Thursday, November 12, 2009

வாடகைக்கு....

இடமாறும்
கருப்பையில்
குறியைத்
தூக்கி போடும்
முன்னேற்பாடு
இல்லா
புணர்வு
கடனாய்
வழியும்
திமிறித் தெறியும்
விந்தில்
அப்பா, அம்மை
பாட்டனை
முதலாய்
சூல் வளர
ஊடு பிரியம்
உயிரைத்
திருப்பும்
மனசைக் கீறி
விதையைத்
தூவ
நன்னிலம்
புரண்டு படுக்கும்
அங்கம் குறை
அகழியில்
பேறு
அமிலத்தில்
உழலும்
ஜாமங்கள்
பிறாண்டும்
கழிவிரக்கம்
கண்களை
கவ்வும்
பிளவு வயிறு
துளிர்
தளிர்
உறவென்று….

5 comments:

காமராஜ் said...

//அமிலத்தில்
உழலும்
ஜாமங்கள்
பிறாண்டும்
கழிவிரக்கம்
கண்களை
கவ்வும்//

இரவுகளில் சூழ்ந்து கொள்ளும் இருள் மனவெளியின் நிறத்துக்கு மாறும்.
மந்தகாசமாகவோ, இல்லை புரண்டு புரண்டு நிமிடங்கலைத் தள்ளவோ.
இந்தக்கவிதை இரண்டாவது இடத்தில் இருந்து வாசகனை புரண்டு படுக்கசெய்கிறது.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நான் சுயம் இழக்கிறேன்! எதுவோ நடக்கிறது, நான் அறியாமல்.

துறந்து கிடக்கும் கடையில் கொள்வாரில்லாமல் நிறைகிறது ஒரு அங்காடித் தெரு.

வரத்து இல்லாமல் அழுகத் தொடங்குகிறது பொருட்கள், ஏந்தி ருசி பார்க்க கனிவுடன் கை பிடிக்கும்
அன்புக்கு நன்றி காமராஜ்!

பொருட்களின் தரம் பெரிய கவலையைத் தருகிறது, இயன்று, முயன்று திரிக்கும் கதைகளில் சுவாரசியக்குறைவு நிகழ்கிறது எல்லா தளத்தில் இருந்தும், கவலையுடன் தொடரும் வாடிக்கையாளரையாவது திருப்தி படுத்த வேண்டும் என்று ஆவலாதி அதிகமாகி நகம் தின்று ஒழுகும் குருதியுடன், விரல் சுவைக்கவும் தொடங்கிவிடுகிறேன்.

நட்புக்கு நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

velji said...

வாடகைக்கு...நான் வருவது மூன்றாவது முறை.முதலில் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.இரண்டாவது முறை நண்பர் காமராஜின் பின்னூட்டம் இருந்தது.அப்போதும் அவர் புரிந்து கொண்ட ஒன்றை நான் தவறவிட்டேன்.

விளக்கம் கேட்பது கூட கவிஞனை தொந்தரவே செய்யும்.அருமை என்று சொல்லிப்போவதும் துரோகம்தான்.

பெயர்தெரியாத பறவை இன்னும் என் வீட்டில் பறந்து கொண்டிருக்கிறது!

இதைப்போலவும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

காமராஜ் said...

என்னாச்சு ராகவன். ரொம்ப வேலையா இல்லை வெளியூரா.
பதிவில்லை. தொலைபேசியில்லை. உங்களைத்தேடுகிறது.

பா.ராஜாராம் said...

//பொருட்களின் தரம் பெரிய கவலையைத் தருகிறது, இயன்று, முயன்று திரிக்கும் கதைகளில் சுவாரசியக்குறைவு நிகழ்கிறது எல்லா தளத்தில் இருந்தும், கவலையுடன் தொடரும் வாடிக்கையாளரையாவது திருப்தி படுத்த வேண்டும் என்று ஆவலாதி அதிகமாகி நகம் தின்று ஒழுகும் குருதியுடன், விரல் சுவைக்கவும் தொடங்கிவிடுகிறேன்//

ரொம்ப சோர்வாய் இருக்கு ராகவன்.

இப்ப என்ன..எங்கே போக போகிறது எல்லாம்...நல்ல எழுத்து மக்கா,உங்களுது.எப்பவும் ஜெயிக்கும்.எந்த எதிர்பார்ப்பும் அற்று பதிந்து வாருங்கள்.டைரி எழுதுவது போல்.ஆந்து சோந்து உட்கார்கிறபோது நம்மை நாம் இதில் பார்த்து கொள்வோம் என.எழுத்தில்,உண்மையும் திறப்பும் இருக்கும் போது எதுக்கு மக்கா மனசு விடனும்.

cheer up..raagavan! .