Friday, July 23, 2010

மரப்பாச்சி...

மரங்களைப் பற்றி

உங்களுக்கு
தெரிந்திருக்க கூடும்
அல்லது
தெரியாதிருக்க கூடும்

உதிர்காலங்களில்
குப்பை சேர்த்த காரணத்திற்காய்
நீங்களோ அல்லது
அவற்றை பெருக்கச் செய்த
வேலைக்காரியோ
சபித்திருக்க்கூடும்

சன்னலுக்குள் நுழையும்
அல்லது
மேலே ஒளி ஒலி கடத்தும்
கம்பிகளுக்கு இடைஞ்சலாய்
இருந்திருக்கும் நேரங்களில்
கரங்களை இழவறுத்த கதைகள்
பற்றி நீங்கள் பேசியிருக்க்கூடும்

பறவைகளின் எச்சங்களும்
சப்தங்களும் உங்கள்
பளிங்கு விழுங்கிய தரைகளை
அசுத்தம் செய்த்தற்கோ
அல்லது
புலர்காலையில் உங்கள்
உறக்கத்தை கெடுத்ததற்கோ
கல்லெறிந்து
காயப்படுத்தி இருக்கக்கூடும்

உங்கள் கட்டிடங்களின்
பக்கவாட்டு சுவர்களையோ
சுற்றுச்சுவர்களையோ
அதன் வேர்கள் ஊடுருவி
அசைத்திருக்கலாம் என்ற
காரணத்தினால்
மரம் வெட்ட வேண்டி
அழைத்த ஆட்கள்
கூலி அதிகம்
கேட்ட்தற்காய் அலுத்து
கொண்டிருக்க கூடும்

எதுவாய் இருந்தாலும்
இப்போது
இங்கு மரம் இல்லாதிருப்பது
உங்களுக்கு எப்படியோ
எனக்கு நீங்கள்
குறியற்று இருப்பதென
தோன்றுகிறது

4 comments:

பத்மா said...

ஐயோ என்ன இத்தனை கோபம் ராகவன் ?
கவிதை அருமை ..
பொட்டில் அடிக்கிறது

க ரா said...

ரெளத்ரம் தெறிக்கிறது கவிதையில்...

காமராஜ் said...

ராகவன்
வாராய்... வாராய்ன்னு
மகுடிக்குரலால் கூப்பிட்டுக்கொண்டுபோய்
தள்ளிக்கூட விட்டிருக்கலாம்.
யப்பா...
.

மரம் நம்மிலும் மூத்தது.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை ..
பொட்டில் அடிக்கிறது ராகவன்.