கீழிருந்து
மேலாக இறங்குகிறது
இருட்டு
யாரும் உடன் இல்லை
தனிமையாய் உணரவில்லை
உடன் அழைத்து வந்த
வினோத குரல் கலவையின்
கெட்டித்தன்மை
ஆகிருதியை போல திடமாய் இருந்தது
அழைத்து வந்து அருகிருததி கொண்டேன்
ஆசுவாசமாய் இருந்தது
மரங்களின் இலைகளில் இசைத்த
ஒற்றை பானாழ் சுவரம் பிசகி
ஜதி தப்பி அடவிட்டது
சிதறிய மணிகள் சில்வண்டு
இரைச்சலென
பனையிலையில் வேய்ந்த கூரை
குடுகுடுப்பையாய் குறி சொல்லியது
காற்றை நிரப்பிய குடுவையாய்
காதோரத்தில் ஓங்காரம்
பின்னி பழகிய கால்களின்
தடத்தில் பிசுபிசுக்குகிறது
மையிருட்டு
ஒரு கூழாங்கல்லாய் புரட்டி விடுகிறது
தட்டு தடுமாறி
தலைகுப்புற விழுந்தேன்
படுக்கையை உதறிப்போட
நிலவும் இன்னும் சில
நட்சத்திரங்களும் உதிர்ந்தன
இரவு விழித்திருந்தது காவலாய்...
உறங்கி போனேன்!!
11 comments:
அருமை ராகவன்,
//கீழிருந்து
மேலாக இறங்குகிறது
இருட்டு
யாரும் உடன் இல்லை
தனிமையாய் உணரவில்லை//
நண்பரே... தவறாக நினைக்க வேண்டம்... இருட்டு மேலிருந்து வேண்டுமானாலும் கீழிறங்கும்... எப்படி கீழிருந்து மேலாக...நான் தவறாக புரிந்து கொண்டேனோ...
//கீழிருந்து
மேலாக இறங்குகிறது
இருட்டு
//
அருமையான சொல்லாடல்
//கீழிருந்து
மேலாக இறங்குகிறது
இருட்டு
//
:)
மொழியிலும் இருள் சொற்கள்
வலிந்து செய்ததோ தானாய் அமைந்ததோ கவிதை அழகு
ஆஹாஹா!
nalla thookam pola..!
எனது ஒவ்வொரு நாளும் ராகவனின் கவிதைகளோடு விடிகிறது. உங்கள் கவிதைகளை படிக்காத நாட்கள் என்னவோ செய்கிறது என்னை. நன்றி ராகவன்.
விடு பட்டு போயிருந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தேன்.
ஒண்ணு தெரியுது...
செம பார்ம்ல இருக்கீங்க ராகவன்!
தூள் பறத்துங்க மக்கா.
//படுக்கையை உதறிப்போட
நிலவும் இன்னும் சில
நட்சத்திரங்களும் உதிர்ந்தன
இரவு விழித்திருந்தது காவலாய்...
உறங்கி போனேன்//
இந்த இரவு இருக்கிறதே.
அதுக்கு வேறொன்னும் தெரியாது.மயக்கும்.தாலாட்டும்.
இருட்டோடு கை குலுக்கிய கவிதை!
அது உங்களுக்கு மட்டுமே சாத்தியம்
இருட்டோடு கை குலுக்கிய கவிதை!
அருமை..
Post a Comment