இவர்களைக் கண்டதும்
எனக்கு ஆவேசமாய் வருகிறது
நாங்கள் உபயோகிக்கும் அல்லது
எங்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் இவர்கள் தான்
கடைவிரிக்கிறார்கள்
இவர்கள் சொன்னது தான் விலை
என்கிறார்கள்
நாங்கள் குடியிருந்த இடமும்
நாங்கள் பயிரிட்ட வெளிகளிலும்
இப்போது இவர்கள் துணி உலர்த்துகிறார்கள்
இவர்கள் கைவைத்த இடங்களில்
எங்களவர்களின் இடமுலைகளும் இருந்தது
யோனிகளில் மண்கொட்டி
அற்ப பயிர் வளர்த்தார்கள்
இதில் மேலுயர்ந்த குரலுக்கு
விலங்குகள் என்று வில்லை ஒட்டினார்கள்
சந்தர்ப்பம் கிடைத்தபோது நாங்கள்
நசுக்கிய குரல்வளைகளில் இருந்து
கொட்டிய ரத்தத்தில் எங்கள் கால்கள்
நணைந்திருந்தது
4 comments:
மிகவும் அருமையாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள் .
ஒங்களோடதுதானா ராகவன்?
பக்கத்துல படிச்ச போதே சுட்டது.
இதை விட உரக்க உரிமை பறிபோனதை வேறொரு மொழியில் சொல்ல முடியாது.
வார்த்தைகளால் அடித்துவிட்டீர்கள் ராகவன்.
sundarjiye elatayum solitaruna... romba nalla irukuna ....
சிறப்பாக இருக்கிறது...
Post a Comment