Saturday, December 19, 2009

விரியச் சுருங்கும் உறவு...

மூனுமுறை சொல்லியாச்சு
தைமாசம் நாலாம் தேதி
அவுக போன திதி

வந்து திவசம் பண்ண
வணங்கவில்லை பயகளுக்கு

அக்கர சீமை போயி
ஆண்ட துரைமாருங்க
எப்போது வருவாய்ங்கன்னு
வாசலெங்கும், வழியெங்கும்
கண் நட்டு
காத்திருக்கு  தும்பைபூ
பூத்த காடு!

உசுரோட இருக்கும்போதே,
வராதவனுங்க
செத்தா திதியாவது திவசமாது!

அனாதப் பொனமாத்தான்
அவுசாரி நான் போவேன்!

உசுர பீய்ச்சிக் குடுத்த
பாசப் பெருமுலைச்சி
உள்ளுக்குள்ளே
அழுத மிச்சம்
ஊரெங்கும் கேவலாச்சு!

5 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்.மொழியின் varaiety அசத்துது.good!keep rocking!

நேரம் வாய்க்கிறபோது நம் தளம் வாங்க மக்கா.ஒரு விருது பகிரல்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு ராகவன்

பூங்குன்றன்.வே said...

//உசுரோட இருக்கும்போதே,
வராதவனுங்க
செத்தா திதியாவது திவசமாது!//


நிதர்சனம்..அருமை.

அன்புடன் அருணா said...

உண்மை முகத்தில் அறைகிறது.

கருவை பாலாஜி said...

இந்த கவிதையின் கரு உங்களின் அனுபவமோ..யென் யூகம் சரியா?