வெளிச்சக்குடுவையில் பொத்தல் விழ
பாதரச ஒழுக்காய் வழிந்து
தீர்ந்து கொண்டிருந்தது பகல்
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு வர்ணங்களை
கரைத்துக் கொண்டிருந்தது
ஒரு ஓவியனைப் போல
பார்வைகள் ஊடுருவமுடியாமல்
மெல்லிய கருந்திரைச்சீலைகளை
அடுக்கடுக்காய் தொங்கவிட்டுக்கொண்டிருந்தது
சாபங்களின் கறை நெருக்கும் இரவு
பிடுங்கப்பட்ட கண்களில் இருந்து வழியும்
குருதி கருப்பு வர்ணத்தில்
ஒரு மசியென மேலும் படர்ந்தது
தற்கொலைக்கு முயன்றவனின்
உத்தரம் வெறித்த விழிகளென
இருளை துளையிடும்
விளக்குகள் கழிவிரக்கத்தில்
கசிந்து கொண்டிருந்தன.
பகலின் குரல்வளை
இறுக்கி நெரிக்கப்பட்டு
காற்றுக்குழாயின் விதைப்பைகள்
நசுங்கிய கணத்தில்
முழுதும் இறந்து விழுந்தது பகல்
12 comments:
கவிதை மிக நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
ஒரு இரவின் வருகையை வேறெந்தத் தூரிகையும் இப்படித் தீட்டியதில்லை.
எனக்கும் அஸ்தமனப் பொழுதுகள் மனதுக்கு இனந்தெரியாத பாரமாக இருக்கும்.
அந்தப் பாரத்தை உணர்ந்தேன் இந்தக் கவிதையிலும்.கொஞ்சம் பயந்தேன்.
கவிதைகளுக்கென தனி வண்ணங்களிருக்கிறது ராகவன் உங்களிடம்.
கவிதை மிக நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/
வெகு அருமை வரிகளின் வர்ணம் அழகு:)
சரளமான மொழியையும்,கவிதை நடையையும் வியக்கிறேன் ராகவன்!
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கவிதை இலக்கிய நயமாய் இருக்கிறது.... என் போன்ற சாமானியர்களுக்கு புரிவது கஷ்டம் தான்...
அண்ணா
உங்களுக்கே உரித்தான் வரிகளின் வடிவில் கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு.
கவிதை நன்று
வேறொரு வலைப்பூவிலிருந்து இங்கு வந்தடைந்தேன் ...
ஆச்சிர்யப்படவைக்கின்றன உங்கள் சொல்லாளுமை..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
-புபேஷ்.
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
என் அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஜபமாலையின் பாசி மணிகள்!
அன்புடன்
ராகவன்
Post a Comment