Wednesday, April 21, 2010

திறக்கப்படாத முத்தங்கள்...

முத்தங்களின் கதவுகள்
எப்போதும் மூடியே இருக்கிறது
ஒற்றி எடுத்த வெம்மை தடங்களின்
அடையாளங்களை பின்பற்றி போகையில்
உடன் வராத வார்த்தைகள்
வழிதெரியாமல் திண்டாடுகிறது
திறக்காத முத்தத்தின் கதவுகளின்
உள்ளே உனன்று கொதிக்கும் வார்த்தைகள்
வயோதிகம் வளர்த்து
கோல் ஊன்றி வெளி வருகிறது தட்டு தடுமாறி
மூடிய கண்கள் உள்ளே ஊழிக்கூத்தில் சிலசமயம்
முத்தங்கள் சிதறி விழுகின்றது பரல்களாய்
கனவுகளின் திறப்பில்
இரைந்த கிடந்த முத்தங்களை
சிப்பிகளென பொறுக்கி வைத்து
குலுங்கி சிரிக்கிறது ஒரு மாயகாரியின்
தடித்த உதடுகள்
ஒலியின் பாழ்வெளியில்
கரைந்து அரூவமாகும் முத்தத்தின்
சாயலில் சங்கு புஷ்பங்கள் மலர்கின்றது

13 comments:

AkashSankar said...

ராகவன்...

நான் சரியாக புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை... இதை கொடுக்கப்படாத முத்தங்கலாக நான் உணர்ந்துகொண்டேன்.... சரியா ?

VELU.G said...

பின்னிட்டீங்க

க ரா said...

அழகு கவிதை ராகவன். மிக்க நன்றி.

காமராஜ் said...

//முத்தங்கள் சிதறி விழுகின்றது பரல்களாய்
கனவுகளின் திறப்பில்
இரைந்த கிடந்த முத்தங்களை
சிப்பிகளென பொறுக்கி வைத்து
குலுங்கி சிரிக்கிறது ஒரு மாயகாரியின்
தடித்த உதடுகள் //

சரி அப்புறம்.

sathishsangkavi.blogspot.com said...

Superrrrr.......

ரிஷபன் said...

முத்த மழை உணர முடிகிறது நிஜத்தில் அல்லாமல் நினைவுகளின் பரணில்

பத்மா said...

ஒலியின் பாழ்வெளியில்
கரைந்து அரூவமாகும் முத்தத்தின்
சாயலில் சங்கு புஷ்பங்கள் மலர்கின்றது


வெள்ளையா நீலமா?:)))

முத்தங்களின் கதவுகள்
எப்போதும் மூடியே இருக்கிறது

எதனால்?:))

நல்ல கவிதை ராகவன் .அன்பின் வெளிப்பாடான முத்தம் முத்துப்பரலாய் இருந்தால் என்ன? பூவாய் இருந்தால் என்ன? இருத்தல் தான் முக்கியம் .

'பரிவை' சே.குமார் said...

முத்தக் கவிதை மொத்தக் கவிதைகளில் முதல்....
அருமை நண்பா....
நயத்துடன் எழுத்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

வணக்கம் எனது முதல் வருகை இது தொடருங்கள் மீண்டும் வருகிறேன்

நேசமித்ரன் said...

:)

நிறைய தட்டச்சுப் பிழைகள் ராகவன் கொஞ்சம் பாருங்களேன் சில இடத்தில் பொருள் மாறுகிறது

உயிரோடை said...

//முத்தங்கள் சிதறி விழுகின்றது பரல்களாய்//

மிக‌ க‌வ‌ர்ந்த‌து இந்த‌ வ‌ரி. க‌விதை ந‌ன்று

கபிலன் அருணாசலம் said...

it,s super my dear sir
kabilan arunachalam

Unknown said...

எனக்கு என்னவோ யோசிக்கறதே வேளையா வெச்சிருப்பிங்களோன்னு தோனுது, இவ்ளோ short periodல இத்தன கவிதை chance less சார். Good luck