Friday, November 20, 2009

அரணெனப்படுவது யாதெனின்....

முகப்பில்
தோட்டத்திற்காய்
இடம் விட்டு
கட்டிய சிறு வீடு
உள்ளிருந்தனர்
செட்டைக்குள் குஞ்சுகளாய்
என் இஷ்ட பந்துக்கள்

காய்கறிகளும், கனிகளும்,
பூக்களுமாய் கொல்லையும்
சிரித்தது
செழுமை ஊற
கிணறும் உண்டு

காபந்து பண்ணவேண்டி
சுற்றி சுவராய் எழு(ம்)ப்பினேன்
உள்ளே செடி, கொடிகளும்
அடை பறவைகளும்
விருத்திப் பெருகின

நாளாக
செடிகள், மரங்களாயின
சுவர் தாண்டி கிளைபரப்பி
வேர் நெடுகி
சுவர் அசைத்தன

சுவர் விரிந்து இடம்
கொடுத்தது
சுவரில் விழுந்த விதைகள்
முளைத்தன
சுவர் மேலும் நெகிழ்ந்தது

தோல் கழண்டு, எலும்பு
துருத்தி
தொட்டவுடன் உதிர்ந்தது
புறம்,
தேய்ந்து நலிந்தது சுவர்

பிள்ளைகள் வளர
சுவர் முழங்காலுக்குக்
குறுகியது

தாண்டுதல், தாவுதல்
எளிதானது

சுவரின் ஒளிவட்டத்தில்
நீர் ஊற்றி
அனைத்தது
விரைத்து கிடந்தது
அப்புறம்
ஒரு நாள்
இல்லாமல் போனது

மற்றொரு சுவர்
இன்னும் வலுவாய் கட்ட
ஆயத்தங்கள் நடந்தது.

9 comments:

மண்குதிரை said...

நன்று.

velji said...

'ஒரு கவிதை' யும் இப்போது படித்தேன்.

இரு கவிதைகளும் எளிமையாய் இதயம் வருடுகிறது.

காமராஜ் சொலவது போல் ப.ரா.,பா.ரா..இருவரும்.

தொடருங்கள்.

anujanya said...

வாழ்வைச் சொல்லும் நல்ல கவிதை ராகவன்.

அனுஜன்யா

உயிரோடை said...

குறியீட‌ சொல்லி இருக்கீங்க‌ளா என்ன‌?

பா.ராஜாராம் said...

ஒரு வாழ்வை குறுக்க தறித்து இருக்குறீர்கள் ராகவன்.

//தோல் கழண்டு, எலும்பு
துருத்தி
தொட்டவுடன் உதிர்ந்தது
புறம்,
தேய்ந்து நலிந்தது சுவர்//

வரிகளில் குலை நடுங்குது.பார்த்துக்கொண்டே இருக்கும் போது மின் மினியை கவ்வி செல்கிறது...குஞ்சுகளுக்கு இரவில் தீணி திணிக்க இயலவில்லை என ஒரு தூக்கணாங்குருவி.

வாழ்வு அடித்து கசக்குகிறது மக்கா!

S.A. நவாஸுதீன் said...

வாழ்க்கை பற்றிய உங்கள் பார்வை அதிசயிக்க வைக்கிறது ராகவன்.

காமராஜ் said...

ஒரு வீடு கணினி வரைகலையில் ஒரு பாசக்காரனாக உறுமாறும் சித்திரம் இது.
செட்டைக்குள் சொந்தங்களைப் பதுக்கும் உவமானம் கதகதக்கிறது.
இன்னொரு சுவர் திண்ணமுறக்கட்டுகிற எதார்த்தமும் இயற்கையும் வலிக்கவைக்கிறது.
அசத்துங்க ராகவன்.

ராகவன் said...

அன்பு மண்குதிரை,
அன்பு வேல்ஜி,
அன்பு அனுஜன்யா,
அன்பு லாவன்யா,
அன்பு பாரா,
அன்பு நவாஸ்,
அன்பு காமராஜ்,

உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் ஆயிரம் நன்றிகள்!

தொடர்ந்து வரவும், கொஞ்சம் பண்பட உங்கள் வார்த்தைகள், உற்சாகத் தோள் தொடல்கள்,
என்னில் உரமேற்றும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மண்குதிரை,
அன்பு வேல்ஜி,
அன்பு அனுஜன்யா,
அன்பு லாவன்யா,
அன்பு பாரா,
அன்பு நவாஸ்,
அன்பு காமராஜ்,

உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் ஆயிரம் நன்றிகள்!

தொடர்ந்து வரவும், கொஞ்சம் பண்பட உங்கள் வார்த்தைகள், உற்சாகத் தோள் தொடல்கள்,
என்னில் உரமேற்றும்.

அன்புடன்
ராகவன்