Thursday, September 30, 2010

உடுக்கை...

சென்றமுறை வந்தபோது

நண்பன் எதுவும்
வாங்கி வரவில்லை
பிள்ளைகள் அவனிடம்
ஒட்டுதலாய் இல்லை என
குறைபட்டுக் கொண்டே
சென்றுவிட்டான்
 இந்தமுறை வந்தபோது
காராசேவும்
சீனிமுட்டாயும் வாங்கி
வந்தவன்
கஷ்டமா இருக்கு
ஒரு பத்தாயிரம் இருந்தா
கொடேன் என்றான்
காராசேவிலும், சீனிமுட்டாயிலும்
எண்ணெய் சிக்கு
வாடை அடித்ததாக
என் மணைவி பிறகு
சொன்னாள்

7 comments:

R. Gopi said...

சூப்பர்

Anonymous said...

நல்லா இருக்கு அண்ணே!
ஏற்கனவே படிச்சிருந்தாலும் மறுமுறை படிக்கும் போதும் அருமை தான்!

காமராஜ் said...

இது பழய்ய இடுகையா ராகவன்.
ரொம்பவே சிக்குவாடையாடிக்குது.
வாழ்வின் தவிர்க்க முடியாத தருணங்களை அள்ளிக்கொடுக்கிறது.
கேரக்டர்களின் 100 சத உனமையோடு.
அருமை ராகவன்

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க சார்...எதார்த்த வாழ்க்கை இப்படித்தான்..

ஹேமா said...

சில நட்பு தன் தேவைக்கு மட்டும் !

பத்மா said...

பாவம் அந்த நண்பர்..

உயிரோடை said...

ம் நல்ல கவிதை