Monday, September 14, 2009

அற்றது பற்றெனின்...

உறுப்புகளற்று
அம்மனமாய்
விழுந்துகிடந்தேன்
உன் மனப்புழுதியில்
அடையாளங்கள் ஏதுமற்று

பின் மண்டை
பிளந்து
மூளை அடுக்குகளுக்குள்
செருகிய நினைவுகளில்
”என் பெயர்
இல்லை”,
தூர எறி!

மயிர் முளைக்கும்
சத்தம்
மனம் அரற்றும்
ஒலி
செவிகள் தேவையில்லை
திருகிக் களை!

கோரைப்பல்
கொடும்பகை
குடல் கிழிக்கும்
குறுஞ்சிரிப்பு
ஆக மொத்தம் காணும்
கண்களை பிடுங்கு!

இலக்கியம்
தத்துவம்
இஸங்கள் ஏதுமின்றி
இயன்றவரை உண்மை
வாய்பூட்டு!
சாவி தொலை!

விந்து நிறைந்து
கனத்து தொங்கும்
விரைப்பை
கழற்றி வை!

யோனி உட்புக
உன் குறியை
மட்டும் விட்டு வை!

3 comments:

Thenammai Lakshmanan said...

ragavan
kavithaigalaivida ninavalaigal superb
thirumaalin pambu kavithai [poigai azwar] arumai
sila kavithagal vanmuraiyay irukirathu
overall fine
all the best

ராகவன் said...
This comment has been removed by a blog administrator.
ராகவன் said...

அன்பு தேனம்மா அவர்களுக்கு,

ஆயிரம் நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு. கவிதைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எந்த மெனக்கெடலும் இல்லாமல் எழுதியது. அதனால் இது வன்முறை சாத்தியமாய்ப்போனதில் அதில் உள்ள அறையும் நிஜம் மட்டுமே காரணமாய் இருக்க வேண்டும். என்னுடைய எல்லாக் கவிதைகளிலும் வன்முறை இருப்பதாக தெரியவில்லை, சில மென்முறை கவிதைகளும் உண்டு.

அன்புடன்,
ராகவன்