Friday, September 25, 2009

கவிதை ஒன்று...


புணர்ந்து எறிந்த
பாலிதீன் பைகள்
பூமியின்
சுவாசத் துளைகள் அடைக்கும்

சுருங்கிய தூரம்
அடர் குளிர், வாகனப்புகை
காற்றில் விஷம் தடவி
விருந்து சமைக்கும்

உடைகளில் கதறும்
வர்ணங்கள்
ரத்த நாளங்களில்
அமிலம் ஏற்றும்

சுரண்டிய படுகைகள்
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட்டில்
வருங்காலத்தை புதைக்கும்

சமூக அக்கறைக்
கவிதைகள் பக்கம் பக்கமாய்...
காகிதங்களில்
தூக்கிலிட்டு தொங்கும்
மரங்கள்!

5 comments:

kamaraj said...

தொண்ணூறுகளில் நாங்கள் போட்ட கோஷம் இது. அடர்த்தியான குரலில் உலுக்குகிற கவிதையாய்ப் பார்ர்ப்பதில், படிப்பதில்
அதிக உற்சாகமாக இருக்கிறது. தூக்கில் தொங்குகிற தாள்கள் எதாவதுசெய்யும்.

ராகவன் said...

காமராஜ்,

நன்றிகள் பல.

ராகவன்

அன்புடன் அருணா said...

/சமூக அக்கறைக்
கவிதைகள் பக்கம் பக்கமாய்...
காகிதங்களில்
தூக்கிலிட்டு தொங்கும்
மரங்கள்! /
ரொம்ப நல்லாருக்கு ராகவன்...பூங்கொத்து!

ராகவன் said...

அன்புள்ள அருணா,
தங்கள் பூங்கொத்துக்கு நன்றி! ஏனைய பதிவுகளையும் படித்துவிட்டு ஒரு உரைகல்லாய் மதிப்பிடவும்.

அன்புடன்,
ராகவன்

இரசிகை said...

arumaiyaai irukkunga.......