Saturday, June 12, 2010

யானை என்பது யாதெனின்!

பறவைகள்
இல்லாத
வெளிர் வானமென
வெறிச்சென்று இருந்த
தெரு வழி
கடக்கிறது
கருகிய ஞாயிறென
ஒரு யானை

கதவுகள் இறுகி
சாத்திய வீடுகளில்
புழுங்கி கிடக்கும்
நிசப்த சுவர்களை
மோதி சிதறுகிறது
மணியோசை

மெதுவாய் நகரும்
வயிறு பெருத்த
பிற்பகலின்
மீது இறங்கும்
பசித்த வன்மம்
நறநறக்கும் மணற்துகள்கள்

யாசிப்பின்
வெப்பம் தணியாது
கனத்து அசையும்
கையில்
விற்பனைக்கு
ஒளிந்திருக்கும் சுபகணங்கள்

அயர்ந்து உறங்கும்
பகற்கனவுகளின் நுனியில்
அங்குசம் பாய்ச்சும்
பாகனின் உடற்மொழி
சிதைந்து நசிவுறும்
வன காதலிகளின்
வர்ணப்பூச்சு

விடிய காத்திருக்கும்
முட்படுக்கையில்
குன்றாய் சமையும்
கோயில் யானைக்கு
குறை ஒன்றும் இல்லை
கோவிந்தா!
























 

 

12 comments:

AkashSankar said...

பாவம் யானை...கவிதை சொல்லுகிறது... உருவம் பெரிதானாலும் அதற்கும் சுமை அதிகம் தான்...

க.பாலாசி said...

எவ்வளவு வலிகளை இந்தக்கவிதை சுமந்துள்ளது.. கடைசிவரியில் கலங்கியேவிட்டேன்...

க ரா said...

வலிகள் சுமந்த ஒரு கவிதை மறுபடியும் (-:

ரிஷபன் said...

அயர்ந்து உறங்கும்
பகற்கனவுகளின் நுனியில்
அங்குசம் பாய்ச்சும்
பாகனின் உடற்மொழி
சிதைந்து நசிவுறும்
வன காதலிகளின்
வர்ணப்பூச்சு
ஆஹா.. இந்த வரிகளில் என்ன ஒரு அழுத்தம்.. அர்த்தம்..

Thenammai Lakshmanan said...

விடிய காத்திருக்கும்
முட்படுக்கையில்
குன்றாய் சமையும்
கோயில் யானைக்கு
குறை ஒன்றும் இல்லை
கோவிந்தா!//

வனங்களுக்கே திரும்ப விட்டால் நலம்தான் ...அவைகளின்வாழிடத்தில் இருந்து பெயற்காமல்

Ashok D said...

அற்புதம் ராகவன்... No words to say
கொஞ்ச நேரம் யானையாய் உணர்ந்தேன்...வலி..

அழகான வார்த்தை கோர்ப்புகள்

தேனம்மை சொல்வது போல காட்லயே விட்டுற்லாம்

அம்பிகா said...

\\யாசிப்பின்
வெப்பம் தணியாது
கனத்து அசையும்
கையில்
விற்பனைக்கு
ஒளிந்திருக்கும் சுபகணங்கள் \\
கனத்து அசையும் கையில் காசை வைத்து விட்டு, ஆசீர்வாதம் வாங்குபவர்களுக்கு், இந்த வலிகள் புரிவதில்லை.

\\கோயில் யானைக்கு
குறை ஒன்றும் இல்லை
கோவிந்தா!\\

சுந்தர்ஜி said...

பறவைகள்
இல்லாத
வெளிர் வானமென
வெறிச்சென்று இருந்த
தெரு வழி
கடக்கிறது
கருகிய ஞாயிறென
ஒரு யானை

என்ன ஒரு ப்ரயோகம் ராகவன்!

சிதைந்து நசிவுறும்
வன காதலிகளின்
வர்ணப்பூச்சு!

ரசித்தேன் ராகவன். யானையைப் பிடிக்காதவர்களுக்கு இக்கவிதை பிடிக்காது.

நேசமித்ரன் said...

அடை வைத்திருந்தீர்களா ராகவன் இத்துணை நாளும்

பாலா said...

யப்பா அசந்துட்டேன் சாமி

உயிரோடை said...

//புழுங்கி கிடக்கும்
நிசப்த சுவர்களை
மோதி சிதறுகிறது
மணியோசை //

//மெதுவாய் நகரும்
வயிறு பெருத்த
பிற்பகலின் //

அட‌ எவ்வ‌ள‌வு அழ‌கான‌ ப‌டிம‌ம். ந‌ல்லா எழுதறீங்க‌ ராக‌வ‌ன் தொட‌ர்ந்து ந‌ல்ல‌ க‌விதைக‌ளை தாங்க‌

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக அருமையான கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்