Friday, September 11, 2009

இரண்டு கவிதைகள்

(கவிதை 1)

காத்திருப்பின்
கவனமற்று
தேங்கி கிடக்கிறேன்
 கழிவு நீராய்..

வேரூன்றிய
கால்களை
அரித்து
தின்கின்றது மரணம்

உடலெங்கும்
வலை பின்னி
உறுப்புகள் தின்ன
நகர்கிறது
பொழுதுகள்

கூடொடுங்கி
உயிர் ஒழுக
விரைத்து கிடந்தேன்
பிள்ளையற்ற
கிழவியின்
வற்றிய முலை காம்பென

யாருக்கும்
பயன் அற்று..

(கவிதை 2)

உனக்கும்
எனக்கும்
அவருக்கும்
இவருக்கும்
அதுக்கும்
இதுக்கும்
என
எல்லாம்
எல்லாருக்கும் தான்

துழாவிய போது
அகப்படவில்லை
எதுவுமே
யாருக்குமே..

3 comments:

butterfly Surya said...

இரண்டுமே அருமை.

ராகவன் said...

Thank you Butterfly Surya!!

இரசிகை said...

2-vathu
simply superb........!