Thursday, January 12, 2012

காற்றில் திறக்கும் கதவுகள்...


அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த போது.   நாளை வருவேன் என்று அவளிடம் சொல்லியிருந்தாலும், இந்த பனிகுத்தும் அதிகாலையில் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது.    

லாப்டாப் பேக்கில் இருந்த சாவியைத் துளாவி எடுத்து, கேட்டைத் திறந்தான். இரண்டு நாட்கள் பேப்பர் அப்படியே காரின் கதவுக்கு அருகில் எடுக்காமல் கிடந்தது. நேற்று அவளிடம் பேசிய போது ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றியது.  பேப்பரை எடுத்துக் கொண்டு, கதவுக்கு அருகே வந்து, வராண்டா ஸ்விட்சை தட்டினான். வெளிச்சம் பரவ, சாவியை நுழைத்து கதவைத் திறந்தான்.  வாசல் நிலையை ஒட்டி கொஞ்சம் தண்ணீர் தேங்கி காய்ந்திருந்தது  போல இருந்தது. 


‘திவ்யா!’  என்று குரல் கொடுத்தான்.  பூட்டிய கதவுகளுக்குள் அவள் இல்லை என்று புத்திக்கு எட்டியிருந்தபோதும், தன்னையே அறியாமல் அழைக்கத்தோன்றியது, ஏதாவது அறையைத் திறந்து கொண்டு வந்துவிடுவாள் என்று.  கதவை உட்புறமாக பூட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான்.  டிராவல் பேக்கையும், லாப்டாப் பேக்கையும் அப்படியே லிவ்விங் ரூமில் இருந்த சோஃபாவில் போட்டுவிட்டு, டீப்பாயில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று அங்கு கிடந்த புத்தகங்களை ஒதுக்கிப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை.  உள்ளறைக்குச் சென்று, வார்ட்ரோப்பில் இருந்த லுங்கியை எடுத்து துணியை மாற்றிக் கொண்டு, முகம், கை, கால் கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கம் சென்றான்.  

ஒரு க்ரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்ட ட்யூப்ளே வீடு அது.  லிவ்விங் ரூமில் இருந்து மாடிக்குச் செல்லும் ஹெலிகல் ஸ்டேர்கேஸ், வளைந்த படிக்கட்டுகள்.  படிகளுக்கு நேர் மேலே சீலிங்கில் ஸ்கை லைட் அமைப்புடன் இருப்பதால், வீட்டிற்குள் எப்போதும் வெளிச்சம் இருக்கும் பகல் நேரங்களில்.  மாடியில் ஏறியதும், ரூஃப் கார்டனுடன் கூடிய டெரஸ். மாஸ்டர் பெட் ரூமின் ஃப்ரெஞ்ச் வின்டோஸை திறந்தாலும், ரூஃப் கார்டனுக்குள் இறங்கலாம். பார்த்து பார்த்து கட்டிய வீடு, திவ்யாவின் கனவுகளில் ஒரு கான்செப்சுவல் வீடு அது.  அழகையும், பயன்பாட்டையும் இணைத்துக் கட்டப்பட்ட வீடு.   

வீட்டின் உள்ளே ஒவ்வொரு அறையிலும், நிஷ் எனப்படும் உட்குடைவுடன் கூடிய அமைப்புகளில் வேறு வர்ணத்துடன் கூடிய விளக்குகள்.  திவ்யாவின் ரசனைக்கு உதாரணங்கள்.  சமையலறை இத்தாலிய முறைப்படி மாடுலர் டிசைனில் கட்டப்பட்ட திறந்த சமையலறை. லிவ்விங் ரூமில் இருந்து பார்க்கும்போது சமையலறை அழகாய்த் தெரியும்.  அடுக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகளும், பீங்கான் சாமான்களும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பார் போன்று தெரியும்.  சற்றே உயர்ந்த மேடை ப்ரேக் பாஸ்ட் கவுன்டருடன் இரண்டு உயர்ந்த ஸ்டூல்களும் அதை உறுதிப்படுத்தும்.   

சமையலறையை அடைந்து, பிரிட்ஜை பார்த்த போது பால், தோசை மாவு, முட்டைகள், பழங்கள் என்று தேவையான எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.  கவரைக் கிழித்து, பாலை சட்டியில் ஊற்றி, காஃபி தயார் செய்தான், காஃபி மேக்கரில் கொஞ்சம் இருந்த டிகாக்க்ஷனும் கலந்த காஃபி.  எடுத்துக் கொண்டு பேப்பரை எடுத்து லிவ்விங் ரூமில் உட்கார்ந்து கொண்டான். பேப்பரை விரிக்கும் போதே, அவள் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது.  செல்ஃபோனை எடுத்து அவள் நம்பரை டயல் செய்தான். 

டயல் டோனில் வைத்திருந்த பாட்டு கேட்டது, ஃபில் காலின்ஸின் ஒன் மோர் நைட் பாடல்.  ரெண்டு வரி பாடி திரும்பவும் ஆரம்பிக்கும் போது எடுத்தாள்.   

“யே! எப்போ வந்த? நாளைக்கு தானே வர்றேன்னு சொன்ன?  

‘ஐ தாட் ஆஃப் கிவ்விங் யூ எ சர்ப்ரைஸ், பட் இட் டர்ண்ட் டு பி மை சர்ப்ரைஸ்!’ 

“சாரி பேபி,  நேத்து ராத்திரியே தினேஷ் வீட்டுக்கு வந்துட்டேன், இங்க ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு அங்க வந்துடறேன், ஓகேயா கோபம் இல்லையே?!” 

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தினேஷ் வீட்டிற்கு நேற்று போகும்போதே ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது.  

“நேத்து உன்ட்ட பேசிட்டு வச்சதும், அவன் கூப்பிட்டான்! அதான் உன்ட்ட சொல்ல முடியல, ஜஸ்ட் டூ அவர்ஸ் பொறுத்துக்கோ வந்துடறேன்!” 

‘சரி!’  என்று செல்ஃபோனை கட் செய்தான். நேற்று ராத்திரி தான் போயிருக்கிறாள் என்றால், ஏன் ரெண்டு நாள் பேப்பர் எடுக்காமல் இருக்கு என்று அவனுக்கு குழப்பமாய் இருந்தது.  பொய் சொல்றாளோ? என்று தோன்றியது. ‘ப்ச்’ என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு, திரும்பவும் பேப்பர் படிக்க முயன்றான்.  பேப்பரில் மனசு லயிக்கவில்லை, ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான்.  காஃபி டேபிளில் இருந்த காஃபி ஆறிப்போய் ஆடைகட்டி இருந்தது.  

ஆடையை எடுத்துப் போட்டு, அவனில் ஒரு இருபது செகண்ட்ஸுக்கு, கப்பில்  ஒரு ஸ்பூனை போட்டு வைத்தான்.  இருபது செகண்டில் சூடாகிவிடும்.  மெடி லேடர் மேல் இருந்த அவனில் தூசி படிந்து இருந்தது.   வேலைக்காரி தினமும் வந்தால், இதைத் துடைத்திருப்பாளே!? அவ வரலையா, இவள் வீட்டில் இல்லையா? யோசனையுடன், காஃபியை எடுத்து குடித்தான். சர்க்கரை போடாதது ஞாபகம் வந்தது. சர்க்கரை டப்பாவில் இருந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் போட்டான். கலக்கியபடியே டிவிக்கு வந்தவன்.  சேனலை மாற்றினான்,  நியூஸ் சேனலில் நிறுத்தியவனுக்கு, எதிர்கட்சியினர் லோக்பாலுக்கு எதிராய் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்த்த போது எரிச்சல் வந்தது.  திரும்பவும் மாற்றி, ஏசியாநெட்டில் நிறுத்தினான். ஐடியா ஸ்டார் சிங்கர் ஓடிக் கொண்டு இருந்தது.  ஏசுதாஸின் பொய்க்குரலில் ஒருவன், “மதுரம் ஜீவாம்ருத பிந்து” பாடிக் கொண்டிருந்தான்.  பாடி முடித்ததும், ஆளுக்காள் நொட்டை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  

திவ்யா இருக்கும் போது ஆங்கில சேனல்களை தாண்டி நகராது. இது போன்ற  செமி கிளாசிகல் மெலடிகளை தேடமுடியாது. அவளின் தேர்வு மேற்கத்திய இசை மட்டுமே பெரும்பாலும்.  

திரும்பவும் ப்ரேக். டிவியை அப்படியே விட்டுவிட்டு டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த சின்ன புத்தக செல்ஃபில் இருந்து நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு எடுத்தான்.  படித்த புத்தகம் தான் என்றாலும், பேய்க் கொட்டு படிக்க சுவாரசியமாய் இருக்கும் முதல் இரண்டு பக்கங்கள் என்று புரட்டினான். ஒரு பக்கத்திலேயே அசுவாரசியம் வந்து எடுத்து வைத்தான்.  

வெளியே வந்தான், வந்தவன் டிவியில் “மஞ்சள் பிரசாதவும்” என்று  சித்ராவின் பாடலை ஒரு கெச்சலான பெண் பாடிக் கொண்டிருந்தாள்.  அவளைப் பார்த்த போது சௌம்யாவைப் போல இருந்தது. சௌம்யாவுக்கு சுத்தமாய் பாட வராது, அவளின் இசை ரசனை அலாதியானது. அந்தப் பெண்ணின் எதுவோ அவளிடம், அவனுக்கு சௌம்யாவை ஞாபகப்படுத்தியது.  உதடுகள், கண்கள் அல்லது நெற்றி, எதுவோ ஒன்று, யோசனையில் அவளைப் பார்ப்பது தடைபடும்போது என்ன ஆராய்ச்சி என்று நிறுத்திக் கொண்டான்.  வெகுவாக பாராட்டினார்கள். இசையமைப்பாளர் ஜெயசந்திரன், இன்னும் ஃபெதர்லி டச் இருக்கணும் இந்தப்பாட்டுக்கு என்று பாடிக்காண்பித்தார். அந்தப் பெண் நெஞ்சில் கைவைத்து ஏற்றுக் கொண்டாள். அவள் சிரிப்பு தான் சௌம்யாவை ஞாபகப்படுத்தியது என்று முடிவு செய்து கொண்டான். 

திவ்யா வர இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ ஆகலாம். பல்  தேய்த்து விட்டு சாப்பிட்டு விடலாம் அப்புறம் குளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். உள் பனியனை கழட்டிய போது வியர்வை படிந்ததை பார்த்ததும், குளித்து விட்டே சாப்பிடலாம் என்று தோன்றியது.  அலமாரியில் வைத்திருந்த , ஈரிழைத்துண்டு கிடைக்கவில்லை, டர்க்கி டவலை எடுத்துக் கொண்டு, குளிக்கப் போனான்.  டர்க்கி டவல் அப்படியே ஈரத்தை முழுதுமாய் உறிஞ்சி விடுகிறது. ஈரிழைத் துவர்த்து போல ஈரத்தை விடுவது இல்லை அது.   

