Friday, July 02, 2010

நிறப்பிரிகை...

வண்ணத்துப்பூச்சி வேண்டும்
என்று தொலைபேசியில்
கேட்டவளுக்கு
எப்படியாவது பரிசளித்து
விடவேண்டும்
அதுவும் அவள்
ரொம்ப நாட்கள் வச்சிக்கிற மாதிரி
இருக்கணும் என்று
சுவரில் ஒட்டுவது போலுள்ள
தத்ரூபமான வண்ணத்துப்பூச்சிகளை
வாங்கி அனுப்பினேன்
அழகிய பரிசுப்பொட்டலத்தில்
கடல் கடந்து
கையில் கிடைத்ததும்
ஏம்ப்பா மூடி வச்ச?
மூச்சு விட முடியாம
வண்ணத்துபூச்சி எல்லாம்
செத்து போச்சுப்பா... 
என்றாள்
வண்ணத்துப்பூச்சிகளின் உலகம்
அறிமுகம் ஆனது எனக்கு...

8 comments:

Mohan said...

இந்தக் கவிதையைப் படித்து முடித்தவுடனே வண்ணத்துப்பூச்சியைப் பார்க்க வேண்டுமென்பது போல் இருக்கிறது.அருமை!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரசிக்கும்படியாக இருக்கிறது. வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

க ரா said...

அருமைங்க ராகவன்.

'பரிவை' சே.குமார் said...

வண்ணத்துப்பூச்சிக்கு வண்ணத்துப்பூச்சி அனுப்பிய உங்கள் கவிதை அருமை ராகவன். ஆமா வலையின் பின்புலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருமையா இருக்கு.

கே. பி. ஜனா... said...

வண்ணத்து பூச்சிகளின் உலகத்தை இதைவிட மென்மையாக உணர்த்த முடியுமா? அருமையிலும் அருமை!--கே.பி.ஜனார்த்தனன்

ரிஷபன் said...

தத்ரூபமான கவிதை!

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_02.html

உயிரோடை said...

அருமைங்க ராகவன்