Saturday, April 24, 2010

தசமம்...

சினிமா என்கிற மிகப்பெரிய ஊடகத்தின் எதிரே பரத்தியிருக்கும் ஒரு சிறு மணல் துகளின் அணுவின் அணுவாய் இருக்கும் நான் பத்து படங்கள் என்று எப்படி குறுக்க முடியும் என் ரசனைத் தெரிவுகளை என்று தெரியவில்லை... இது ஒரு 100 படங்கள் என்று இருக்கலாம் என்று தோன்றுகிறது... பட்டியலிட வசதியாய் இருக்கும்... தமிழ் படங்கள் மாத்திரமே என்பதிலும் எனக்கு கொஞ்சம் வருத்தமே... 

சினிமாவை இதில் தொழில்நுட்ப ரீதியாய் அணுகவில்லை... எனக்கு இருக்கும் சொற்ப தொழில்நுட்ப அறிவை வைத்து கொண்டு சிறந்த, முழுமையான சினிமாவை என்னால் இந்த பட்டியலில் சொல்ல முடியுமா என்பது கேள்விக்கு உரியதே... இந்த பட்டியலில் என்னை கவர்ந்த, என்னை பாதித்த சினிமாக்களின் ஒரு சிறு துளியை மாத்திரமே பிரதியிட முடிகிறது... வரிசை எப்போதும் தரவரிசையை நிர்ணயப்படுத்தவில்லை இங்கே... ஞாபகத்தின் அடுக்குகளில் பற்றியிழுக்கும் போது ஒரு கிளி எடுக்கும் ஜோசிய சீட்டுகளை போல தான் வருகிறது

உதிரிப்பூக்கள்







நூல்வேலி









அழியாத கோலங்கள்
 





இரும்புத்திரை










மறுபக்கம்












சுப்ரமணியபுரம்









பசங்க









மகாநதி




ஜானி


ஏழாவது மனிதன்


என் பட்டியலில் இது ஒரு புள்ளியே, இன்னும் வைக்க வேண்டிய புள்ளிகளும், அதன் மேல் போட வேண்டிய கோலங்களும் நிறைய... இந்த பட்டியலில் உள்ள படங்களை பற்றி தனித்தனியாக நான் பேச வேண்டும்...  ஒவ்வொரு படத்திலும் சொல்ல நிறைய இருக்கிறது... எனக்கு பாலச்சந்தர் பிடிக்காது இருந்தாலும்... நூல்வேலி பிடித்ததற்கான காரணங்கள், இந்த படத்தில் வரும் இன்னொசென்ட் சரிதாவும்... சரத்பாபுவும் தான்...
பாலமுரளிகிருஷ்ணாவின்  "மௌனத்தில் விளையாடும்" பாடல் நான் இன்றும் உருகி கேட்கும் அபூர்வமான பாடல்களில் ஒன்று...
அழியாத கோலங்கள் ஷோபா, சாந்தி கிருஷ்ணா, கமலஹாசன், வைத்யநாதனின் இசை (ஏழாவது மனிதன்), சேதுமாதவன், இந்திரா பார்த்தசாரதி வசனங்கள் (ராதாவின் அபாரமான நடிப்பு), மகேந்திரனின் வசனங்கள், பாலுமஹெந்த்ராவின் நினைவூட்டல், அசோக் குமார்,  சமகால சினிமாவின் பிரதிநிதிகளாய் இருக்கும், பசங்க, சுப்ரமணியபுரம் படங்களின் யதார்த்தம், காட்சி அமைப்பு, கதை சொல்லும் யுக்தி என்று அநேக காரங்கள் உண்டு...

இரும்புதிரை படத்தில் வைஜயந்தியும், சிவாஜியும் பேசிக்கொள்ளும் தருணங்கள், அந்த பார்வை பரிமாற்றங்கள், கிணற்றடியை கிணற்றங்கரை ஆக்கும் மென் தருணங்கள்... என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்றே சொல்வது... வைஜயந்திக்கும் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ரொமான்ஸ்... அத்தனை அழகு வைஜயந்தி...
எனக்கு சில நேரங்களில் சில மனிதர்களும், அவள் அப்படித்தானும் கூட ரொம்ப பிடித்த படங்கள்... பார்க்கலாம்... இது ஒரு தொடராக  கூட மாற வாய்ப்பு இருக்கிறது...
பத்மா என்னை அழைத்ததற்கு நன்றிகள் பல...

ராகவன்



10 comments:

காமராஜ் said...

கிட்டத்தட்ட கிட்டத்தட்ட என்ன நூரு சதவீதம் ஒரே அலைவரிசயில் வந்து விழுகின்றன ரசனைத்தேர்வு.
நூல்வேலி நான் இன்னும் முழுசாப்பாக்காத படம்.ஆனால் இஞ்ச் இஞ்சாக
சரிதா வந்து மனசுக்குள் இறங்கும் படங்களில் அதுவும்தான்.மௌனத்தில் விளையாடும் மன்சாட்சியே நான் பாலமுரளிக்கிருஷ்ணாவின் அத்துணை பாடலுக்கும் நான் அடிமை.ஒரே ஒரு பாடல் தவிர (குருவிக்காரன் பொஞ்சாதி) அது ஏன்னென்றே தெரியலசாமி.