ஃப்ரெட்டிக்கு ஒரு பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தில் வேலை ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக.  கை நிறைய சம்பளம், வருடத்திற்கு இரண்டு போனஸ்.  மாதத்திற்கு இரண்டு மூன்று முறை வெளியூர்களுக்கு பயணம் செய்வதால் கிடைக்கும் பெர்டயம் மாத செலவுக்குப் போதும்.  சென்னையில் இருந்து பெங்களூர் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. வந்த ஒரு வருஷத்திற்குள், பெங்களூரிலேயே இடம் வாங்கி வீடும் கட்டியாயிற்று.  இவன் அலுவலகப்பணி காரணமாய் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்ததால், திவ்யா தான் கட்டிடப்பணிகளை முழுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதில் ஆர்வம் இருந்ததுடன் அதைப்பற்றிய போதுமான அறிவும் இருந்தது, எல்லாவற்றிற்கும் வசதியாய் இருந்தது.  இவனுக்கு இன்று வரை ஸ்டிரக்சரல் எஞ்சினியர் கொடுக்கும் டிராயிங்குகள் புரிவதே இல்லை.  அவள் அதை எளிதில் புரிந்து கொள்வதுடன், நுணுக்கமான கேள்விகள் கேட்டு தெளிவு பெறுவதிலும் கருத்தாய் இருந்தாள். அப்பா, அண்ணன்கள் எல்லாம் எஞ்சினியர்களாய் இருந்ததால் வந்ததாய் இருக்கலாம் அவளின் ஆர்வமும், அதன் வழியே அறிவும். 

குளித்து முடித்தவுடன், பசி எடுத்தது. தோசை மாவை வெளியே எடுத்து  வைத்தான்.  ஃபெதர் டச் ஹாப்பில், ஒரு பொத்தானின் பட்டையை அழுத்த அடுப்பு பற்றிக் கொண்டது.  தோசைக்கல்லை எடுத்து ஹாப்பில் வைத்து, சிம்னியை ஆன் செய்தான்.   மாவில் உப்பிட்டு கரைத்து தோசை வார்க்கத் தொடங்கினான்.  தோசை வார்த்து, அம்மா கடந்தமுறை வந்தபோது கொடுத்த எள்ளுப்பொடியை எடுத்து குழித்து, நல்லெண்ணெய் விட்டுக் கொண்டான்.  கட்டியிருந்த துண்டுடன், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.   

திவ்யா இருந்தால் இப்படி உட்கார விடமாட்டாள். ஈரத்தோடு உட்கார்ந்தால், சோஃபாவின் பேப்ரிக் ஈரமாகி முடை நாற்றம் அடிக்கும் என்பாள். அதனால் அவள் இல்லாத போது தான் இது போல காரியங்கள் செய்யமுடியும்.  நிறைய  எண்ணெய் ஊற்றி தோசை செய்வது, ஸ்வீட் சாப்பிடுவது, டாய்லெட்டில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது என்று எல்லாம்.  ஆனால் இன்று சிகரெட் பிடிக்கமுடியாது, அவள் எந்நேரமும் வந்துவிடுவாள்.  தோசைக்கும், எள்ளுப்பொடிக்கும் தோசை கொண்டா, கொண்டா என்று உள்ளே போனது.  சாப்பிட்டு ஆனதும், அவளுக்கு திரும்பவும் ஃபோன் செய்யலாமா என்று  நினைத்தவன், வரும்போது வரட்டும் என்று விட்டுவிட்டான். 

ஏசியாநெட்டில் ஏதோ ஒரு பழைய நடிகை தன் டைரி பக்கங்களில் இருக்கும்  எழுத்தாக சில பேசிக் கொண்டிருந்தாள்.  புனே ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டில்  படித்தவள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  ஃப்ரெட்டிக்கு அவளை எந்த படத்திலும் பார்த்த மாதிரியில்லை. எதாவது பழைய படங்களில் அம்மா, அண்ணி, அக்கா என்று நடித்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. டிவியில் மனம் ஒட்டவில்லை . சௌம்யாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. சௌம்யாவுக்குப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.  உடனே செல்ஃபோனில் அழைக்க முயற்சித்தான்.  ரிங் போய்க் கொண்டேயிருந்தது. அவள் எடுக்கவில்லை.   

‘கால் யூ ஆஃப்டெர் அ ஒய்ல்’ என்று குறுஞ்செய்தி வந்தது.  திவ்யா இன்றைக்கு ஏன் தினேஷ் வீட்டுக்குப் போயிருப்பாள்.  திவ்யாவுக்கு தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டது, ஃப்ரெட்டிக்கு தெரியும் என்றாலும், நேற்று இரவு போக வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றியது. பொதுவாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் தினேஷைப் பார்க்கப் போவதில்லை. அப்படித்தான் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருந்தது.  சனி ஞாயிறுகளில் இருவரும் ஒன்றாய் தான் இருக்க வேண்டும் என்று.  ஆனால் இந்தமுறை, இவன் ஞாயிற்றுக்கிழமை வருவேன் என்று சொல்லியதால்,  நேற்று அங்கே சென்றிருக்க வேண்டும். 

சௌம்யா ஏன் ஃபோனை எடுக்கவில்லை. அவளுக்குத் தெரியும், ஃப்ரெட்டி இன்று வருவது. சௌம்யாவுக்கும் திவ்யாவுக்கும் ஒருவரையொருவர் பழக்கமில்லை.  அதே போல தினேஷை, ஃப்ரெட்டிக்கும் யாரென்று தெரியாது.   தினேஷின் பெயரே நிஜமா, கற்பனையா என்று தெரியாது, ஆனால் அவன் யாரென்று அறிகிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. அதற்கான லீட்ஸ் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை.  நிறையமுறை திவ்யாவிடம்  பேசும்போது, தினேஷைப் பற்றி அல்லது தினேஷ் என்பவனைப் பற்றி தெரிந்து கொள்ள அவன் நிகழ்த்தும் சம்பாஷணைகளை அவள் புரிந்து கொண்டு, அதிலிருந்து நழுவி விடுவாள். இது போன்ற அவஸ்தைகள் அவளுக்குக் கிடையாது. 

சௌம்யா யாரென்று அவள் திரும்பவும் கேட்டதேயில்லை. இவனே வலிய சென்று, சௌம்யா பற்றி திவ்யாவிடம் சொல்ல, அவள் அதை கண்டு கொண்டதேயில்லை.  அவனுக்கு இருக்கும் அவஸ்தைகள் அவளுக்கு இல்லாதது, அவனுக்கு எரிச்சலாய் இருக்கும், பொறாமையாயும் இருக்கும். திவ்யா கைவிட்டு போய்விடுவாளோ என்று ஏனோ தோன்றும். ஆனால் அவள், இவனுடன் இருக்கும் போது பழகுவதில் எந்த குறைபாடும் வைத்ததில்லை.   

சுயலாபத்தின் காரணமாய் இது போன்ற ஏற்பாடு செய்தது தேவையில்லையோ என்று தோன்றும். ரொம்பவும் புத்திசாலித்தனமாய் காய் நகர்த்துவது போல  நினைத்து, அதை மனதளவில் சமாளிக்க முடியாமல் தடுமாறுவது போல அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. அப்படி நினைக்கும் போதெல்லாம் சௌம்யாவின் முகம் ஞாபகத்தில் வந்து, அதில் ஏதோ நியாயம் இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.  

சௌம்யா, ஃப்ரெட்டியுடன் வேலை பார்க்கிறாள்.  அவள் ஜுவல்லரி அண்ட் ஸ்பெஷலாட்டி பிரிவில் சீனியர் மெர்ச்சண்டைசராய் பணி புரிகிறாள்.  ப்ரெட்டியின் நண்பனும் அதே பிரிவில் அக்ஸஸரியில் சீனியர் மெர்ச்சண்டைசர். அவனை சிகரெட் ப்ரேக்கிற்கு அழைக்க கீழ்தளத்துக்குப் போகும் போது, சௌம்யாவை பார்த்து பேசியிருக்கிறான். உடன் வேலை செய்பவன் என்ற ரீதியில் ஆரம்பித்த பழக்கம், இலக்கியம், இசை என்ற ஒத்த ரசனையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது அவர்களின் நட்பு.  திவ்யாவின் மேலோ அல்லது சௌம்யாவின் கணவன் மீதோ எந்தவித குறைகளும் இருவருக்கும் கிடையாது அல்லது அதைப்பற்றி பேசியது கிடையாது. ஒரு உறவில் இருக்கும் போது, வேற்று நபரால் ஈர்க்கப்படுவது எப்படி என்று பேச்சு வந்த போது,  ஆதரவான, எதிரான கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, அவர்களுக்கு அது ஒரு இயல்பான விஷயமாகவேபட்டது.   

ஒருமுறை மும்பைக்கு ஃப்ரெட்டி செல்லவேண்டியதிருந்த போது, சௌம்யாவிற்கும் மும்பையில் ஒரு ஜுவல்லரி பாக்டரி செல்லவேண்டியிருந்தது. ஜூஹூ பீச்சில் இருக்கும், சன் அண்ட் சாண்டில் தான் இருவருக்கும் கம்பெனியில் ரூம் புக் செய்திருந்தார்கள்.  அங்கே இருவரின் நெருக்கமும் இன்னும் அதிகமானது. தனித்தனி அறை என்றாலும், இரவு இருவரும் ஒன்றாகவே உறங்கினார்கள். அதன் பின் பெங்களூர் திரும்பிய பிறகும் இது தொடர்ந்தது.  ஃப்ரெட்டி இதை ஏனோ திவ்யாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சரியான சந்தர்ப்பம் வரும்போது அதைப்பற்றி பேசிவிடவேண்டும் என்று பலமாய்த் தோன்றியது.  

அதை சௌம்யாவிடம் சொன்னபோது, அவள் அதை ஏற்கவில்லை.  திவ்யாவிடம் சொல்லாமல் இருப்பது அவனுக்கு ஏனோ குற்ற உணர்வைத் தந்தது. கொஞ்சம் சொல்வதில் பயமும் தயக்கமும் இருந்தாலும் சொல்லிவிடுவதென முடிவு செய்தான். 
அதை சௌம்யாவிடமும் சொல்லி அவளையும் கன்வின்ஸ் செய்துவிட்டான். 

திவ்யாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று  தெரியவில்லை.  யாஹூவின் கேள்வி பதிலில் ஒரு பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது அவனுக்கு.  ஓபன் மாரேஜஸ் பற்றிய அந்த பதிவைப் படித்ததும், அவனுக்கு இதை வைத்து ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.  ஆனால் அது ம்யூச்சுவல் என்று நினைத்தபோது கொஞ்சம் யோசனையாய் இருந்தது. அந்த ஆர்டிகளை அவன், திவ்யாவுக்கு அணுப்பினான், ஆபிஸில் இருந்தபடியே.  திவ்யா ரெகுலராய் மெயில் செக் செய்பவள், அவள் ரியாக்சனை பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.    

