Monday, November 09, 2009

உதிர்ந்த பூவும், நாளும்

மழை ஒரு நாளை

உதிர்ந்திருந்தது
ஒரு பூவையும்
அந்த ஒற்றைப் பூவையும்
நாளையும்
கையில் எடுக்கிறேன்,
நாள் நழுவி விழுந்து
கொண்டே இருந்தது

பூவை மட்டும் கையில் ஏந்தி
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகளுக்கு
ஒப்பான அதன்
வர்ணங்களை எடுத்து
என் மீது அப்பிக் கொள்கிறேன்
இப்போது அந்த பூ
ஒரு எழுதாத காகிதம் போல்
இருக்கிறது

மீண்டும் அதை செடியில்
பொருத்திப் பார்க்கிறேன்
பொருந்திக் கொள்கிறது
வர்ணத்தை தொலைத்திருந்தாலும்
பூவின் அடையாளம் செடிக்குள்

எங்கிருந்தோ வந்த
பறவை ஒன்று
உதிர்ந்து கிடந்த நாளின் மீது
உட்கார்ந்தது
அந்த நாளை அதன் அலகால் கவ்வி
நாளைக்குள் எடுத்து
போட்டு விட்டு
பறந்தது

உதிர்ந்த பூவும், நாளும்
இன்னும் மிச்சமிருக்கிறது நாளைக்கும்

6 comments:

S.A. நவாஸுதீன் said...

//உதிர்ந்த பூவும், நாளும்
இன்னும் மிச்சமிருக்கிறது நாளைக்கும்//

இந்தக்கவிதை இன்றும் என்றும் நினைவில் நிற்கும் ராகவன்

காமராஜ் said...

//பூவை மட்டும் கையில் ஏந்தி
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகளுக்கு
ஒப்பான அதன்
வர்ணங்களை எடுத்து
என் மீது அப்பிக் கொள்கிறேன்//

விழுந்தாலும்கூட நாள் உங்களோடே இருக்கும், பூவின் சிரிப்பில்.

கருவை பாலாஜி said...

இது ஒரு நல்ல கவிதையா? சிறந்த படைப்பா சொல்லத் தெரியவில்லை? அடியேனுக்குப் புரியவில்லை. மன்னிக்கவும், முடிந்தால் பொருள் சொல்லுங்கள்..

நேசமித்ரன் said...

பச்சை குத்தும் மையிலா எழுதுகிறீர்கள் ராகவன்?

velji said...

வாழ்க்கையின் பாடங்களையும்,விதி வகுக்கும் நாட்களையும் புறந்தள்ளிப் போகிறது,இந்த கவிதை.
கவிதைக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

நேசன்...

//பச்சை குத்தும் மையிலா எழுதுகிறீர்கள் ராகவன்?//


இதைவிடவா வேறு பார்வை இருக்கு இக்கவிதைக்கு,ராகவன்?