Thursday, October 15, 2009

மீட்சி...

உறுப்புகள்
சுருங்கத் தொடங்குகிறது

உரோமங்கள்
உள்புகுகின்றன

தோல் வெளுத்து
மிருதுவாகிறது

எலும்புகள்
குறுகி இளக்கமாகிறது

உடலில் இருந்து
பிசுபிசுப்பாய் திரவம் சுரக்கிறது

தொப்பூளில் இருந்து
கொடி வளர்கிறது

உடலைச்சுற்றி
சவ்வு பரவி மூடுகிறது

இருள் சுவர்களில்
நீர் நிறைந்து
மிதக்கிறது நான்

உந்தித் தள்ளி
வெளி வர உரம் வளர்க்கிறேன்.

6 comments:

காமராஜ் said...

நம்பிக்கை தானே ?
உங்களின் இடம் உங்களை வரவேற்கிறது.

மாதவராஜ் said...

ராகவன்!
மீண்டும் குழந்தையாக வேண்டும் என்கிற ஆசை யாருக்கு இருக்காது! தலைப்பு, கவிதையை மேலும் அற்புதமாக்குகிறது.
சரி, நண்பா.... யார் சுமப்பது?

மாதவராஜ் said...

ராகவன்!
serttingsல் போய் word verificationஐ எடுத்து விடுங்களேன். அது ஒரு தொந்தரவு.

ராகவன் said...

காமராஜ், மாதவராஜ் அவர்களுக்கு

நன்றிகள் பல...
மினுக்கட்டாம்பூச்சிகள் கூட நிலை விளக்காகும் உங்கள் இருவரின் உற்சாக குறிப்புகளில்.

அன்புடன்
ராகவன்

Anonymous said...

Happy Birthday Ragavan Iyyya Avargale!
Pallandu Nevir Vallga!

ராகவன் said...

Thank you for the wishes, but i could not see you as you are hiding....

however, Many a Thanks to you!!