அன்று மெயில் அனுப்பிய பின், அவன் மாலை வீட்டுக்குச் செல்லும் வரை எந்த பதிலும் இல்லை.  ஒருவேளை வீட்டிற்குப் போன பிறகு பேசுவாளோ என்று  தோன்றியது.  காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான், இந்திரா நகர் 100 அடி ரோட்டில் இருந்து சிக்ஸ்த் மெயின் வழியாக 80 அடி ரோட்டிற்குள் நுழைவதற்கு முன்னால் ஃபோன் அடித்தது. ஓரமாய் நிறுத்தி எடுத்த போது, திவ்யா அழைத்திருப்பது தெரிந்தது. மிஸ்ட் கால் தான் கொடுப்பாள் எப்போதும் இந்த நேரத்தில் அழைப்பது என்றால், அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பேசுவது உசிதமாகாது என்று.    

‘யா திவ்யா, யூ ஹவ் கால்ட் மீ?’ 

“ஃப்ரெட்டி! கன் யூ பை டுனா சாண்ட்விச் ஃபார் மீ, அம் ஃபீலிங் ஹங்க்ரி!” 

‘நான் இப்போதான் 'பாரிஸ்தா' கிராஸ் பண்ணேன், யூ ஷுட் ஹவ் டோல்ட் லிட்டில் எர்லி!’ 

“ப்ளீஸ் பா, அம் டையிங் அவுட் ஆஃப் ஹங்கர், ஒய் டோண்ட் யூ ட்ரை 'ஜஸ்ட் பேக்'?” 

‘ஓகே!’  என்று ஃபோனை கட் செய்தான்.  அங்கிருந்து 80 அடி ரோட்டிற்கு வந்து சிஎம் ஹெச் ரோட்டில் திரும்பி, 100 அடி ரோட்டிற்கு வந்து ஜஸ்ட் பேக் போகிற  சந்தில் நுழைந்தான். ஏர்டெல்லை தாண்டி, ஜஸ்ட் பேக் முன்னால் பார்க் செய்து விட்டு, அவளுக்கான டூனா சாண்ட்விச் வாங்கிக் கொண்டான்.  அவள் அந்த மெயிலை பற்றி ஒன்றுமே கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பார்த்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது.  தன்னை ஆழம் பார்க்கிறாளோ என்றும் தோன்றியது .  

கேட் சும்மா சாத்தியிருந்தது, அதைத் தள்ளி அகலத் திறந்து வைத்து, காரை உள்ளே நுழைத்தான். வாசலுக்கு வந்து லாப்டாப் பேக்கில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்தான்.  ஹாலில் இல்லை, டிவியும் ஆஃப் ஆகியிருந்தது. 

‘திவ்யா!’  என்று குரல் கொடுத்தபடியே லாப்டாப் பேக்கை, சோஃபாவில்  வைத்து விட்டு, அப்படியே உட்கார்ந்தான்.  கையில் இருந்த கவரை டீப்பாயில் வைத்து விட்டு, தலையைச் சாய்த்து உத்திரத்தில் எரியும் லைட்டைப் பார்த்தான். அதற்குள் மேலே படுக்கையறையில் இருந்தவள் படிகளின் கிரில் கம்பிகளின் வழியாய் பார்த்து, மேலே கொண்டு வருமாறு சைகை செய்தாள்.  சமையலறையில் இருந்து ஒரு தட்டையும், ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு மேலே ஏறினான்.   

மோவ் கலரில் ஒரு நைட் டிரஸ்ஸில் இருந்தாள். குட்டையாய் கத்தரித்து, லூஸாய் விட்ட முடியை, இழுத்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.  கம்ப்யூட்டர் ஆனில் இருந்தது.  யாஹூ மெயில் பாக்ஸும் ஒப்பனாகி தான் இருந்தது.  கையில் இருந்த சாண்ட்விச் கவரை வாங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் பக்கமாய் திரும்பியிருந்த அவனின் தலையைத் திருப்பினாள். 

“பீப்பிங்க் ஜோ! டோண்ட் பீப் இன் டு மை சிஸ்டம்!” என்றபடியே கவரில் இருந்த சாண்ட்விச்சை, தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்கினாள். அதனுடன் இருந்த பொட்டெட்டோ வேஃபர்ஸை அவன் பக்கம் தள்ளினாள். மயோனைஸ் வலது உதட்டோரம் வழிய ஆர்வமாய் தின்றாள். 

சாப்பிடும் வரை காத்திருந்தான்.  அவள் ஒன்றும் சொல்வதாயில்லை. தானே கேட்டால், தவறாக நினைத்துவிடுவாளோ என்று அவனுக்குத் தோன்றியது. சைட் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன். அவளையே பார்த்தான். அவள் என்ன என்பது போல, ஸாண்ட்விச்சை வாயில் மென்று கொண்டே கேட்டாள். லெட்டுசின் பச்சை கொஞ்சம் கொஞ்சமாய் அவள் வாயினுள் சென்றது. 

‘டிட் யூ சீ த மெயில்,  ஐ செண்ட் யூ?’ 

“விச் மெயில் பேபி? த ஒன் அபவுட் ஒபன் மாரேஜஸ்? நம்ம ஊருல இதெல்லாம்  நடக்குமா?” 

‘அதுல இருந்தது, பெங்களூர்ல நடந்த கதை தானே திவ்யா? படிச்சப்போ கொஞ்சம்  ஷாக்கிங்காவும், க்யூரியஸாவும் இருந்தது’ 

“சோ, வாட் ஆர் யூ அப் டூ? காட் சம்படி டு எக்ஸ்ப்ரிமெண்ட் இட்” என்ற அவளின் விளையாட்டான கேள்வி, அவனுக்கு சாதகமாய் இருப்பது போல பட்டது. 

‘இன்ஃபாக்ட் ஒரு ஸ்டடில சொல்லியிருக்காங்க, இது போல கப்பிள்ஸ்களிடம், டிவோர்ஸ் ரேட் ரொம்ப குறைஞ்சிருக்காம்!’

“ஓய், யூ வாண்ட் டு டெஸ்டிஃபை ஆர் வாட்?”   இந்த சம்பாஷனைகளில் சௌம்யாவை நுழைப்பதற்கான சாத்தியங்களே இல்லாமல் இருந்தது அவனுக்கு.

ஸாண்ட்விச்சை  முடித்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்து கை, வாய் கழுவி விட்டு, கம்ப்யூட்டரில் போய் அமர்ந்து கொண்டாள். 

ஃப்ரெட்டியைத் திரும்பி பார்த்து அருகே அழைத்தாள்.  கூகுளில் தேடி எடுத்து வைத்திருந்த ஓபன் மாரேஜஸ் பற்றிய பல ஆர்டிகள்ஸைக் காட்டினாள். அதன் சாதக, பாதகங்களை காட்டினாள்.   

“இது எல்லாமே, வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல தான் இருக்கு, அதுவும் ரொம்பவும்  ரேர், அந்த ஊரிலேயே இதை கலாச்சார சீரழிவு, இன்ஸ்டிடியுசனல் ரேப் அப்படிண்ணு சொல்றவங்க இருக்காங்க!”  

“அங்க இருக்கிற ஆட்களுக்கே இதுல வர மனத்தடை, மனச்சிக்கல் புரியாம, நிறைய பிரச்னைகள் வருது, நம்ம நாட்ல இதெல்லாம் முடியுமா? ம்யூச்சுவல்  ட்ரஸ்ட் வேணும் நிறைய, அதுவும் மென் காண்ட் ஹாண்டில் இட்’னு தோணுது” 

“வாட் டு யூ திங்க்?” 

‘இட் இஸ் பாஸிபிள் திவ்யா, த கப்பிள் ஹஸ் டு டிஸ்கஸ் வெரி ஒப்பன்லி அண்ட் ட்ராண்ஸ்பெரண்ட்லி.  அப்புறம் அவுட் ஆஃப் மாரேஜ் ரிலேசன்ஷிப் ஷுட் நாட் பீ அன் எமோஷனல் ஒன்’ 

“அது எப்படி சாத்தியம் ஃப்ரெட்டி, ஹவிங்க் செக்ஸ் வித் சம்படி வித் அவுட் அன் எமோஷனல் அட்டாச்மெண்ட்!” 

‘ஓகே! அப்படியே வச்சுப்போம், பட் யூ ஷுட் டிஸ்கஸ் எவரிதிங்க் வித் மீ அண்ட் லெட் மீ நோ யுவர் வேர் அபவுட்ஸ்’ 

“ஹே ஹோல்ட் ஆன், ஆர் வி டிஸ்கஸிங்க் எபவுட் அ கான்செப்ட் ஆர் அபவுட் அவர் பெர்சனல் வென்ச்சர், த்ர்ட் பேர்ஸன்ல இருந்த எப்படிப்பா ஃபர்ஸ்ட் பெர்ஸனுக்கு வந்துச்சு?” 

‘ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் திவ்யா, ஐ’ம் செக்சுவலி அட்ராக்ட்ட் டு சம் ஒன்’ 

கம்ப்யூட்டரில் கண்களை வைத்திருந்தவள், தடக்கென்று திரும்பி அவனை ஆழமாய் ஊடுருவது போல பார்த்தாள்.  கண்கள் கலங்கியது போல இருந்தது அவளைப் பார்க்கையில். ஃப்ரெட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  இதை மேலும் நகர்த்துவது சாத்தியமா என்று யோசனை வந்தது.  அவளே ஆரம்பித்தாள். 

“யார் அந்த பொண்ணு ஃப்ரெட்டி, எனக்குத் தெரியுமா? நான் பார்த்திருக்கேனா?, எத்தனை நாளா போயிட்டிருக்கு?” 

‘யார்னு கேக்காத திவ்யா, இட் மெ நாட் பி அ குட் ஐடியா டு நோ த பர்ஸன், பட் என்னோட வேலை செய்யிறவ அவ்வளவு தான் சொல்ல முடியும், ப்ளீஸ்’ 

திவ்யா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.  கம்ப்யூட்டரை விட்டு நகன்று, பெட் ரூமில் இருக்கும் ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்து ரூஃப் கார்டனுக்குள் இறங்கினாள்.  அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவள், தொலைவில் எதையோ வெறிக்கத் தொடங்கினாள்.  ஊஞ்சல் ஆடாமல் நின்று கொண்டிருந்தது. 

ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல ஊஞ்சலில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தாள். 

39 comments:

Unknown said...

Great Story... Your Detailing is great as always. Mindblowing Wrtting Na... Thanks for letting me to read it.

RAMA RAVI (RAMVI) said...

அற்புதமாக இருக்கு,கதை.ஆரம்ப பத்திகளில் வீட்டை பற்றி செய்யப்பட்டுள்ள வர்ணனை அருமை.

சிறிது நேரம் வீட்டில் தனிமையில் இருக்கும் போது ஃப்ரெட்டிக்கு ஏற்படும் எண்ணங்களை அழகாக விவரித்துள்ளீர்கள்.

ஓபன் மாரேஜஸ் பற்றிய விவாதங்கள் சிறப்பாக இருக்கு.

தொடரும் போடவில்லையே முடிவு பகுதி எப்போது வரும்??

Anonymous said...

அட்டகாசம்.. அடுத்த பகுதி எப்ப

இராஜராஜேஸ்வரி said...

"காற்றில் திறக்கும் கதவுகள்..."

அருமையான நடை.. பாராட்டுக்கள்..

Priya said...

cudnt wait. post the next part.

ஷஹி said...

