பருத்து பெருக்கும்
நிழல்கள்

விளக்கு நிலை
வெளிச்சம் ஊர்சுற்றி
கட்டிய கயிறு இழுக்கும்
தூரம் கடக்காது

உறிஞ்சி குழல்
உற்சாக பானம்
மிதப்பில் கடக்கிறது
வெளிச்சம்

5 comments:

உயிரோடை said...

//கருகிய வெளிச்சம்//
வித்தியாச‌மான‌ சிந்த‌னை

//திரியின் கரிநாக்கில்
எரிந்து சாம்பலாகும்
இருள் //

இருளுக்கும் வேத‌னையுண்டென்ப‌தை அறிந்தேன்...

ந‌ல்ல‌ க‌விதை

'பரிவை' சே.குமார் said...

வித்தியாச‌மான‌ சிந்த‌னை

ரிஷபன் said...

தீபம் ஸர்வதோ முகம்..
கவிதையிலும் அதே தர்சனம்!

கபிலன் அருணாசலம் said...

அருமையான ரசனை. வாழ்த்துக்கள் ராகவன்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரசித்தேன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்