Saturday, July 10, 2010

அவள்

டிராஃபிக் சிக்னலில்
நின்ற போது
அருகிலும், முன்பாகவும்
நின்றிருந்த வாகனங்களின்
கண்ணாடியை இறக்க சொல்லி
காசு கேட்டு கொண்டிருந்தாள்
ஒரு திருநங்கை
உதடு பிதுக்கியவர்களையும்
இல்லை என்று கை விரித்தவர்களையும்
விடுவதாயில்லை அவள்
விரும்பி கொடுத்தவர்களும்
விரும்பாமல் கொடுத்தவர்களின்
நாணயங்களில் வித்யாசம்
இருக்கவில்லை அவளுக்கு
எல்லோரையும் தொட்டு
திருஷ்டி கழித்தாள்
விலகி முந்தானையையும்
இடுப்பையும் பார்த்தவர்களின்
எச்சில் விழுங்குதலும் கடந்து
என் வாகனத்தை அடையும்முன்னே
பச்சை விளக்கு எரிய
நிம்மதியாய்
வாகனத்தை நகர்த்தினேன்

8 comments:

நேசமித்ரன் said...

//என் வாகனத்தை அடையும்முன்னே
பச்சை விளக்கு எரிய
நிம்மதியாய் வாகனத்தை
நகர்த்தினேன் //

இந்த வரிகளை கழித்து விட்டால் அற்புதமான கவிதை ராகவன்

இதே வரிகளின் சாயலில் முன்னம் சல்மாவும் சமீபமாய் வலையுலகில் வடகரை வேலனும் எழுதி இருக்கிறார்கள்

ரொம்ப பிடித்திருக்கிறது சமீபமான உங்கள் கவிதைகளிலேயே இந்தக் கவிதை

அந்த திருஷ்டி கழித்தலில் துலங்கும் உணர்வுக்கு அந்த திருநங்கையின் காய்ப்பேறிய உள்ளங்கைக்கு ஒரு சகோதர முத்தம்

க ரா said...

அருமை இராகவன்.

ரிஷபன் said...

அந்த நேரத்தில் நிகழும் மனப் பிரளயங்களைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்..

காமராஜ் said...

அன்பின் ராகவன்.

நேசன் சொன்னது போல அந்த வரிகளை எடுத்துவிட்டால். கவிதை மெருகுகூடும்.
அவர்கள் பிரசன்னமாகும் போது மொத்த சூழலும் ஒரு சேரக்குவியும்.அறியும் ஆர்வமும்
அருகில்வரக்கூடதென்கிற கலக்கமும் கூடவே வரும்.ஒரு கவிஞனாய்அலாதியாய் நின்று பார்க்க இயலாத தவிப்பு எல்லோருக்குள்ளும் வரும். ஒரு
மத்தி மனிதனாய் எல்லோருக்குள் உருளும் இந்த உருளை, கீச் மூச் சத்தமிலாது.யானை
பார்த்தலாக,சாமி பார்த்தலாக வலம் வரும் அவர் மேலெல்லாம் கண்களாக.
இந்தக்கவிதை உங்களை நேசிக்க வைக்கிறது. பின்னூட்டத்தின் மூலம் நேசா.. உங்களை அன்னாந்து பார்க்கவைக்கிறது.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ராகவன்! also, i go with nesan.

nallaarukkeengalaa raagavan? (some translation problems raagavan)

பா.ராஜாராம் said...

kaamu's pinnoottaam also fantastic!

'பரிவை' சே.குமார் said...

nalla kavithai ragavan.

thiru. nesamiththiran karuththu unmai ragavan.

vazhththukkal.

மாதவராஜ் said...

கவிதை வரிகளை உட்கொண்டு நிற்கிறது தலைப்பு.

சிவப்பும், பச்சையுமாய் கலந்திருக்கும் அவளின் வண்ணங்களைப் பேசியிருந்தால், டிராபிக் சிக்னல் இன்னொரு தளத்துக்கு சென்றிருக்குமோ!

ரசித்தேன் ராகவன்!