போல்டான அட்டெம்ப்ட் ராகவன் .. கேரக்டரைசேஷன் நல்லா வந்திருக்கு ! எப்போதும் போல கதாபாத்திரங்களின் பெயர் தேர்வு அட்டகாசம். ஃப்ரெட்டி மேற்கு கலாச்சாரத்தின் ஒரு நீட்சி , திவ்யாங்குறது நல்ல அழுத்தம் குடுக்குது கதைக்கு ...அவளோட தெளிவு , புத்திசாலித்தனம் இவை பற்றின குறிப்பு தருது ..சௌம்யாங்குறது ரொம்ப மென்மையான பேரா இருக்கு அதுவே தான் ஃப்ரெட்டி அவ பேர்ல கொண்டு விடுகிற ஈர்ப்புக்கு காரணமா இருக்கலாமா ?
அழகா இருக்கு வீட்டு அலங்காரம் பத்தின வரிகள் ..அதோட திவ்யாவோட அறிவும்(எஞ்சினியர் ப்ளான் அவளுக்கு தான் புரியிது ), ரசனையும் தெரிய வருது . தெளிவான , புத்திசாலியான பெண்களத்தான் ரொம்ப ஆண்களுக்குப் பிடிக்கிறது இல்லையே ! ஆண மொத்தமா தூக்கி போட்டு ஒடக்கிற பெண் எழுத்து போல இருக்கு இந்த ஸ்டைல் ! அங்கங்க ..க்ராப்புத் தலையும் கூர் பார்வையுமா அம்பை தெரியறாங்களே ?
ஃப்ரெட்டிய இழுத்து நாலு அறை வக்கலாம் போல அவன் பேர்ல செமையா எரிச்சல் கொண்டு வரீங்க . கதை நெடுகிலும் அவனோட முட்டாள்தனமும் , கோழைத்தனமும்(காம்ப்லெக்ஸ் ?) , இயலாமையும் அப்பட்டமா தெரியுது ! முட்டாளா இருந்தாலும் இந்த க்ரிமினல் ப்ளானல மட்டும் கொறச்சல் இல்ல ! தான் இன்னொருத்தியோட தொடர்பில் இருக்குறதால மனைவியையுமா அப்படி இருக்கத் தூண்டுவான் ? வைஃப் ஸ்வாப்பிங் , ஓபன் மாரேஜஸ் கான்செப்ட்லாம் படிக்கிறது தான் ஆனாலும் அதிர்ச்சியா இருக்கு .
எள்ளுப் பொடி அம்மா அரச்சு வச்சதுங்குற எடத்துல " பயங்கள் " அம்பையோட நாடகம் ஒண்ணு நினைவு வருது ..அம்மா கோண்டு காரெக்டர் ஒருவனைப் பற்றின கதை அது ..ஆமா அவனும் கூட சைகோ தான் அந்த கதைல ..இப்ப தெரியிது அம்பை வாசம் ஏன் அடிச்சிது எனக்குன்னு !
நீங்க கதையின் துவக்கத்துல திவ்யா எங்க இருக்கான்னு சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்குறது எனக்கு வேற மாதிரி கூட யோசிச்சுக்கத் தோணுது ..அதாவது இவன டீஸ் பண்ணனும்னு தினேஷ்ங்குற ஒரு கற்பனை பாத்திரத்த கொண்டு வந்திருப்பாளோ அவங்களுக்கு இடையிலன்னு லாம் ! எப்டிலாம் யோசிக்க வக்கிறீங்க ?
கதை நிகழ்காலத்துல துவங்கி ஃப்ளாஷ் பேக்ல முடியுது ...நல்ல டெக்னிக்..இதுல பாகங்கள் எப்படி வரும் ? கதை தான் அழகா முடிஞ்சிருச்சே ? எப்போதும் போல ஆண் , பெண் அதுவும் தம்பதிகளுக்கு இடயிலான கதை தான்னாலும் ஒரு ஹாட் டாபிக் ..நல்லா இருக்கு ..வாழ்த்துக்கள் !

rajasundararajan said...

//“இது எல்லாமே, வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல தான் இருக்கு, அதுவும் ரொம்பவும் ரேர், அந்த ஊரிலேயே இதை கலாச்சார சீரழிவு, இன்ஸ்டிடியுசனல் ரேப் அப்படிண்ணு சொல்றவங்க இருக்காங்க!”

“அங்க இருக்கிற ஆட்களுக்கே இதுல வர மனத்தடை, மனச்சிக்கல் புரியாம, நிறைய பிரச்னைகள் வருது, நம்ம நாட்ல இதெல்லாம் முடியுமா? ம்யூச்சுவல் ட்ரஸ்ட் வேணும் நிறைய, அதுவும் மென் காண்ட் ஹாண்டில் இட்’னு தோணுது”

“வாட் டு யூ திங்க்?”//

இப்படிப் பத்தி பிரிச்சு, ஒரே ஆள் பேசுகிற பேச்சைத் தந்து, குழப்ப வேண்டுமா என்ன?

(அல்ட்ரா மார்டன்) வீடு கட்டுவது என்னவோ திவ்யா. 'ஓப்பன் மேரேஜ்' அமைப்பைக் கட்ட விழைவது ஃப்ரெட்டி. இது எனக்கு லிங்க் ஆகவில்லை.

மஹாபாரதத்தில் பரசுராமரின் தாயாரான ரேணுகாவைப் பற்றிய கதைக்கு இரண்டு பாடங்கள் உண்டு: (1) ரேணுகாவை அங்காடித் தெருவில் ஒருவன் கையைப் பிடித்து, "சல்லாபிக்கலாம் வா!" என்று இழுப்பான். பரசுராமர் (அவருக்கு வயது அப்போது பன்னிரண்டோ பதினான்கோ) தாயின் கையைப் பிடித்தவனை அடித்துப் போட்டுவிட்டுத் அவளை வீட்டுக்குக் இட்டுக்கொண்டு வந்துவிடுவார். ரேணுகா தன் கணவர் ஜமதக்னியிடம் இதைப் பற்றிச் சொல்லுவாள். ஜமதக்னி பரசுராமரை விளித்து, "மகனே, விரும்பியவர்களோடு போவது உலகத்து வழக்கம்தானே; அது கண்டிக்கக் கூடியது அல்லவே?" என்பார்.

(இது அமுக்கப்பட்டு, பரப்புரை செய்யப்பட்ட இன்னொரு கதை எல்லாருக்கும் தெரியும்:) (2) ஒரு க்ஷத்ரியனை ரேணுகா ஆசைப்பட்டாள் என்று அறியவரும் ஜமதக்னி அவள் தலையை வெட்டும்படி பரசுராமரிடம் சொல்வார். பரசுராமரும் வெட்டுவார். "சொன்னபடி செய்த உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்கிற ஜமதக்னியிடம், "என் தாயை உயிர்ப்பிக்க வேண்டும்." என்பார் பரசுராமர்.

மஹாபாரதத்தில் இல்லாதது இல்லை என்று நிரூபிக்கும் கதைகள் இவை. (ஆறுமுகனின் பிறப்பு etc. பிற).

'ராமாயணம்' எழுதியாகவேண்டிய கட்டாயத்துக்கான ஒரு வாழ்க்கைவழக்கம் அதற்கு முந்தி இருந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியும்தானே? எனவே, "காற்றில் திறக்கும் கதவுகள்" என்று - மேலைக் கலாச்சாரத்தைச் சுட்டுவது போல - ஒரு தலைப்பு எனக்கு கலாச்சாரக் காவலர் ஒருவரின் பரப்புரையாகவே படுகிறது. (இந்தக் கோளாறு உங்களிடம் ஒட்டிக்கொண்டு இருப்பதாக நீங்கள் 'பெருந்தெய்வம்', 'சிறுதெய்வம்' என்று எழுதியபோதே உணர்ந்தேன்.)

எழுத்து என்பது விடுதலையின் பாற்பட்டது. இப்படியான கலாச்சாரக் கற்பிதங்கள் நாம் இன்னமும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதற்கு அடையாளம்.

நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, 'அவர்கள் மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டார்கள்; நாம் இல்லை' என்பதுதான். மற்ற எல்லாம் எல்லாருக்கும் பொது.

குடும்பம் நமக்கு ஒரு மத அமைப்புக்குச் சமம். அவ்வளவுதான்.

//கண்கள் கலங்கியது போல இருந்தது அவளைப் பார்க்கையில்.// இது ஆணாதிக்கம் தானாகவே வெளிப்படும் இடம்.

என் தோழி ஒருத்தி, அவள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பாலகுமாரனின் ரசிகை. அவர் எழுத்துகளைப் பற்றி விதந்து பேசுவாள். "அவர் எழுத்துகளில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் ஆண்களா அல்லது வைப்பாளன் வைத்துக்கொள்ளும் பெண்களா, யார் அதிகம் வருகிறார்கள்?" என்று கேட்டு வைத்தேன். பிறகு அவள் பாலகுமாரனை வாசிப்பதை விட்டுவிட்டாள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு ஒரு தகவல்: நானும் என் மனைவியும் (அல்லது விவாவகரத்துச் செய்துகொள்ளாத என் முன்னாள் மனைவியும்) இப்படித்தான் வாழ்கிறோம். ஆனால் எங்கள் இருவருக்கு இடையிலான உடலுறவையும் வெட்டிகொண்டோம். (காரணம், நாம் மதப்பற்றுச் சிக்கல் உள்ளவர்கள்: If you have faith in some other God, I am not a party to it.).

புதுமைப் பித்தனின் 'கல்யாணி' கதையைத் தாண்டி நம்மால் எழுத முடியாததற்கு இதுதான் காரணம். (சு. வேணுகோபால் எழுத்துக்கு மட்டுமே அந்த வல்லமை வாய்த்திருக்கிறது என்பது என் கருத்து).

ராகவன் said...

அன்பு ராம்,

ரொம்ப சந்தோஷம் உனக்கு இந்த கதை பிடிச்சது. அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு ராம்வீ அவர்களுக்கு,

இது தொடர்கதை இல்லைங்க! அது மாதிரி ஒரு தோற்றத்தை இந்தக் கதை உருவாக்கியிருந்தா அது நான் சரியா சொல்லலைண்ணு தான் நினைக்கிறேன். உங்கள் கருத்தையே பலரும் சொன்னதும் அதைத் தான் காட்டுது.

ஓபன் மேரேஜஸ் முழுமையாய்ச் சொல்ல நான் முற்படவில்லை, எனக்கு அதைப்பற்றி தெரிந்த அளவே எழுதி இருக்கிறேன்.

இது சிறுகதை மாத்திரமே... இந்த ஒரு பகுதியுடன் முடிந்துவிட்டது. நிகழ்காலத்தில் ஆரம்பித்து, ஒரு ஃப்ளாஸ்பேக்கில் முடிவது போல எழுதியிருக்கிறேன்...

உங்கள் அன்புக்கும், வாசிப்புக்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அனானி அவர்களுக்கு,

இது ஒரு சிறுகதையாய் தான் எழுதியிருக்கேன்... கதை முடிஞ்சிடுச்சு... அதில் முழுமை இல்லை என்று நீங்கள் கருதியிருந்தால், அது என்னோட தவறு தானே ஒழிய வேறு இல்லை.

