Wednesday, June 22, 2011

பிறந்த நாள் வாழ்த்து...


அழுந்திப் பிடித்த மோதிர வளையம்
விட்டுச்செல்லும் தடயத்துனூடாய்
பயனிக்கிறது நமக்கான காதல் பெருவாழ்வு
வருடங்கள் கீறிவிட்டுப் போன காலத்தில்
பிரதிபலிக்கிறது தெளிவான நம்முகங்கள்
கழுவிக் களையமுடியாத குணத்தைலத்தை
உடலெங்கும் பூசித்திரியும் பித்து
விரிக்கும் வர்ணங்கள் பரத்தும் களிச்சித்திரம்
நம் வெளியெங்கும் வழிந்து சிரிக்கும்
மாயக்கம்பளத்தின்  நுழைவாயிலில்
அரூவமாகும் நமது உடல்கள் கசிந்து கலக்கும்
உயிர் மட்டும் மிச்சமாகும் அடரிரவுகளில்
வார்த்தைகள் எரித்து குளிர்காய்வோம் நாம்
பார்வை தொடுமிடங்களில் குளிர்பூக்களும்
விரல்கள் தொடுமிடங்களில் அனல் பூக்களும்
பூக்கும் விசித்திரவனத்தில்
கால்கள் பாவாமல் சிலநேரம்
தரை ஊன்றி சிலநேரம் உலவுகிறோம்
வெளிச்ச ஜன்னலில் கருந்துளைக்காகம்
கரைய விடிந்த பொழுதில்
உனக்கான வாழ்த்தை எப்படி எழுதுவது
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

நான் என் மனைவியின் பிறந்த நாளுக்கு எழுதிய கவிதையை, என் ப்ரிய தோழி அம்பை மொழிபெயர்த்தது, நீங்கள் கீழே காண்பது...

Our love moves through the impressions
Left by the tight wedding ring
Our faces reflect the indelible marks left by time
Mad we are
Smearing ourselves with the oil of our qualities that cannot be washed off
That madness spreading colours, joyful pictures
Spilling all over our space joyfully stretching into a magic carpet
Our bodies become formless when we touch it
In those deep nights
A liquid mingling
With only our life intact
We warm ourselves in the fire of words
Where the eyes touch, cool flowers
Where fingers touch, fire flowers
A strange garden we walk in
With flying feet at times
And at times with feet firm on the ground
The day dawned with the black raven calling from the window full of light
And I wonder how to word my greetings for you on this day.



7 comments:

'பரிவை' சே.குமார் said...

Ungal kavithai arumai...
mozhi peyarppum arumaiya vanthirukku anna...

ungal thozhikku vazhththukkal.

காமராஜ் said...

ப்ரியமும் நேசமும் கவிதையெங்கும் சுழன்றடிக்கிறது.அழகிய கவிதை.வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மோதிர வளையம் விட்டுச் செல்லும் தடயம் ரொம்பவும் உலுக்குகிறது ராகவன்.

பொதுவாகவே தடயங்களின் பின் சென்று பெறும் அனுபவங்கள் வெவ்வேறானவையாதலால் அதிலிருந்து மீள்வது கடினமாயிருக்கிறது.

தமிழின் மேல் இருக்கும் காதலால் உங்கள் மொழி நெருக்கமாயிருக்கிறது.அம்பையின் மொழிபெயர்ப்பில் குறைகாணவில்லை.

பிறந்த நாளில் வெல்லப்பாயசம் வெட்டப்பட இருக்கிற கேக்கை விட மனதை ஆனந்தப்படுத்துகிறதைப் போல.

அடர்த்தியான மொழியில் பிறந்த உங்கள் கவிதையின் வழியே சகோதரிக்கு என் வாழ்த்துக்களையும் பகிர்கிறேன் ராகவன்.

விஜய் said...

நண்பா நலமா ?

அருமையான Presentation

வாழ்த்துக்கள்

(தடயத்துனூடாய், குணத்தைலத்தை)
பிழை இருப்பதாக கருதுகிறேன்

விஜய்

Sugirtha said...

What an awesome way to celebrate her birthday with this very special poem!! :)Please do convey my Belated Wishes!

Wonderful translation indeed! //The day dawned with the black raven calling from the window full of light//
...got thinking, how it would be to look at a Raven through window full of light...

amazing Raghavan...

ஓலை said...

Nice poem.

கே. பி. ஜனா... said...

அற்புதம்! இதைவிட அழகாக ஒரு பிறந்த நாள் கவிதை எழுத முடியுமென்று தோன்றவில்லை. அதிலும் அந்த வரிகள்: //உயிர் மட்டும் மிச்சமாகும் அடரிரவுகளில்
வார்த்தைகள் எரித்து குளிர்காய்வோம் நாம்// மிகவும் அருமை.