Tuesday, April 27, 2010

பறவையின் நோக்கு...

மேலிருந்து கீழ்நோக்கி
தேடும் பறவைகளின்
கண்களில் நீர்நிலைகளோ
அடர் மரங்களோ அல்லது
ஓடும், ஊரும் இரையோ தட்டுப்படலாம்
அல்லது
வற்றிய ஊற்றுகளோ,
மழிக்கப்பட்ட காடுகளோ,
கரையில் இறந்து ஒதுங்கும்
மீன்களோ, வாய்பிளந்து இறந்து கிடக்கும்
கால்நடைகளோ தென்படலாம்
அல்லது
பசிக்காத வயிற்றில் செரிமானம் ஆகாமல்
இறைந்து கிடக்கும் உணவு தானியங்களோ
அழுகி கிடக்கும் உடல்களோ
ஒரு சேர காணக்கிடைக்கலாம்
அந்த கொலை பறவைகளும்
கழிவகற்றும் பறவைகளும்
இன்ன பிற பறவைகளும்
எதற்காகவோ தரை இறங்குகின்றன
மீண்டும் எழும்பி பறக்கின்றன
தத்தமது கவிதாதர்மங்களின் விதி எழுதி
முற்றுப்புள்ளிகள் வைக்காது...

7 comments:

நேசமித்ரன் said...

//எதற்காகவோ தரை இறங்குகின்றன //

:)

நல்லா இருக்குங்க ராகவன்

adhiran said...

anaiththaiyum padiththukkondirukkiren. nanraaka irukkirathu. nanri.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ரிஷபன் said...

கடைசி வரிகளில் மனசை அள்ளிக் கொண்டு போய் விட்டது..

காமராஜ் said...

இரண்டிலும் உடுக்கிசை பின்னலாய் கேட்கிறது.ஒரு முறையாக முடிந்துபோகாத வாசிப்பனுபவம்.

பத்மா said...

தத்தமது கவிதாதர்மங்களின் விதி எழுதி
முற்றுப்புள்ளிகள் வைக்காது..

முற்று புள்ளிகள் வைப்பதா? வைத்துகொள்வதா,வைக்கப்படுவதா?
நல்ல இருக்கு பார்வை ராகவன்

உயிரோடை said...

இரு வேறு முர‌ணான‌ சுழ‌லை சொல்லி, இக்க‌ட்டாக‌ முடித்திருக்கின்றீர்க‌ள். க‌விதையாக‌ காண‌ முடிய‌வில்லை. அதையும் தாண்டிய‌து.. இது