உங்கள் அன்புக்கு என் அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு ராஜராஜேஸ்வரிக்கு,

உங்கள் கருத்திற்கும் அன்புக்கும் என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ப்ரியா அவர்களுக்கு,

இது முடிந்தவிட்டது... தொடர்கதை அல்ல...

உங்கள் வாசிப்பிற்கு என் அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு ஷஹி,

நீங்க சொன்ன மாதிரி இது ஒரு திறந்த முடிவு உள்ள கதை தான்... ஃபிளாஸ்பேக்கிற்கும், நிகழ்காலத்திற்கும் இடையே என்னவாகியிருக்கும் என்பது படிப்பவர்களின் யூகத்திற்கு விடத்தோன்றியது... ஆனாலும் இதில் என்னுடைய முடிவும் இல்லாமல் இல்லை.

இத்தனை ஆர்வமாய் படித்து, அதை ஆய்ந்து எழுதுகிறவர்களின் கருத்துக்களை படிக்கும் போது நிறைய எழுதத் தோன்றுகிறது. என் எழுத்தில் அம்பை தருவது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதுவும் பெண் எழுத்து என்று சொல்வது மேலும் ஆச்சரியம்.


இதுல ஃப்ரெட்டியிடம் இருப்பது சைக்கோத்தனம் இல்லை என்று நினைக்கிறேன் ஷஹி! இது ஒரு சராசரியான ஆணிடம் இருக்கிற ஒரு விஷயம் தான்னு நினைக்கிறேன்.

ஒரு பாக்யராஜ் படம்...மீனா ஹீரோயின்... அதுல...ஒரு மாளிகையில் வேலைக்கு சேரும் பாக்யராஜ், அங்கிருக்கும் கட்டிலில் உட்கார்ந்து பார்ப்பார்... மெத்தென்று இருக்கும் அதில் அவருக்கு குதிக்கவும் தோன்றும்... அப்போது வேலைக்காரியாய் நடித்துக் கொண்டிருக்கும் மீனாவையும் அதில் குதிக்க, அல்லது உட்கார வற்புறுத்துவார். அவளும் உட்கார்ந்து விட்டால், தன்னை காட்டிக் கொடுத்து விடமாட்டாள் என்ற யோசனை... அது தான் எல்லாருக்குமான பொது புத்தி...

உங்கள் கருத்திற்கும், வாசிப்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

சந்தோஷம்ணே! உங்க கருத்தைப் படிக்கும் போது... எனக்கு சில விஷயங்களை பேசணும்னு நினைச்சேன்ணே! அதுக்கு உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் சொல்லுங்கண்ணே!


பத்தி பிரிச்சு ஒருவரின் உரையாடலைப் போட்டது குழப்பும் நோக்கத்தில் இல்லை... அது ஒரு பாஸை (pause) ஐ காண்பிப்பதற்காக... அதனால் தான் டபுள் கோட்டட்(double quoted) உரையாடல்கள் திவ்யாவுக்கென்றும்... சிங்கள் கோட்டட் ஃப்ரெட்டிக்கென்றும் வைத்தேன். ஆனாலும் அந்த உத்தியை மாற்றிக் கொள்கிறேன் குழப்புகிற பட்சத்தில்.

வீடு கட்டுவது திவ்யா, ஆனா ஓபன் மேரேஜஸ் பற்றி பேசுவது ஃப்ரெட்டி என்பதின் காரணம், நான் யோசிச்சது வேற மாதிரி அண்ணே! ஃப்ரெட்டி ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் போலியானவன் என்பதை நிறுவ தான் முயற்சித்தேன்... "மென் காண்ட் ஹாண்டில் இட்!"னு திவ்யா பேசுவது, இவனைப் பார்த்து தான் சொல்றா... ஆனா கொஞ்சம் டிஃபென்சிவ்வா...மென் என்று சொல்றா... திவ்யா கொஞ்சம் தெளிவானவள்... அவளால் சமாளிக்கமுடியும்... ஃப்ரெட்டி எப்பவுமே ப்ரெடென்ஷியஸ் மட்டுமே... அப்படிங்கிறத நிறுவ மட்டுமே முயன்றேன்...

நீங்க சொன்னமாதிரி...இன்னும் கொஞ்சம் தியானிச்சு...ரிசர்ச் பண்ணி எழுதியிருக்கணும்... இனிமே தவறாம செய்றேன்...

பரப்புரையின் எடுத்துக்காட்டும் விளக்கங்களும் புரிஞ்சுகிட்டேன்... இனிமே அதை நினைவில் வச்சுக்குறேன்... கலாச்சார காவலர், அந்த விஷயங்கள் கொஞ்சம் இருக்கத் தான் செய்யுது... வெளியே வந்துடுவேன்ணே!

புதுமைபித்தனின் கல்யாணி படிச்சேன்... சு.வேணுகோபால் தான் தேடிட்டு இருக்கேன்...

நிஜமான வாத்தியார் எனக்கு நீங்க தான் அண்ணே!

அன்புடன்
ராகவன்

RAMA RAVI (RAMVI) said...

ராகவன்,மிக்க நன்றி தங்களின் விளக்கத்திற்கு. முதலில் படித்து கருத்திட்ட போது எனக்கு கதை முடிந்துவிட்டதாக தெரியவில்லை. தங்களின் விளக்கத்தினை படித்த பிறகு மறுபடியும் கதையை இருமுறை படித்தேன். பிறகுதான் இக்கதைக்கு தாங்கள் கையாண்ட நடை எனக்கு புரிந்தது.அற்புதமாக இருக்கிறது.

Anonymous said...

Shahi karuthum, rajasundarrajan karuthum interestinga rendu veru veru parimanam. Rajasundararajan karuthula sila vishayangal enakku othu pochu.

Anal enakku vera onnu thonichu.. athai publica commenta poda viruppam illai. kobapadamal vasi.

Ithula freddyla nee irukkayonnu thonichu. manaiviyoda activities avan shahi solrathupola kozhaithanama sagichukkala - avanukkum athellam viruppam thannu nan ninaikaren. Athe pola open marriage pondra open mindedness endru concept levelil kaatti kolla neeyum muyarchipai appadinnu thonuthu. That is I think you will behave like Freddy given that situation. Of course, athu unmayachunna [from the wife's side] nee enna seiva appadingara kuzhappam unakke irukkalam appadinnum thonuthu. Unnala athai handle seiya mudiyuma illayannu unakku thelivu irukka?

Ambaiyoda letterla iruntha oru vakkiyame ithai enakku appo ezhuthanumnu yosikka vachathu. But I decided not to.

Anyway, the cynic/skeptic in me thinks you cannot handle it. You may pretend to handle it for other reasons but I dont think you can really handle it.

Freddy is just an exploitative, pretentious man who is unable to handle getting paid back by the same coin.

No deep cowardice or defense of culture in this story :) Enna solra? Very simple...

ஷஹி said...

அன்பு அனானி என் கருத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை . திவ்யாவின் நடவடிக்கைகளை ஃப்ரெட்டி கோழைத்தனமாகப் பொறுத்துக் கொள்கிறான் என்று நான் சொல்லவில்லை . அவனுடைய கோழைத்தனம் தெரிவது வேறு இடங்களில்
.1. "ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது." -- ஏன் சங்கடம் அவனுக்கு ? அவனே தானே இந்த ஒரு நிலைப்பாட்டை அவளில் கொண்டு வந்தவன் ?

2. "திவ்யா தான் கட்டிடப்பணிகளை முழுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதில் ஆர்வம் இருந்ததுடன் அதைப்பற்றிய போதுமான அறிவும் இருந்தது, அவள் அதை எளிதில் புரிந்து கொள்வதுடன், நுணுக்கமான கேள்விகள் கேட்டு தெளிவு பெறுவதிலும் கருத்தாய் இருந்தாள் " இப்படியான ஒரு புத்திசாலியை அவனால் ஆள முடியவில்லை ..ஆராதிக்க முடியவில்லை . கோழைத்தனம் இது தான் .ஆனால் அவளை நீங்கவும் துணிவில்லை அவனுக்கு . இந்த மாதிரியான ஒரு மனைவி இருப்பது பெருமையான ஒன்றாக, சமூக மதிப்பு தரும் ஒன்றாக இருக்கிறது ஆனால் அவளிடம் செக்ஷுவலாக அட்ராக்ட் ஆக முடியவில்லை .

ஆண் எப்போதும் மேலே இருக்கத்தானே விரும்புகிறான் ? ஆமாம் ஆமாம் டபுள் மீனிங்கே தான். செக்ஸ் ,செக்ஷுவல் அட்ராகஷன் பேசியாகும் போது இது மிக முக்கியமான ஒரு செய்தி என்று தான் நினைக்கிறேன். சொல்லப் போனால் கதைக்கான காரணமே , கருவே இவன் இன்னொரு பெண்ணிடம் அட்ராக்ட் ஆனது தானே ? இதை மனதில் கொண்டு தான் சௌமியா பெயரிலேயே மென்மை , தன்மை இருப்பவளை சூஸ் செய்திருக்கிறான் என்பது தான் நான் நினைப்பது .

3."திவ்யா இருக்கும் போது ஆங்கில சேனல்களை தாண்டி நகராது." ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் அறிவாளிகள் என்பதல்ல ஆனால் இவனுடைய காம்ப்ளெக்ஸ் தெரிகிறது என்று தான் தோன்றுகிறது

4. "திவ்யாவிடம் சொல்லாமல் இருப்பது அவனுக்கு ஏனோ குற்ற உணர்வைத் தந்தது." இது ஒன்றும் நல்லதனமான குற்றஉணர்வாகத் தோன்றவில்லை ! ஆமாம் ! தவறு செய்து விட்டு அதை மறைக்கவும் திடம் வேண்டும் ..இவனுக்கு அது கூட இல்லை . கன்ஃபெஸ் பண்ணுவது என்று முடிவு செய்பவன் என்ன செய்ய வேண்டும் ? இனி நிகழாது என்றோ , பிரியலாமா என்றோ அப்படியும் இல்லை அப்படித்தான் செய்வேன் என்றோ பேசலாம் ! கூட்டுக்களவாணியாக நீயும் வா என்று மனைவியை அழைப்பது எத்தனை கேவலமான சிந்தனை ?இவனை விட கோழை யார் இருக்க முடியும் ?Insecurity , inferiority complex இவை எல்லாவற்றின் மொத்த வுரு ! எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கத்தூண்டுவது எது ? இன்செக்யூரிட்டி தானே ? மனைவியும் வேண்டும் , தோழியும் வேண்டும் , குற்றவுணர்வும் கூடாது ! அப்போ மனைவி இந்நேரம் எங்கிருப்பாள் என்று யூகித்து யூகித்து நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டியது தான் ?வீடு பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசப்ப்ட்டிருக்கிறது கதையில் ..இந்த மாதிரியான சொத்துக்களும் தான் மனிதனை சுதந்திரமாக வாழ விடுவதில்லை . பார்த்துப் பார்த்து கட்டின வீடு , சமூக அந்தஸ்து இதெல்லாம் வேண்டும் . சொத்து சேர்ப்பில் தானே பெண் அடிமையானதும் ?

