Thursday, November 19, 2009

ஒரு கவிதை

எனக்கு
முன்பே
அறிமுகமானவர்
போல இருந்தவர்
எதிரில் வந்து கொண்டிருந்தார்

என்னை பார்த்ததும்
சிரிக்க நினைத்து
கையையும் உயர்த்தினார்
நானும்
சிரிக்க எத்தனித்து
கன்னச் சதையை
சிறிது தளர்த்தினேன்
கையையும் தூக்க
நினைத்தேன்

இதற்குள்
அவர் என்னை
கடந்து விட்டிருந்தார்
நானும்.

நல்லவேளை!
எந்த முகமனும்
தேவை இல்லாமல்
போய் விட்டது இருவருக்கும்.

7 comments:

பா.ராஜாராம் said...

வாவ்,ராகவன்.சாதாரண தருணத்தை சிலீரென முக்கியத்துவம் செய்து விடுகிறீர்கள்.நினைத்து கொண்டே இருக்கும்படி..beutiful moment & presentation!

ராகவன் said...

அன்பு பாரா,

நன்றிகள் பல! உங்களின் அப்பா படித்து அசந்து போய் விட்டேன்.
எனக்கும் இது போல எழுத வாய்க்கவேண்டுமேன வல்லமை தாராயோ என்று, யாதுமாகி நிற்கும் காளியைக் கேட்கிறேன்.

அன்பும், வியப்பும் ஒருசேர,
ராகவன்

இராகவன் நைஜிரியா said...

// நல்லவேளை!
எந்த முகமனும்
தேவை இல்லாமல்
போய் விட்டது இருவருக்கும். //

இது மாதிரி பல சந்தர்பங்கள் நேர்ந்து இருக்கின்றது..

அதை மிக அருமையாகச் சொல்லியிருக்கீங்க..

ஈரோடு கதிர் said...

மிக இயல்பாய் அமையும் அந்த சந்தர்ப்பத்தை அழகாய் பதிந்த விதம் அருமைங்க

காமராஜ் said...

இயல்பில் இருக்கும் அழகு, அழகுதான்.
எல்லாருக்கும் நேர்கிறதுதான். ஆனாலும்
பரா,பாரா இருவருவர் கைகளிலும் அது
சிக்கிக்கொண்டு சிகரம் தொட்டுவிடுகிறது.
எல்லாமே இங்கு தான் கிடக்கிறது, இந்த
மண்ணோடும் மனிதரோடும்.

மண்குதிரை said...

இயல்பா அழகா இருக்குங்க

ரசித்தேன் -:)

உயிரோடை said...

ராம‌ச‌ந்திர‌னா என்றேன்
எந்த‌ ராமாச‌ந்திர‌ன் என்று கேட்க‌வில்லை என்ற‌ ரென்ஜில் இருக்குங்க‌