பத்மா said...

நூல்வேலியும் அழியாத கோலங்களும் நானும் தேர்ந்தெடுத்து வைத்து இருந்தேன்.நூல் வேலி obviously சரத்பாபுவிற்காக .அழியாத கோலங்களின் "நான் எண்ணும் பொழுது....."
பாட்டு மனசை உருக்கும் ஒன்று .
அருமையான தேர்வுகள் ராகவன்
நன்றி நன்றி அழைப்பை ஏற்றத்திற்கு

AkashSankar said...

நீங்க சொன்னது சரியான வார்த்தை... இது புள்ளி தான்....

நேசமித்ரன் said...

//கிட்டத்தட்ட கிட்டத்தட்ட என்ன நூறு சதவீதம் ஒரே அலைவரிசையில் வந்து விழுகின்றன ரசனைத்தேர்வு//

அதே அதே !

அருமையான ரசனை

ரிஷபன் said...

நல்ல ரசனை!

அம்பிகா said...

//கிட்டத்தட்ட கிட்டத்தட்ட என்ன நூறு சதவீதம் ஒரே அலைவரிசையில் வந்து விழுகின்றன ரசனைத்தேர்வு//

\\ என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்றே சொல்வது... வைஜயந்திக்கும் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ரொமான்ஸ்... அத்தனை அழகு வைஜயந்தி...\\

`ஆசை கொண்ட நெஞ்சிரெண்டு
பேசுகின்ற போது’
என்ற பாடலும், அதற்கு வைஜெயந்தியின் மிக சுறுசுறுப்பான நடனமும் கூட ரொம்பவும்
பிடிக்கும்

'பரிவை' சே.குமார் said...

அருமையான ரசனை.

adhiran said...

santhi krishna. cahnse illai.!

kannam rendum santhana kinnam!

sivappumalli - list la serthirukkalaam. sivappu malli padam directer yarunnu theriyumaa?

raama naaraayanan. !

thanks ragavan.

ராகவன் said...

அன்பு நண்பர்களுக்கும்,

என்னை அழைத்த பத்மாவிற்கும் அனேக நன்றிகளும், அன்பும்.

ஆதிரம் சொன்னது போல சாந்தி கிருஷ்ணாவை குறிப்பிட்ட நான் பன்னீர் புஷ்பங்கள் பற்றி பேச மறந்து விட்டேன்... சாந்தி கிருஷ்ணா முழுதாய் வியாபித்ததால் இருக்கலாம்... ஒரு காலத்தில் கட்னா சாந்தி கிருஷ்னாவ போல பொண்ணதான் கட்டனும் இல்லேன்னா கல்யாணமே வேணாம்னு சொல்லியிருக்கேன் அம்மாவிடம்... வளர வளர முக்யத்துவங்களும், தேவைகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

ஹலோ ராகவன். சாந்தி கிருஷ்ணா என்று பேச்சு வந்தவுடன் திரும்ப அலையடிக்கிறது. நானும் அப்படியேதான் அலைந்தேன் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும். அந்த கொடைக்கானல் ஆங்கிலப்பள்ளி சீருடையில் ரெட்டைச்சடை போட்டுக்கொண்டு ரொம்பப் பேசாமல், ஒருகணம் கூட ஓயாது பேசிக்கொண்டிருக்கும் கண்ணுக்காரி சாந்திக் கிருஷ்ணாவை அதற்கப்புறம் பார்க்ககொடுக்கலை. ஆனால் என்ன ஆச்சரியம் பம்பாயில் (ஆமாம் அப்போது அதற்கு அப்படித்தானே பெயர்) நேரே பார்த்தேன்,என் தங்கையிடம் சொன்னபோது அவள் ஒத்துக்கொள்ளவில்லை.மீண்டும் ஊருக்கு வந்த கொஞ்ச நாளில் sv சேகரோடு மணல்கயிறு நடித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு காமெடியனாகக்கூட ஒத்துக்கொள்ள முடியாத ரெண்டுபேரில் அவரும் ஒருவர்.இன்னொருவர் ss சந்திரன்.வாய், வகுறு,காமெடி,அரசியல் எல்லாமே ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி.
அப்றம் வசந்தோட புண்ணியத்தில் மீண்டும் ரகுவரனுக்கு ஜோடியாக வந்ததும் அப்பாடவென்றிருந்தது.ஆதலால் அந்தப்படத்தில் வந்து training எடுத்த சிம்ரனும்,சூரியாவும் எனக்கு கெஸ்ட் ரோல்ல நடிச்சாப்ல ஃபீலிங் இருந்தது.