5. ரொம்ப புத்தியசாலித்தனமாக ராகவன் தம்பதியின் வயதைப் பற்றின குறிப்பே இல்லாமலும் , Childless couple ஆக அவர்களை ஆக்கியும் விட்டார் ! குழந்தைகள் என்று வந்து விட்டால் "கலாச்சாரம்" காப்பாற்றி ஆகத்தானே வேண்டும் ?

6. When he is sexually attracted to somebody else then why still remain married ? or why did he not opt to wait for the phase to pass away and brought Divya also in to this sort of a meddle ? இப்படிப் பட்ட டிபேட்களை கிளப்புவது தான் ராகவனின் எண்ணம் என்றால் அவருக்கு வெற்றி தான் !

rajasundararajan said...

இரண்டாவது பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

ராகவன் இந்தக் கதையில் கையாள்கிற பாடுபொருள் முக்காலும் சத்தியமான ஒன்று. எல்லாக் குடும்பங்களிலும் அல்லது, at least, தனிமனித மன வக்ரங்களில் இது ஒரு existing fact.

இந்தப் பாடுபொருளுக்கு எடுத்துக்காட்டாகிற ஒரு வாழ்க்கை எனக்கு அமைந்தது. அதற்கு உகந்த ஒரு தகுதி என் மனைவிக்கும் அமைந்ததே இதில் முக்கியம். அவள் தானே தன் தேவைகளுக்குச் சம்பாதிக்க முடிகிற ஒரு மருத்துவர்: M.D.(O.G). (ஷஹி அனுமானிப்பதைப் பொய்யாக்கும் குழைந்தை பாக்கியமும் அவளுக்கு உண்டு.)

இந்தியக் குடும்ப அமைப்பு, எந்த ஒரு மதத்தையும் போலவே, இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகளால் ஆனது. பெண்ணடிமைத்தனம் மூலம் அதை நிர்வகிக்கிறோம்.

இதிலிருந்து விடுபட வாய்ப்புக் கிட்டிய நான் எனது 'நாடோடித் தடம்' ('தமிழினி' வெளியீடு) நூலில் இதுபற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் இதற்கான தீர்வு என்று அதில் எதையும் நான் வலியுறுத்தவில்லை. எனது வாழ்க்கையில் நிகழ்ந்தவைகளை அப்படியே பதிவு பண்ணி இருக்கிறேன்.

அந் நூலின் கடைசி அத்தியாயம் சக்தி வழிபாடு, பௌத்தம் இரண்டையும் சேர்த்துப் பேசுகிறது. அதற்காக, பெரியாரின் அடிப்பொடி ஒருவர் என் மீது வருத்தப் பட்டார். ஆனால் அந்த நூல் non-leaner அமைப்பில் எழுதப் பட்ட ஒன்று என்று அவர் உணரவில்லை. (கடைசி அத்தியாயம் நான் நம்பிக்கை நாடோடியாக இருந்த காலத்துக்கு உரியது).

அந்த நூலை வாசித்த கவிஞர் பத்மா (காகித ஓடம் blogger) நான் சாந்தி (என் மனைவி) மீதான என் அளப்பரிய காதலைப் பன்னிரண்டு இடங்களில் வெளிப்படுத்துகிறேன் என்று எனக்குத் தொலைபேசியில் சொன்னார். எனக்கு அது ஒரு தகவலாகவும் வியப்பாகவும் இருந்தது.

Open marriage-கு அவசியம் பரஸ்பரக் காதல் என்று தோன்றுகிறது.

என்றாலும் (ராகவன் போன்ற) எழுத்தாளர்கள் சற்றுத் தியானித்தால், குடும்ப உறவில் தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்து வரும் இந்தப் பிரச்சனைக்கு ஓரளவுக்குத் தீர்வு காட்ட முடியும் என்றே நான் நம்புகிறேன்.

எழுத்தாளர் ஒரு creatorதானே? அவர்ர்களால் முடியும்தான்.

ஷஹி said...

ராஜசுந்தரம் சார் அவர்கள் குறிப்பிட்டுள்ள புதுமைப்பித்தனின் " கல்யாணி " படித்தேன் . இதே கருவை விரித்து பெயர் நினைவில் இல்லை ஒரு தொடர் கதை, பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது ! டெல்லி குமார் நடிக்க சீரியலாகவும் வந்தது . கதையின் ஆழம் சிதைந்து போயிருப்பதாகத் தோன்றினதால் சீரியலை முழுமையாகப் பார்க்கவில்லை . அப்படியே " கல்யாணி " யை வைத்தே தான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது ! என்றோ புதுமைப்பித்தன் வைத்த புள்ளியில் அப்புறம் வந்த ஒருவர் கோலம் இட்டு விட்டார் . உங்கள் புள்ளிகளை நீங்களே விரித்து விடுங்கள் ராகவன் !
"Open marriage-கு அவசியம் பரஸ்பரக் காதல் என்று தோன்றுகிறது." சாரின் இந்தக் கருத்து எனக்குப் புரியவேயில்லை ! ஆனால் ஒன்று தங்கள் வாழ்வில் இந்த மாதிரியான சுதந்திரமும் , கட்டறுப்புகளும் முக்கியம் என்று நினைக்கும் எத்தனை பேர் அதே போன்ற ஒன்றை தம் குழந்தைகளுக்கும் சிபாரிசு செய்வர் ?
"இந்தியக் குடும்ப அமைப்பு, எந்த ஒரு மதத்தையும் போலவே, இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகளால் ஆனது. பெண்ணடிமைத்தனம் மூலம் அதை நிர்வகிக்கிறோம்." இதில் சுத்தமாக எனக்கு உடன்பாடு இல்லை ! மன்னிக்கவேண்டும் ராஜா சார் ...பா. ராகவனின் " நிலமெல்லாம் ரத்தம் " படித்திருக்கிறீர்களா ? ( கொஞ்சம் போல பயந்து கொண்டே தான் உங்களை அட்ரெஸ் செய்கிறேன் சார் !தெரியும் என்பதல்ல ! தெரிந்து கொள்ளலாமே என்று தான்.. என் போதாமைகள் வெளிப்படுவது பற்றின பயம் இல்லை - அவற்றை அடையாளம் கண்டு கொள்வது தான் ஐடியா )

ராகவன் said...

அன்பு அண்ணன், ஷஹி, அனானி அவர்களுக்கு...

இந்தக் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது உங்களின் பின்னூட்டங்கள். மிகவும் குறைவானவர்களே வாசிக்கும் என் வலைப்பக்கமாய் இத்தனை கனமாய் இருப்பதற்கு நீங்க மட்டும் தான் காரணம்னு நினைக்கிறேன்.

எனக்கு அண்ணனின் கருத்து சரியென்றே படுகிறது... குடும்ப அமைப்பும், மதத்தைப் போல ஒரு இட்டுகட்டப்பட்ட விஷயம் தான் எனப்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

மோனோகமி என்பதே ஒரு மித் என்ற ஒரு டிபேட் நடந்தது NDTV ல். கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர்... ஃபெமிலி வேல்யூஸ் பத்தி பேசுனாங்க! அப்படித்தான் conclude பண்ணாங்க... ஆனா எல்லாருமே வியூவர்ஸ் காக பேசினாங்களே ஒழிய... தனக்கு தோன்றியதை பேசலை... ரொம்ப பயஸ்டா ஆயிடுச்சு...

எனக்கு நிறைய கேள்விகள் open marriages பத்தி இருக்கு... அதை தேடுவதற்கான ஒரு முதல் முயற்சி தான் இது... தடுமாற்றங்கள் இருக்கு... அண்ணன் சொன்ன மாதிரி கொஞ்சம் தியானிச்சிருக்கணும்...விட்டுட்டேன்.

அனானியின் கூற்று அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியலேன்னாலும், என்னோட traces ஃப்ரெட்டியிடம் காணமுடிகிறது... என்பது நிஜம்...அது தவிர்க்கமுடியாது என்று நினைக்கிறேன்...

மற்றபடி எல்லோருக்கும் என் அன்பும், நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

Mahi_Granny said...

வழக்கம் போல் தலைப்பு அருமை. ராகவனிடமிருந்து ஒரு மேல்குடியினரின் கதை என்ற ஆச்சரியம் . இந்த முறை கட்டிடக்கலைத் துறை. பிரெட்டியை விட முற்போக்காய் சிந்திப்பவள் என்ற முறையில்' நான் பார்த்திருக்கிறேனா என்பது போன்ற கேள்விகள் சற்று ஆச்சரியம் . தொடரும் என்று நானும் நினைத்தேன் . வித்தியாசமாய் இருந்தது.

ராகவன் said...

அன்பு ப்ரோட்டோ அம்மா அவர்களுக்கு,

எப்படி இருக்கீங்க? சந்தோஷம் உங்களின் கருத்தையும் தொடர் வாசிப்பை பார்க்கும் போதெல்லாம்...

மேல்குடியைப் பற்றிய கதையா என்று என்னால் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை... இது பரவலாக பெரும்பாலானவர்களிடம் இருக்கிற ஒரு விஷயச்சிக்கல் தான்...

அப்புறம் கட்டிடக்கலையின் நுணுக்கங்களை நான் பேசாமல் ஒரு பார்வையாளனாய் அதனின் வெளிப்புறத்தை மட்டுமே பேசியிருக்கிறேன் இதில்...

அன்புடன் நன்றிகளும்

ராகவன்

ஆர். விஜயராகவன் said...

தேர்ந்த எழுத்துக்கான அத்துணை லாவகமும் முதிர்ச்சியும் அடைந்து விட்டீர்கள் ராகவன். வாழ்த்துகள். தலைப்புல உங்கள மிஞ்ச ஆளில்லை. ஆனா இந்த கதைக்கு ரொம்ப சாதாரணமான தலைப்பை வைப்பது போல நெற்றியடி கொடுத்துடீங்க. இந்த கதைக்கு வந்த பின்னூட்டங்கள் உங்களோட தீவிர வாசகனா என்னை ஆச்சரியப்படுத்தல. மாறாக என்னை சந்தோஷப் படுத்தி இருக்கு. பழகின கதை களம் ஆனா புதிய கதை வீச்சு.. உங்களோட இயல்பு மாறா கதை நடை.. ஆனா புதிய கதை சுழற்சி.. ரொம்ப refreshinga இருக்கு. வாழ்த்துக்கள்.

rajasundararajan said...

ஷஹி, you are quite a normal person. நாங்கள் அப்படி இல்லை என்பதே எங்கள் பிரச்சனை. நான் நினைக்கிறேன், "காற்றில் திறக்கும் கதவுகள்" காட்டுவது போன்ற கதை மாந்தர்களே, இற்றைக்கு, normal persons என்று. என்றால், ஷஹி, you are an ideal person. இது என் புரிதல். நல்லா இருங்க!

