என் வீடு
சுவர், ஜன்னல், ஜன்னல் கம்பிகள்
கூரையும், வாசக்காலும், தின்னையும்
மழையினை உறிஞ்சு
வைத்துக் கொள்ளும் இரவு முழுவதும்
உடல் படுகிற இடங்களில் எல்லாம்
சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தை
இடம்மாற்றும் நனைந்த வீடு
உங்கள் வீடுகளில் கூரைகள் நீண்டு
வறண்ட நாவுச்சுவர்கள்
மழையை சுவைக்காமலே
போயிருக்கலாம்
ஜன்னல் கம்பிகள் முற்றிலும்
மழை நீர் கோர்க்காத
வெற்றுச்சரமாய் இருக்கலாம்
வாசல் நுகராத மழை
வெளியிலேயே தேங்கி
வடிந்தும் போகலாம்
மழை பற்றிய அறிவை
கூரைகள் மட்டுமே
கதைகதையாய் கூற
வெறும் செவிகள் மட்டுமே
திறந்து வைத்திருக்கும் ஏனையவை
மழைச்சத்தம் மழையாகுமா
மழைக்கதை மழையாகுமா
நீங்கள் வீடுகளுக்குள்ளும்
தளராக்கூரைகளுக்குள்ளும் ஒடுங்க
மழை ஈரம் படாமலே
உலர்ந்து கிடக்கலாம்
சுவர்கள் போலவோ, ஜன்னல்கள் போலவோ
ஜன்னல் கம்பி, வாசக்கால்கள் போலவோ.
என் நனைந்த வீடு முளைவிட
உச்சானியில் அமர்ந்து கொண்டே
மழை ஈரத்தில் படாமல்
எதுவும் துளிர்ப்பது எப்படி?
என்று உங்களை வியந்து கொண்டிருக்கிறேன் நான்
8 comments:
nalla kavidhai
சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தை
இடம்மாற்றும் நனைந்த வீடு//
மனத்திற்குள் மழை.!
Yes ANNA...
மனத்திற்குள் மழை.
G R E A T
மழை வாசம்.. mind blowing...
ஏற்ப்பான கவிதைக்கு தகுந்த சித்திரம் கூட. ரம்மியமான சூழ்நிழையில் அமைந்த வீடு.
"""ஜன்னல் கம்பிகள் முற்றிலும்
மழை நீர் கோர்க்காத
வெற்றுச்சரமாய் இருக்கலாம்""""
கவிஞரே !!!!
கவிதை அருமை கவிதையின் எழுத்துருவை(font size) கொஞ்சம் அதிகபடுத்தினால் படிக்க நன்றாக இருக்கும்
Post a Comment