சண்டையிட்டு
தனிப்பட்டறை ஆரம்பித்தவனின்
கனவுகளில் கடிச்ச
புழுக்களாய் நெளியும்
சருகு விளையாட்டில்
இழந்த பணத்தின்
பசிக்கான வாய் பிளந்து
உயிர் விடும்
துக்கம் ஒழுகலில் கரையும்
கொலுசின் மணியை
பற்ற வைக்க வரும்
பட்டறைதாட்டியின்
சரிந்த ஒற்றை முலை
நைலக்ஸ் புடவையை
ஊடுருவி பார்க்கும்
கண்களில் எச்சில் வடியும்
சங்கர் ரெடிமேட்டில்
உள்ளாடை எடுக்க வந்த
தாட்டிகளின்
அளவு கேட்டு கள்ளமாய் சிரிக்கும்
வெங்கடேஷின் கோரப்பாய் படுக்கை
நனையும் மைதுன பொழுதுகள்
பேசி சிரிக்கும் முற்பகல்
நெய்க்கடலை பருப்பும்
ஒசித் தேநீரும்
இறைத்த நட்பில்
கிறங்கி ஓடிப்போகும் மாலையும்
உறைமெழுகின் ராத்துமான
சன்னத்தை திரட்டி
உருக்க வெற்றாய்
காற்றை பிதுக்கும்
வேலையில்லா பொழுதுகள்
இரவில் பூட்டை
ஆட்டி பார்த்து மூடி
வீடு திரும்புகையில்
பழையதுக்கு காராசேவு
வாங்கிட்டு வாப்பா
என்ற மகனின் ஏக்கத்தில்
கனத்து களைக்கும்
லௌகீகம்
(கடிச்ச - கடன்; சருகு - சீட்டு விளையாட்டு; தாட்டி - இளம்பெண்கள்; பட்டறத்தாட்டி - விலைமகள்; ஒழுகல் - குடி)
11 comments:
யதார்த்தத்தில் காட்மியம் பற்ற வைத்தது போல்
வாழ்த்துக்கள்
விஜய்
யாதர்த்தமான வார்த்தைகள் ராகவன். நன்றி.
ராகவன் அண்ணா...
நல்ல சொல்லாடல். நம்ம ஊர்பக்கம் இருக்குற தங்க பட்டறைக்காரர்களை நுட்பமாய் சொல்லியிருக்கிறீர்கள்.
கடிச்ச - கடன்; சருகு - சீட்டு -->> இதெல்லாம் நம்ம ஸ்ரீவி.யில் புழங்குகிற சொற்களா? தெரியாமல் போனது மனதை நெருடுகிறது.
என்ன ஒரு சொலவடைகள் .படிக்க படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது .
//பழையதுக்கு காராசேவு
வாங்கிட்டு வாப்பா
என்ற மகனின் ஏக்கத்தில்
கனத்து களைக்கும்
லௌகீகம்//
ஆரம்பம் வேறாக இருந்தாலும் முடிவு மனசைக் கனக்கச் செய்துவிட்டது ராகவன். அருமை.
மகனின் ஏக்கத்தில்
கனத்து களைக்கும்
லௌகீகம்
முடிவில் கவிதை வேறு பரிமாணம் கொள்கிறது..
ஒரு நாளையின் யதார்த்த நிகழ்வு கவிதையில் !
ரொம்ப நல்லாருக்கு ராகவன்.
உங்களின் பிரதானமான கவிதைகளில் இதுவும் ஒன்று.
ராஜசுந்தரராஜன் அண்ணன் உங்களுக்கு நம் க.நிழலில் ஒரு hint கொடுத்திருக்கிறார்.பாருங்கள்.
கவிதை நல்லா இருக்கு. ஆனா சில வார்த்தைகளுக்கு விளக்கம் தந்து இருக்கீங்களே அது என்ன மொழி?
nallaayirukku.........
கவிதை நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.
Post a Comment