எனது இரண்டாவது பின்னூட்டத்தில், உறக்கச்சடவில், ஒரு தவறு நேர்ந்திருக்கிறது: /இந்தியக் குடும்ப அமைப்பு, எந்த ஒரு மதத்தையும் போலவே, இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகளால் ஆனது./ என்பதை, அருள்கூர்ந்து, /இன்றையக் குடும்ப அமைப்பு, எந்த ஒரு மதத்தையும் போலவே, இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகளால் ஆனது./ என்று திருத்தி வாசிக்கவும். 'இந்திய' reference படிதான் பேசுகிறோம் என்றாலும் இந்தியக் குடும்ப அமைப்பை மட்டும் குறை கூறுவது ஓரவஞ்சனைதான். உலகம் முழுவதும் குடும்பம் மதச்சாயலுக்குள்தானே உள்ளது? எஸ்கிமோக்களின் குடும்ப உறவையும் கூட கிறிஸ்தவம் இறுக்கத்துக்கு உள்ளாக்கிவிட்டதே!

ஐரோப்பியர்கள் குடும்ப அமைப்பும் அப்படித்தான் என்றாலும் மூளை-வெளி அளவில் அவர்கள் மத-இறுக்கத்தைத் தள்ளிநிறுத்தப் பழகி வருகிறார்கள். உறவுகள் நம்மைப் பிணிக்கிற/ பிணிப்படுத்துகிற அளவுக்கு அவர்களைப் படுத்துவதில்லை என்றே தோன்றுகிறது.

எனது "நாடோடித் தடம்" நூலில், ஓரிடத்தில், இப்படிச் சொல்வேன்: /'முன்நிறுவற் பணிகளில் ஈடுபட்டு ஊர்சுற்றித் திரிபவர்களின் குடும்ப உறவுகளே மணவரம்பு தாண்டிய தொடுப்புகளால் மிகுதியும் சிதைகின்றன' என்கிறது புள்ளிவிவரம். குவைத் பாலைவெளி GC-28 முன்முடுக்கத்துக்கு வந்திருந்த ஓர் ஆங்கிலேயப் பொறியாளன், "I kicked her in the ass." என்றான். என்னால் முடியவில்லை; முடியவும் முடியாது./

இப்படி, நான் ஒரு வசக்கப்பட்ட இந்தியனாக மட்டுமே வாழ்கிறேன்.

/ஆனால் ஒன்று தங்கள் வாழ்வில் இந்த மாதிரியான சுதந்திரமும் , கட்டறுப்புகளும் முக்கியம் என்று நினைக்கும் எத்தனை பேர் அதே போன்ற ஒன்றை தம் குழந்தைகளுக்கும் சிபாரிசு செய்வர்?/ என்னும் உங்கள் வினாவிற்கு நடிகர் கமலஹாஸன் விடையாகத் தெரிகிறார்.

இன்று சென்னைப் புத்தக விழாவிற்குப் போயிருந்தேன். எங்கள் பெண்ணும் (10 வயது) உடன் வந்திருந்தாள். 'தமிழினி' கடையில் ஒருவர், "உன் பெயரென்ன?" என்று அவளிடம் கேட்டார். அவள், கடையில் காட்சிப் படுத்தி இருந்த 'நாடோடித் தடம்' ஒன்றின் முன் அட்டையைத் திறந்து 'சௌந்தர்யாவுக்கு' என்று இருந்த சமர்ப்பணத்தைக் காண்பித்தாள்.

என் அருகில் எங்கள் கதை தெரிந்த நண்பர் ஒருவர், "அவளுக்குப் புரியாது இல்லையா?" என்றார். "ஆமாம். புரிகிற வயசுல அதிர்ச்சியாவும் இருக்கலாம். ஆனா செய்ய வேண்டியதைத்தான் செஞ்சிருக்கேன்." என்றேன்.

என் தேவைக்குத் திசை தேர்ந்து
அலைந்துகொண்டு இருந்தேன்.
ஒரு பாதை அமைத்தீர்கள்.
இன்று என்னைக் குற்றப் படுத்துகிறீர்கள்.
பாதை என்று ஒன்று இல்லாவிட்டால்
நான் வழிதவறியிருக்க மாட்டேன்.

பா. ராகவனின் "நிலமெல்லாம் ரத்தம்" பற்றி யாரும் சொன்னதில்லை. நன்றி. கட்டாயம் வாசித்துப் பார்க்கிறேன்.

ராகவன் said...

அன்பு விஜய்,

ரொம்ப சந்தோஷம்டா... உனக்கு இந்த கதை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...

தொடர்ந்து வாசி... உன் கருத்துக்களை பகிர்.

அன்புடன் நன்றிகளும்

ராகவன்

Anonymous said...

Hmm ...

Thirumanam, kudumba amaippu ellam ittu kattinathunna open marriage matum idathu kattinatha? Family, marriage matum illa Veedu, vayakkadu ellam manushan ittu kattinathuthan. Natural farming patti padichu paru. We have been trying it in the farm with hardly any success.. Anyway, just because something is a social cultural construct it need not be taken as oppressive to women.

Genetically speaking, social constructs are in favour of women, you could argue.

Shared marriage seems like an oxymoron to me, based on definitions. My opinion doesn't matter.

But the point is, any construct can be exploited , reinterpreted..

Both Freddy and Divya do that.

Anonymous said...

Enna Raghavan Sir,

"Katril thirakkum kathavugal" - Swamiji Nithayananda (kathavai thira katru varattum) pola super title kalakkureenga ponga.

ராகவன் said...

அன்பு அனானி 1 அல்லது 3,

ரொம்ப நாளா ஆளைக்காணலியேன்னு நினைச்சேன்... வந்துட்டீங்களா? ரொம்ப சந்தோஷம்...
நித்யானந்தா ???!!!

சிரிப்பா இருக்குங்க!

ராகவன்

rajasundararajan said...

/But the point is, any construct can be exploited , reinterpreted../

இது சரிதான்.

"Any organization will lead to corruption" என்பார் JK (ஜி. கிருஷ்ணமூர்த்தி). அது அவர் கண்டது.

/பாதை என்று ஒன்று இல்லாவிட்டால்
நான் வழிதவறியிருக்க மாட்டேன்./

என்கிற எனது வரிகள் reference சார்ந்துதான் எதுவும் தீர்மானிக்கப் படுகிறது என்று நான் கண்டது.

“Nay, I had not know sin, but by the law.” (Romans 7:7) என்கிறது விவிலியமும்.

இதெல்லாம் அவரவர்க்குத் தோன்றிய கருத்தாடல்கள். முற்றுண்மை என்று ஏதாவது உண்டோ?

குடும்ப அமைப்பு, பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான்; ஆனால் அவர்களை அடக்கியாளும் அமைப்பாய்த் திரிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்த பாலபாடம்தானே? காரல் மார்க்ஸை மேற்கோள் காட்டி இதைச் சொல்ல நேருமாயின் அது ஒரு விவாத வலுவிற்காகத்தானே?

ஒப்பன் மேரேஜை யாரும் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. குடும்ப அமைப்பில் கீறல் விழுதலும் நிகழ்கிறது; அதை ஒக்கிடுவதா, பிரித்து மேய்வதா என்றே பேசப் படுகிறது.

என்றால் எப்படி?

('பெயரிலி' எல்லாருமே அறியப் பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.)


/கதவைத் திற காற்று வரட்டும்/ என்பது பசுவையாவின் (சுந்தர ராமசாமியின்) கவிதை வரி. ஆனால் அதுவோ இப்படி முடியும்:

கதவைத் திற/ காற்று வரட்டும் என்ற/ காலம் போய்விட்டது/ திசைகளற்ற பேரோசை/ பெருவெளிக் காட்டி.// (தலைப்பு: 'கதவை மூடு')

ஆனால் இந்த வரி, இக் கதையை ஒட்டி, நித்யானந்தாவை நினைவில் இழுத்ததையும் ரசிக்க முடிகிறது.

shri Prajna said...

இந்த கதையோட நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நானும் படிச்சிட்டு சுகி கிட்ட சொன்னேன் அம்பை யோட touch இருக்கிறமாதிரி feel பண்ணேன்னு..ஷஹி comments படிச்சோனதான் தெரிஞ்சிது அவங்களுக்கும் அப்படி தோனிருக்குன்னு.ராகவன் இந்த style of writing நல்லாயிருக்கு. first time படிச்சப்போ முடிவு புரியல.அப்புறமாதான் ...

ராகவன் said...

அன்பு ஸ்ரீபிரஜ்னா,

உங்கள் கருத்துக்கும், வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அம்பையின் சாயல் எனக்கு எப்படி என்று புரியவில்லை... எந்தெந்த இடங்களில் என்பதும் புரியவில்லை...

ஏன் உங்களுக்கு அப்படித் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை... ஷஹிக்கும்...

அன்புடன்
ராகவன்

Iniya said...

ராகவன்,

ஃப்ரெட்டியின் அகச் சூழலை இக்கதையில் எடுத்தாண்டிருப்பது பிடித்திருக்கிறது ராகவன். நான் இக்கதையை அப்படி மட்டுமே அணுக நினைக்கிறேன்

ஃப்ரெட்டியை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அத்தனை எளிதாக judge செய்து அந்த character ஐ தூக்கி போட முடியவில்லை. மாறாக மனப் பிரச்சனைகளால் சூழப்பட்டு திணறும் அவனை ஏனோ பிடித்திருக்கிறது. எனக்கு இதை எழுதும்போது கீழ்கண்ட வரிகள் நினவு வருகிறது.

//'அதெப்படி, எதைப் பற்றி பேசினாலும் 'இது முட்டாள்தனம், இது புத்திசாலித்தனம், இது நல்லது, இது கெட்டது' என்று உடனடியாக உங்களால் தீர்ப்பளிக்க முடிகிறது? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ஒரு செயலுக்கான அகச் சூல்நிலைகளையெல்லாம் நீங்கள் ஆழ்ந்தறிந்து விடுகிறீர்களா? ஏன் இவ்வாறு நடந்தது, ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று உங்களால் நிச்சயமாக தீர்மானித்துவிட முடியுமா? அவ்வாறு செய்திருந்தீர்கள் என்றால் நீங்கள் எதைப் பற்றியும் முடிவு சொல்ல அத்தனை அவசரப்பட மாட்டீர்கள்.' - Johann Wolfgang von Goethe //

அவன் பிரச்சனை திவ்யா சௌம்யா இருவரையும் நேசிப்பதா? அவனுள் இருக்கும் Conventional versus unconventional thoughts இரண்டுக்கும் இடையில் நடக்கும் மனப் போராட்டமா? அவனிடம் தீர்ந்து போகாத காதலா? குற்ற உணர்வா? இது எல்லாமுமா? யோசிக்க யோசிக்க தலை சுற்றுகிறது.
இப்படி இத்தனையையும் சுமந்து கொண்டு வாழும் அவனை புரிந்து கொள்ளத்தான் தோன்றுகிறது.

இக்கதையில் எனக்கு புரிந்தது இது மட்டும் தான். என்னை பொறுத்தவரை இக்கதை நன்றாக எழுதப் பட்டிருக்கிறது.

rajasundararajan said...

சுருக்கமாக இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்றுதான் எனக்கு மலைப்பாக இருக்கிறது. ஏனென்றால், எனது 'நாடோடித் தடம்' also deals with the same subjects of this story - i.e. womanizing, extra-marital relationships etc. (even a house construction).

