நிக்கோலை 
எனது வலிமையான 
பேக் ஹேன்ட் வீச்சில் 
வீழ்த்துகிறேன் 
அந்த ஜெர்மன் வீரன் 
என் பந்தை எடுக்க 
தலைகீழாய் விழுந்து 
ஒரு ட்ராப் போடுகிறான் 
முன்னால் ஓடி வந்து
அனாயாசமாய் 
வாளியில் பின் தள்ளுகிறேன் 
தடுமாறுகிறான் 
நீண்ட நேரம் அவனை 
அங்கும் இங்கும் ஓடி 
மூச்சு வாங்க வைத்து விட்டேன் 
இரண்டாவது நேர் செட்டில் 
தோற்கிறான் பரிதாபமாய் 
விளையாடினது போதும் 
வா சாப்பிட என்ற அம்மையின் 
குரலுக்கு 
ப்ளே ஸ்டேஷனை 
ஆப் செய்துவிட்டு
சாப்பாட்டு மேசையில் 
என் சக்கர நாற்காலியை 
பொருத்துகிறேன்
 
 
11 comments:
ராகவன்
பின்னூட்டம் பிறகு இது வருகைப்பதிவுங்க
நீங்கள் என்ன விருச்சிகராசியா ராகவன்?
கடைசில் எப்போதும் ஒரு சுறீர்......
நல்லாருக்கு ராகவன்!
கடைசி வரிகள் விரும்பி திணிக்கப்பட்ட சோகமென படுகிறது எனக்கு ராகவன்.
எதிர்பாராத முடிவு தருவதற்காக அந்த கடைசி வரியா.. ராகவன்!
ராகவன் வணக்கம்.
இந்தக்கவிதையின் கடைசி வரி கணமாக இருக்கிறது.
ம்ம்ம் மனதைக் கலக்கும் கடைசி வரி.
மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதையை நினைவுபடுகிறது ராகவன். ஊனத்தை நினைவுகூரும் அவர் வரிகள் வேண்டாம்.
முதலில் கனவை சொல்ல வருவது போல் பட்டது. நல்ல கவிதை ராகவன். வாழ்த்துகள்
கடைசி வரியைப் படித்து முடித்ததும், மனம் கனக்க system த்தை ஆஃப் செய்தேன்!!
கவிதை நல்லா இருக்கு.
நான் எழுதும் போது தெரியவில்லை .ஆனால் படிக்கும் போது தோணுகிறது, நம்மில் இல்லாதது தான் கனவில் பெரிதாய் தோன்றுமோ என்று !
ஒரு மாற்றுத்திறனாளரின்/மறுக்கப்பட்டவரின் பார்வையில் சொல்கிறேன் !
கொஞ்சம் மனசு கனக்கத்தான் செய்கிறது
Good Raghavan, keep it up
Post a Comment