அந்தப் புத்தகம் இப்படி முடிகிறது:

||But the gene always find an easy way to survive. சர்க்கரை நோய் உள்ள ஓர் ஆள் அது இல்லாத ஓர் ஆளினும் வாழத் தகுதி (fitness) குறைந்தவர்; கண்பார்வைக் கோளாறின் ஒருவரும் அப்படியே. ஆனால் 'insulin' கண்டுபிடித்தும் 'கண்ணடை' அண்டக்கொடுத்தும் அதா அக் குறையுள்ள ஈன் (gene = மரபணு) தானும் தலைமுறை தாண்டி வருகிறது. மேலும், இருப்பு நீண்டுமுதிரும் ஓர் உடம்புக்குள் நிற்பதை விட, பிள்ளைப்பேறுகளாய்ப் பல்குவதே ஈனுக்கு இயல்பு; உகந்தது. பழையது அது, ஆனாலும் பழைமை பாராட்டுவதில்லை; தலைமுறை தாண்டுவதே அதன் நோக்கம். அதில் முறைநெறி (morality) பேணுவதும் இல்லை. ஆகவே அவன், நாடோடித் தடம் திரிந்து, திரிந்த-தலை தனதை, இனம்பெருக்கும் யோனி முலைகள் முன் குனிவுபடத் தோற்றான்.||

இட்டுக் கட்டிய கற்பனை என்பது இன்றைக்கு உள்ள குடும்ப அமைப்புதானே அல்லாமல் குடும்பம் தோன்றின/ தோற்றுவிக்கப்பட்ட காலத்தினது அல்ல.

"Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation." என்பது கார்ல் மார்க்ஸ் சொன்னது (Critique of Hegel's "Philosophy of Law").

இப்படித்தான் குடும்ப அமைப்பின் நன்மைகள் பற்றியும் நமக்கு வசதியாகப் பிரித்துப் பேசி வருகிறோம்.

இப்போது முழு மேற்கோளையும் பாருங்கள்:

"Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.

The abolition of religion as the illusory happiness of the people is required for their real happiness. The demand to give up the illusion about its condition is the demand to give up a condition, which needs illusions.

இது இன்னது என்று புரியும் என்று நம்புகிறேன். Although this is a criticism of religion, Marx is not without sympathy: people are in distress and religion provides solace, just as people who are physically injured receive relief from opiate-based drugs."

நான் தறுதளையாகத் திரிந்த போது குடும்பம் will provide solace என்று நம்பினேன். ஆனால் when family/ social realities prevented me from finding true happiness, I was already experienced enough to realize that it is not my happiness but the younger generations progress which is important. I refused to believe in next life, as religious people do (just as people who are physically injured receive relief from opiate-based drugs.)

Marx-ஐ மேற்கோள் காட்டும் இந்தப் பேச்சு எனது நூலில் இல்லை. (என் புத்தகத்தில், எங்கெல்ஸை மேற்கோள் காட்டிக் கம்யூனிஸ்ட்டுகளை வம்புக்கு இழுத்திருப்பேன். எங்கெல்ஸ், கம்யூனிஸ அமைப்பில் தானாகவே monogamy வந்து கூடும் என்பார். நான் அதை வினாவுக்குள் கொக்கியிட்டிருப்பேன்).

ராகவன் திவ்யாவின் மனவெளி பற்றிப் பேசவேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அது எப்படித் தெரியும்? 'அவளுக்கு தினேஷோடு தொடர்பு' என்பது கூட ஃப்ரெடியுடைய மனப் பிராந்திதானே ஒழிய, உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஏனென்றால், கதை ஃரெடியுடைய point of viewவில் எழுதப்பட்டு இருக்கிறது.

புதுமைப்பித்தனின் 'கல்யாணி'யில், க்ஷத்ரியன் ஆற்றைத் தாண்டிப் போவான்; அவள் இக்கரை தங்கிவிடுவாள். அதாவது, 'இந்தியக் குடும்ப/ சமூக அமைப்பில் ஓர் எல்லை வரைதான் பெண்களின் துணிச்சல் செல்லும்.' என்று அக் கதையில் உள்ளுணர்த்தப் படுகிறது. அது ஒரு தீர்வு அல்ல, நிலவரம்.

ராகவன் அதுபோல நிலவரத்தை மட்டும் சொல்லியும் விலகாமல் ஃரெடியின் பக்கம் சாய்ந்துள்ளார். அதனால் இது 'ஆணாதிக்கக் கதையாகி விடுகிறது. ஷஹியின் முதற் பின்னூட்டத்தில் இது வெளியரங்கப்படுத்தப் பட்டிருக்கிறது.

ராகவன் said...

அன்பு சுகிர்தா,

உங்கள் வாசிப்பும், கருத்தும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.

ஆழ்ந்த வாசிப்பும், கதாபாத்திர புரிதலும் மெச்சத்தகுந்தது.

அன்புடன், நன்றிகளும்

ராகவன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்லா இருக்கீங்களா ராகவன்?

நேற்றுத்தான் வாசிக்கமுடிந்தது-இரு வாரங்களாக யாத்திரை சென்றிருந்தேன்.

ஃப்ரெட்டியிடம் கதை துவக்கம் முதலே ஒரு அடிநாதம் ஓடிக்கொண்டிருப்பது நன்றாகவே வந்திருக்கிறது.அவன் செயல்களில் பூட்டியிருக்கும் வீட்டில் இல்லாத ஒருத்தியைத் தேடும் பரபரப்போ அடுத்தடுத்த செயல்களோ இல்லாமல் நிதானம் பரவியிருந்தது.அங்கேயே அவன் மனது திவ்யாவை அவன் ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. இருப்பது ஓர் ஒப்புக்குத்தான் என்ற சித்திரம் உருவாக்கி விடுகிறது.

ஆனாலும் தான் போய்க்கொண்டிருக்கும் பாதை எதுவென்று தெரிந்தும் திவ்யாவின் முன்னிரவு அறிவிக்கப்படாத தங்குதல் அவனைக் குமைக்கத்தான் செய்கிறது- ஒரு சராசரி ஆண்மனத்தின் ஆளுமை மனோபாவம்.

நீங்கள் சொன்னது போல மெத்தையில் மீனாவையும் உட்காரவைக்கும் உத்திதான் அது.மீனா உட்காராத வரை ஃப்ரெட்டிக்கு நிம்மதியிருக்காது.

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

எப்படி இருந்தது பயணம்...யாத்திரை?

உங்களின் தொடர்ந்த வாசிப்பும், கருத்துக்களும் எனக்கு கீற்றென சிறு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது... எப்போதும்.

அன்பும் நன்றிகளும் சுந்தர்ஜி!

ராகவன்

நிலாமகள் said...

எல்லாத் த‌ர‌ப்பையும் மெள‌ன‌மாக‌ க‌வ‌னித்து உள்வாங்கிக் கொண்டிருக்க என் போன்றோரும் ஒரு ஓர‌த்தில் இருக்கிறோம் ச‌கோ... இதொன்றும் நேற்று இன்று துவ‌ங்கிய‌தில்லை... அர‌ச‌ர்க‌ள், ப‌ண்ணையார், மிராசுதார் என‌ இன்றைய‌ ச‌ம்பாதிக்க‌ வ‌ழியிருக்கும் ஒரு ஆண் வ‌ரை ச‌க‌ஜ‌ம்தான். த‌ட‌ம் மாறாத‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் வாய்ப்பு கிடைக்காத‌வ‌ர்க‌ளே. எதிர்க்க‌வும் ச‌கிக்க‌வும் இய‌லாது மாண்ட‌வ‌ர்க‌ளும் எதிர்கொண்டு ச‌மாளித்து பெற்ற‌ குழ‌ந்தைக‌ளைக் க‌ருதி வாழ்ந்த‌வ‌ர்க‌ளும் காண‌க் கிடைக்கிறார்க‌ள்.

எல்லாம் போக‌ இன்றைய‌ த‌லைமுறையின‌ருக்கு எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸி தான்.

எல்லோர் விவாத‌ங்க‌ளும் அழ‌காக‌ ஆழ‌மாக‌ ஆமோதிக்கும் வ‌கையில் தான் இருந்த‌ன‌. எப்போதும் நீங்க‌ள் சொல்வ‌து போல் அவ‌ர‌வ‌ர் ம‌ன‌ப்பான்மை அவ‌ர‌வ‌ருக்கு நியாய‌ம்.

ந‌ட‌ப்புக் கால‌ ச‌மூக‌ப் பிர‌ச்சினையை சுட்டிக் காட்டுவ‌தோடு தீர்வைத் தேடுவ‌தும், தெளிவைத் த‌ருவ‌தும் ப‌டைப்பாளியின் க‌ட‌மைக‌ளுள் ஒன்றாகிற‌து.

எப்ப‌டியோ... க‌ம்பி மேல் ந‌ட‌க்கும் வித்தையை அனாய‌ச‌மாக‌ச் செய்திருக்கிறீர்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ள் அல‌சி ஆராய்கிறாங்க‌. த‌ன் சொந்த‌ அனுப‌வ‌த்தை அப்ப‌ட்ட‌மா ப‌கிர்ந்துகிறாங்க‌. புரிந்தும் புரியாத‌வ‌ங்க‌ தெளிவ‌டைய‌றாங்க‌. புடிக்காத‌வ‌ங்க‌ ஒதுங்கிப் போறாங்க‌.

சொத்தும் ச‌மூக‌ அந்த‌ஸ்தும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இட‌ற‌லாய் தான் இருக்கு இப்ப‌டியான‌வ‌ர்க‌ளுக்கு.

பாக்கிய‌ராஜ்‍ ‍மீனா காட்சி ரொம்ப‌ பொருத்த‌மான‌ உதார‌ண‌ம்.

க‌ம‌ல‌ஹாச‌ன் என‌க்கும் நினைவுக்கு வ‌ந்தார் ப‌டித்த‌போது.

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

உங்கள் வாசிப்பிற்கும், ஆழந்த அலசலுக்கும், கருத்திற்கும் என் அன்பும், நன்றிகளும்.

இது போன்ற நீண்ட கருத்தூட்டங்களை படிக்கும் போது கதை எத்தனை திறப்பாய் இருக்கிறது என்று புரிகிறது. எனக்கு வரும் பின்னூட்டங்கள் மூலம் நான் கற்று தேறுவது தொடர்ந்து நடக்கிறது.


அன்புடன்
ராகவன்

துளசி கோபால் said...

உங்க வலைப்பக்கத்தை இன்றுதான் முதன்முதலாக அறிந்தேன் வலைச் சரத்தின் மூலம்!

'அட'!!!! என்ற ஒற்றைச்சொல்லைவிட வேறொன்னும் சொல்லத்தோணலை!
நடையும் கருத்தும் அப்படியே மனசைக் கட்டிப் போட்டுருக்கு.

அறிமுகம் செய்த இந்தவார வலைச்சரம் ஆசிரியர் அப்பாதுரைக்கு நன்றிகள்.

கண்...... கொஞ்சம் சிரமப்பட்டுச்சு என்பது உண்மை.

எழுத்தின் அளவு கொஞ்சம் பெருசா இருந்துருக்கலாமோ?

அதுக்காக பெரிய எழுத்து கேக்கலை,கேட்டோ?